இதய தாளக் கோளாறுகள் ஏன்? எப்படி?

by admin-blog-kh | August 26, 2025 12:08 pm

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 3-9 தேதிகளில் பின்பற்றப்படும் உலக இதய தாள வாரம் (World Heart Rhythm Week), இதய தாளக் கோளாறுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. நம் இதயம் ஒரு நிமிடத்துக்கு
60 முதல் 100 முறை வரை சீராக துடிக்க வேண்டும். இந்த இயல்பான தாளத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அது இதய தாளக் கோளாறு (Heart Rhythm Disorder[1]) எனப்படுகிறது. இந்தியாவில் 2017-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி, மொத்த மரணங்களில் 26.6 சதவிகிதம் இதய நோய்களால் ஏற்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை இதய தாளக் கோளாறுகளுடன் தொடர்புடையவை. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம், நமது வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மன அழுத்தம்[2], மற்றும் சரியான விழிப்புணர்வின்மை ஆகியவை.

இதய மின்னியல் நிபுணத்துவம்

இதய மின்னியல் நிபுணத்துவம் (Cardiac Electrophysiology[3]) என்பது இதயத்தின் மின்சார அமைப்பை மட்டுமே கையாளும் ஒரு சிறப்பான மருத்துவப் பிரிவாகும். பொதுவான இதய மருத்துவம் (General Cardiology[4]) இதயத்தின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வதாக இருந்தால், இதய மின்னியல் நிபுணத்துவம் குறிப்பாக இதயத்தின் மின்சார சமிக்ஞைகள் மற்றும் அதன் தாளத்தை மட்டுமே கவனித்துக் கொள்கிறது.

நம் இதயத்தில் உள்ள இயல்பான மின்சார அமைப்பு, இதயத்தின் மேல் பகுதியில் இருந்து கீழ் பகுதி வரை ஒரு நொடிக்கு ஒரு முறை மின்சார அதிர்வுகளை அனுப்புகிறது. இந்த அதிர்வுகள்தாம் இதய தசைகளைச் சுருங்க வைத்து, ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்துகின்றன. இந்த செயல்முறையில் ஏதேனும் தடையோ, மாற்றமோ ஏற்பட்டால், இதய தாளக் கோளாறு உண்டாகக் கூடும்.

பொதுவான இதய தாளக் கோளாறுகள் 

ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (Atrial Fibrillation[5]

இதய தாளக் கோளாறுகளில் மிகவும் பொதுவானது ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் ஆகும். இதில் இதயத்தின் மேல் அறைகள் மிக வேகமாகவும், ஒழுங்கற்ற முறையிலும் துடிக்கும். இந்தியாவில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, மக்கள் தொகையில் 0.1 முதல் 5.1 சதவிகிதம் வரை இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறிப்பாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகம் பாதிக்கிறது.

ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் மருத்துவத்தில், ‘CHA2DS2-VASc’ மதிப்பெண் மூலம் ஸ்ட்ரோக்[6] அபாயம் மதிப்பிடப்படுகிறது. இந்த மதிப்பெண் நோயாளியின் வயது, உயர் ரத்த அழுத்தம்[7], நீரிழிவு[8], இதயச் செயலிழப்பு[9], முந்தைய ஸ்ட்ரோக் வரலாறு போன்ற காரணிகளைக் கணக்கிட்டு, அதற்கேற்ற ரத்த உறைதல் தடுப்பு மருந்துகள் (Anticoagulants) கொடுக்கப்படுகின்றன.

Also Read: Do not ignore these signs of a cardiac emergency[10]

சூப்பர்வென்ட்ரிகுலர் டேக்கிகார்டியா (Supraventricular Tachycardia) 

இது இதயத்தின் மேல் பகுதியில் இருந்து தோன்றும் வேகமான இதயத் துடிப்பு. இதில் இதயம் நிமிடத்துக்கு 150 முதல் 220 முறை வரை துடிக்கும். இளம் வயதினரை அதிகம் பாதிக்கும் இந்தப் பிரச்னை, திடீரென்று ஆரம்பித்து திடீரென்று நின்றுவிடும் தன்மை கொண்டது.

