சுற்றுச்சூழல் பாதுகாப்பும் ஆரோக்கியமும்

by admin-blog-kh | August 19, 2025 1:17 pm

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது வெறும் பசுமை முயற்சி மட்டுமல்ல… அது நமது உடல்நலத்தின் அடிப்படையே!

உலக சுற்றுச்சூழல் தினத்தின்[1] இந்த ஆண்டின் கருப்பொருள் ‘பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்தல்’ (Combating Plastic Pollution) என்பது நமது ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. பிளாஸ்டிக் மாசுபாடு நமது காற்று, நீர் மற்றும் மண்ணில் கலந்து மைக்ரோபிளாஸ்டிக் துகள்களாக நமது உணவுச் சங்கிலியில் நுழைகிறது. இவை சுவாசக் கோளாறுகள், ஹார்மோன் சமநிலையின்மை[2] மற்றும் புற்றுநோய்[3] ஆபத்தை அதிகரிக்கின்றன.

சுற்றுச்சூழல் மாற்றமும் ஆரோக்கியமும் 

காலநிலை மாற்றம் உலகின் பல்வேறு பகுதிகளை வித்தியாசமாகப் பாதிக்கிறது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலை, நீர்வழிகளின் மாசுபாடு, காற்று மாசுபாடு[4] போன்றவை மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கணிசமாக அதிகரிக்கிறது. சுவாச நோய்கள்[5], இதயக் கோளாறுகள் மற்றும் சரும நோய்களுக்கான அனுமதிகள் – குறிப்பாகக் கோடைக்காலத்தில் 40 சதவிகிதம் வரை அதிகரிக்கின்றன.

உயிரினப் பன்முகத்தன்மை இழப்பு புதிய தொற்று நோய்களின் ஆபத்தை அதிகரிக்கிறது. இயற்கை வாழ்விடங்கள் அழிக்கப்படும்போது, காட்டு விலங்குகள் மனிதக் குடியிருப்புகளுக்கு அருகில் வருகின்றன. இதனால் புதிய நோய்கள் பரவும் ஆபத்து அதிகரிக்கிறது.

காவேரி மருத்துவமனையின் முக்கியமான பசுமை முயற்சிகள்

காவேரி மருத்துவமனை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவை நமது முக்கிய பசுமை முயற்சிகள்…

  1. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு (Renewable Energy): தற்போது நமது மொத்த ஆற்றல் தேவையில் 79 சதவிகித அளவைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலிலிருந்து பெறுகிறோம். இந்த ஆண்டு இறுதிக்குள் 100 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை அடைய உறுதிபூண்டுள்ளோம்.
  2. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை (Multi-layered plastic waste management): நாங்கள் பிளாஸ்டிக் கழிவுகளைத் தனித்தனியாகப் பிரித்து, சிறிய துண்டுகளாக அரைத்து சிமென்ட் நிறுவனத்துக்கு அனுப்புகிறோம். அங்கு அவை உலை எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு கழிவிலிருந்து ஆற்றலாக (Waste-to-Energy) மாற்றப்படுகின்றன.
  3. நீர் பாதுகாப்பு (Water Conservation): கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் (STP) சுத்திகரிக்கப்பட்ட நீரை கழிப்பறை மற்றும் மரங்கள், தோட்டங்களில் பயன்படுத்தி, புதிய நீர் ஆதாரங்களின் மீதான நமது சார்பைக் கணிசமாகக் குறைத்துள்ளோம்.
  4. மழைநீர் சேகரிப்பு (Rainwater Harvesting): நமது அனைத்து மருத்துவமனை வசதிகளும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. இது நிலத்தடி நீரை மீண்டும் நிரப்பவும், நிலையான நீர் மேலாண்மையை ஊக்குவிக்கவும் உதவுகிறது.
  5. சுற்றுச்சூழல் நட்பு குளிர்பதன வாயுக்கள் (Eco-friendly Refrigerants): புதிதாகக் கட்டப்படும் நமது மருத்துவமனைகளில் R-134A, R-410A மற்றும் R-32 போன்ற சுற்றுச்சூழல் நட்பு வாயுக்கள் பயன்படுத்தப்படும் குளிர்சாதன இயந்திரங்கள் பொருத்தப்படுகின்றன. தற்போதுள்ள மருத்துவமனைகளில் பழைய குளிர்சாதன இயந்திரங்களைப் புதிதாக மாற்றும்போதும் சுற்றுச்சூழல் நட்பு மாற்றுகளை நடைமுறைப்படுத்துகிறோம்.
Also Read: How to Create a Safe Environment for Seniors?[6]
  1. மரம் நடுதல் முயற்சி (Afforestation Initiative): திருச்சியில் 2 ஏக்கர் நிலத்தில் 2,200 உள்நாட்டு மரங்களை வளர்த்து வருகிறோம். இது உயிரினப் பன்முகத்தன்மையை அதிகரிக்கவும், பசுமை அடர்த்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த இடம் நீண்டகால வளர்ச்சியை உறுதிசெய்ய தீவிரமாகப் பராமரிக்கப்படுகிறது.
  2. கரிம கழிவு உரமாக்கல் (Organic Waste Composting): நமது மருத்துவமனைகளிலிருந்து வரும் அனைத்து உணவு மற்றும் பழக் கழிவுகளையும் நமது உரமாக்கல் பகுதியில் செயலாக்குகிறோம். இதன் விளைவாகக் கிடைக்கப் பெறும் கரிம உரங்கள், தோட்டங்கள் மற்றும் நந்தவனங்களை வளப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.
  3. ஆற்றல் திறன் கொண்ட மின்சாதனங்கள் (Energy-efficient Electrical Fixtures): புதிய திட்டங்களில் LED விளக்குகள் மற்றும் BLDC (Brushless Direct Current) விசிறிகளை மட்டுமே பயன்படுத்துகிறோம். தற்போதுள்ள வசதிகளில், பழைய சாதனங்களைப் பராமரிப்பின்போது ஆற்றல் திறன் கொண்ட மாற்றுகளுடன் முறையாக மாற்றுகிறோம்.
  4. உள் போக்குவரத்துக்கு மின்சார வாகனங்கள் (Electric Vehicles for Internal Transport): மருத்துவமனை வளாகத்துக்குள் நோயாளிகள் மற்றும் உடன் வருபவர்களைக் கொண்டு செல்ல பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்களைப் பயன்படுத்துகிறோம். இது கார்பன் உமிழ்வைக் குறைத்து சுற்றுச்சூழல் நட்பு நடமாட்டத்தை மேம்படுத்துகிறது.
  5. ஸ்மார்ட் மருத்துவமனை உள்கட்டமைப்பு: இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IoT) மற்றும் கட்டிட மேலாண்மை அமைப்புகளின் (BMS) வாயிலாக, பயன்பாட்டு உபகரணங்களின் மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு, தேவைக்கேற்ற பயன்பாடு மற்றும் கட்டுப்பாட்டை உறுதி செய்கிறோம். இவை மின் விநியோகம், நீர் விநியோகம், குளிர்சாதன எந்திரங்கள், விளக்குகள் உள்ளிட்ட முக்கியமான பயன்பாட்டு உபகரணங்களின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டைச் செயல்படுத்துகின்றன. குறிப்பாக மருத்துவமனைகளில் முக்கிய ஆற்றல் நுகர்வு பயன்பாட்டு உபகரணங்களில் முதன்மையானது குளிர்சாதன எந்திரங்கள்(HVAC). எனவே தேவையற்ற ஆற்றல் விரயத்தை குறைப்பதற்காக, பருவக்காலத்திற்கேற்ற வெப்பநிலை (Seasonal Settings) அமைப்புகளைப் பராமரித்து வருகிறோம்.

