முத்தமிழின் சுவையோ கற்குழுலின் இசையோ
சொற்தொடரின் சுவையோ இது சொல்லில் அடங்கா
சொற்பனமோ!
காலை தென்றல் , கோடைகுளிர் , நீரோடை சத்தம்,
மழைக்காலச்சாரல்
இடையில் சின்னதோரு களிப்பு ஆஹா ! அது
மழலையரின் சிரிப்பு
முத்துக்கள் அற்ற முல்லையின் வாசம் முதுமையின்
பூரிப்பு
சிதர விட்டு செல்லும் சிறுப்புன்னகையும்
மலர விட்டு செல்லும் நல் உறவுகளை
கற்சிலையும் அழகுருமே கருமணி புன்னகையோடு
வடித்தால்
பிறப்பு என்பது ஒருமுறை
இறப்பு என்பது ஒருமுறை
களிப்புண்டு வாழ்வோம் வளம் கொண்ட வாழ்விற்கு
வழி தடையின்றி செல்வோம்
சினம் கொண்டு வீழ்வேனே கன நேர
புன்னகையிடு
மலர் போன்று மனம் வீசும்
நம் மானிடர் வாழ்வும்
எண்ணங்கள் அற்றாதோ இது
ஏற்றதாழ்வு அறியாததோ
பிண்டங்களாகும் நம் மானிடவாழ்க்கைக்கு
பல வண்ணங்களை அள்ளி தரும்
இப்புனைகை சுவாசம்

நன்றி
Ms. R. Rekha,
Senior Patient Care Assistant Nurse
Kauvery Hospital

may-poetry-2019