வென்ட்ரிகுலர் டேக்கிகார்டியா (Ventricular Tachycardia) 

இதயத்தின் கீழ் அறைகளில் இருந்து தோன்றும் வேகமான இதயத் துடிப்பு. இது மிகவும் ஆபத்தான நிலை. ஏனெனில், இது இதயச் செயலிழப்பு அல்லது திடீர் மரணத்துக்கும் வழிவகுக்கலாம்.

பிரேடிகார்டியா (Bradycardia[11]

இதில் இதயத் துடிப்பு மிகவும் மெதுவாக இருக்கும் – நிமிடத்துக்கு 60 முறைக்கும் குறைவாக. இது குறிப்பாக வயதானவர்களிடமும், இதய நோய் உள்ளவர்களிடமும் காணப்படுகிறது.

இந்தியாவில் இதய தாளக் கோளாறுகளின் அதிகரிப்பு 

இந்தியாவில் இதய தாளக் கோளாறுகள் அதிகரித்து வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. உலக நோய்ச் சுமை ஆய்வின் படி (Global Burden of Disease Study), இந்தியாவில் இதய நோய்களால் மரணம் அடையும் விகிதம் ஒரு லட்சம் மக்களுக்கு 272 ஆகும், இது உலக சராசரியான 235-ஐ விடக் கூடுதல்.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு[12] கோளாறுகள், மற்றும் இதய நோய்கள் இந்தியர்களில் இதய தாளக் கோளாறுகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. 40 வயது தாண்டியவர்களுக்கு ஆபத்து அதிகம்.

இதயப் படபடப்பு (Palpitations[13]) – எப்போது கவலைப்பட வேண்டும்

பலர் இதயப் படபடப்பை உணரும்போது அதை வெறும் பதற்றம் அல்லது மன அழுத்தம் என்று நினைத்து அலட்சியம் செய்கின்றனர். ஆனால், எல்லா படபடப்புகளும் ஆபத்தற்றவை அல்ல. ஆகவே, கவனம் வேண்டும்.

ஆபத்தற்ற இதயத் துடிப்புகள் 

உடற்பயிற்சி[14], உணர்ச்சி வேகம், காஃபின் பானங்கள் அருந்திய பின், அல்லது பதற்றமான நேரங்களில் இதயத் துடிப்பு அதிகரிப்பது இயல்பானது. இவை பொதுவாகச் சில நிமிடங்களில் சாதாரண நிலைக்குத் திரும்பிவிடும்.

கவனிக்க வேண்டிய படபடப்புகள் 

பல மக்கள் படபடப்பை ‘பதற்றம்தான்’ என்று எண்ணி அலட்சியம் செய்கின்றனர். அது தவறான அணுகுமுறை. பின்வரும் நிலைகளில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்[15]:

ஒழுங்கற்ற இதயத் துடிப்பு (Irregular Heartbeat) – இதயம் ஒரே நேரத்தில் வேகமாகவும், மெதுவாகவும், தவிர்த்தும் துடிப்பது.

Also Read: The Role of a Cardiac Electrophysiologist[16]

நவீன கண்டறிதல் முறைகள் 

மின்னோட்ட இதய வரைபடம் (ECG – Electrocardiogram) 

இது மிக அடிப்படையான – ஆனால், மிகவும் பயனுள்ள பரிசோதனை. இதயத்தின் மின்சாரச் செயல்பாடுகளை அளவிட்டு, அதன் அடிப்படையில் இதய தாளக் கோளாறுகளைக் கண்டறிய முடியும்.

ஹால்டர் மானிட்டர் (Holter Monitor) 

இது 24 மணி நேரம் அல்லது அதற்கு மேல் இதயத் துடிப்பைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் சாதனம். இது மார்பில் ஒட்டப்பட்டு, அன்றாட வேலைகளைச் செய்யும்போது இதயத்தின் நிலையைப் பதிவு செய்கிறது.

இவென்ட் ரெக்கார்டர் (Event Recorder) 

இது ஒரு சிறிய சாதனம். இதயத் துடிப்பு ஏற்படும்போது பொத்தானை அழுத்தி அந்த நேரத்தில் இதயத்தின் நிலையைப் பதிவு செய்ய முடியும்.

எக்கோ கார்டியோகிராம் (Echocardiogram[17])

இது அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்பாட்டைப் பார்க்க உதவுகிறது.