தனிநபர் செயல்பாடுகள் 

ஒவ்வொரு தனிநபரும் சிறிய செயல்பாடுகள் மூலம் பெரிய மாற்றங்களைக் கொண்டு வர முடியும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைத் தவிர்த்தல், பொதுப் போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்துதல், நீர் மற்றும் ஆற்றல் சேமிப்பு, மறுசுழற்சி, மறுபயன்பாடு ஆகியவை எளிய – ஆனால், பயனுள்ள நடவடிக்கைகள். இதேபோல குளிர்சாதனங்களை 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலேயே பயன்படுத்துவதும் சூழலுக்கு உகந்தது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச் செல்லும் மிகப்பெரிய பரிசு. இதுபோன்ற  பசுமை முயற்சிகள் மூலம் ஆரோக்கியமான சமுதாயமும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலும் சாத்தியமாகும்.

 

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைத் தவிர்த்தல், பொதுப் போக்குவரத்துப் பயன்படுத்துதல், நீர் மற்றும் ஆற்றல் சேமிப்பு, மறுசுழற்சி, மறுபயன்பாடு, குளிர்சாதனங்களை 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பயன்படுத்துதல் ஆகியவை நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய பயனுள்ள நடவடிக்கைகள்!

 

ராம்குமார். ஜெ
பொது மேலாளர்உள்கட்டமைப்பு மேலாண்மை
காவேரி மருத்துவமனை[7]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Vadapalani & Radial Road), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Vadapalani – 044 4000 6000 • Chennai Radial Road – 044 40504050 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. உலக சுற்றுச்சூழல் தினத்தின்: https://youtu.be/sjbkbwcWuWE?si=4_VXT0nwMBuh-9Eg
  2. ஹார்மோன் சமநிலையின்மை: https://www.kauveryhospital.com/blog/endocrinology/hormonal-imbalances-and-how-to-correct-them/
  3. புற்றுநோய்: https://www.kauveryhospital.com/centers-of-excellence-and-specialties/oncology/
  4. காற்று மாசுபாடு: https://www.kauveryhospital.com/nightingale/impact-of-air-pollution-on-human-health-v1i9/
  5. சுவாச நோய்கள்: https://www.kauveryhospital.com/news-events/june-respiratory-diseases/
  6. How to Create a Safe Environment for Seniors?: https://www.kauveryhospital.com/blog/geriatrics/how-to-create-a-safe-environment-for-seniors/
  7. காவேரி மருத்துவமனை: https://www.kauveryhospital.com/

Source URL: https://www.kauveryhospital.com/blog/tamil-articles/environmental-protection-and-health/