மின்னியல் ஆய்வு (Electrophysiology Study)  

எலக்ட்ரோபிசியாலஜி ஸ்டடி அல்லது மின்னியல் ஆய்வு என்பது இதய தாளக் கோளாறுகளைக் கண்டறியப் பயன்படும் ஒரு சிறப்பான பரிசோதனை முறையாகும். இந்தப் பரிசோதனையில் மிகவும் மெல்லிய கம்பிகள் (Catheters) ரத்த நாளங்கள் வழியாக இதயத்துக்குள் செலுத்தப்படும்.

இந்தக் கம்பிகள் இதயத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மின்சாரச் செயல்பாடுகளை மிகவும் துல்லியமாக அளவிடுகின்றன. மேலும், கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் இதய தாளக் கோளாறுகளைச் செயற்கையாக உருவாக்கி, அதன் ஆரம்ப இடத்தையும் பரவும் முறையையும் கண்டறிய முடியும்.

இந்தப் பரிசோதனை 2 முதல் 4 மணி நேரம் வரை நீடிக்கும். இது பொதுவாக வலியற்ற முறையாக இருந்தாலும், லேசான அசௌகரியம் ஏற்படலாம். இந்தப் பரிசோதனையின் மூலம் கிடைக்கும் தகவல்கள் மிகவும் துல்லியமாக உள்ளதால், சிகிச்சை முறையைத் தீர்மானிக்க மிகவும் உதவியாக இருக்கிறது.

சிகிச்சை முறைகள் 

மருந்துகள் மூலம் சிகிச்சை 

பெரும்பாலான இதய தாளக் கோளாறுகளுக்கு மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்க முடியும். இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகள், இதய தாளத்தைச் சீராக்கும் மருந்துகள், ரத்த உறைதலைத் தடுக்கும் மருந்துகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

கார்டியாக் அப்லேஷன் (Cardiac Ablation) 

இது ஒரு நவீன சிகிச்சை முறை. இதில் இதயத்தில் உள்ள தவறான மின்சார சமிக்ஞைகளை உருவாக்கும் சிறிய பகுதியை வெப்பம் அல்லது குளிர்ச்சி மூலம் அழிக்கப்படுகிறது. இந்தச் சிகிச்சை முறை மிகவும் துல்லியமானது மற்றும் 90 சதவிகிதம் வரை வெற்றிகரமானது.

அப்லேஷன் சிகிச்சை பொதுவாக கீழ்க்கண்ட நிலைகளில் பரிந்துரைக்கப்படுகிறது…மருந்துகள் பலனளிக்காத நிலையில், நோயாளி மருந்துகளைத் தவிர்க்க விரும்பும் நிலையில், இளம் நோயாளிகளுக்கு நீண்டகால தீர்வு தேவைப்படும்போது, அல்லது ஆபத்தான இதய தாளக் கோளாறுகள் உள்ள நிலையில்.

பேஸ்மேக்கர் (Pacemaker[18]) மற்றும் டிஃபிப்ரிலேட்டர் (Defibrillator[19])

பேஸ்மேக்கர் பெரும்பாலும் பிரேடிகார்டியா (மெதுவான இதயத் துடிப்பு) அல்லது
AV பிளாக்குகள் (Atrioventricular Block – இதயத்தின் மேல் மற்றும் கீழ் பகுதிகளுக்கு இடையே மின்சார சமிக்ஞை தடை) உள்ளவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. இது ஒரு சிறிய சாதனம். இது இதயத்துக்குத் தேவையான மின்சார சமிக்ஞைகளை அனுப்பி இதயத் துடிப்பைச் சீராக வைத்திருக்கிறது.

உயிருக்கு ஆபத்தான வென்ட்ரிகுலர் அரித்மியாக்கள் (Life-threatening Ventricular Arrhythmias – VT/VF) உள்ள நோயாளிகளைப் பாதுகாக்க இம்பிளான்டபிள் கார்டியோவர்ட்டர் டிஃபிப்ரிலேட்டர் (ICD) பொருத்தப்படுகிறது. இது ஆபத்தான இதயத் துடிப்பைக் கண்டறிந்து உடனடியாக மின்அதிர்ச்சி கொடுத்து இதயத்தைச் சாதாரண நிலைக்குக் கொண்டு வருகிறது.

மருத்துவத்தில் நவீன முன்னேற்றங்கள் 

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பயன்படுத்தி இதய தாளக் கோளாறுகளை முன்கூட்டியே கண்டறியும் முறைகள் வந்துள்ளன.

நவீன அப்லேஷன் தொழில்நுட்பம், ரோபோடிக் சர்ஜரி (Robotic Surgery[20]), மரபணு சிகிச்சை (Gene Therapy) ஆகியவை இந்தத் துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக ஒரே அமர்வில் பல இதய தாளக் கோளாறுகளுக்குச் சிகிச்சை அளிக்கும் முறைகள் வந்துள்ளன.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தைராய்டு கோளாறுகள், இதய நோய்கள் ஆகியவை இந்தியர்களின் இதய தாளக் கோளாறுகளுக்கு முக்கிய காரணங்கள்.

 

Dr. தீப் சந்த் ராஜா. எஸ்[21]
MBBS, MD(Internal Medicine), DM(Cardiology), DNB(Cardiology), FNB (Interventional Cardiology), Advanced Clinical Cardiac Electrophysiology, Canberra Hospitals, Australia
இதய மருத்துவர் & மருத்துவத் தலைவர்
இதய மின்னியல் பிரிவு,காவேரி மருத்துவமனை
சென்னை – ஆழ்வார்பேட்டை[22]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Vadapalani & Radial Road), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Vadapalani – 044 4000 6000 • Chennai Radial Road – 044 40504050 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. Heart Rhythm Disorder: https://youtu.be/SmIr6GkwatI?si=ixuxQj8U_vHK05hJ
  2. மன அழுத்தம்: https://www.kauveryhospital.com/blog/lifestyle/7-ways-by-which-stress-harms-your-health/
  3. Cardiac Electrophysiology: https://www.kauveryhospital.com/centers-of-excellence-and-specialties/kauvery-heart-rhythm-services/
  4. General Cardiology: https://www.kauveryhospital.com/centers-of-excellence-and-specialties/cardiology-services/
  5. (Atrial Fibrillation: https://youtu.be/SmOJkciw8Oc?si=AEWKNFuLOmFhGwcj
  6. ஸ்ட்ரோக்: https://www.kauveryhospital.com/blog/neurology/be-fast-on-managing-stroke/
  7. உயர் ரத்த அழுத்தம்: https://youtu.be/eTQNiaT7UVc?si=3oWB4wtMO1XNGLgk
  8. நீரிழிவு: https://www.kauveryhospital.com/blog/family-and-general-medicine/essential-knowledge-a-to-z-of-diabetes/
  9. இதயச் செயலிழப்பு: https://www.kauveryhospital.com/blog/heart-health/causes-and-types-of-congestive-heart-failure/
  10. Do not ignore these signs of a cardiac emergency: https://www.kauveryhospital.com/blog/heart-health/do-not-ignore-these-signs-of-a-cardiac-emergency/
  11. Bradycardia: https://youtu.be/mUK0BYzAoxg?si=XoNU5qyWGg3XlY_s
  12. தைராய்டு: https://www.kauveryhospital.com/blog/endocrinology/what-is-thyroid-and-how-does-it-function/
  13. Palpitations: https://youtu.be/Bc1IuXKA42A?si=MmeJ5qHIkiR_OI1j
  14. உடற்பயிற்சி: https://www.kauveryhospital.com/blog/lifestyle/what-are-the-benefits-of-doing-cardio-exercises-like-running/
  15. மருத்துவரை அணுக வேண்டும்: https://www.kauveryhospital.com/doctors/trichy-heartcity/cardiology/dr-t-joseph/
  16. The Role of a Cardiac Electrophysiologist: https://www.kauveryhospital.com/blog/heart-health/the-role-of-a-cardiac-electrophysiologist/
  17. Echocardiogram: https://www.kauveryhospital.com/international-patients/cardiology-services/
  18. Pacemaker: https://youtu.be/yHbodMIz1lk?si=bAsEt3Ypooyd_5XT
  19. Defibrillator: https://youtu.be/ADucXCGOfl8?si=E3CQR5Onv36OxOaO
  20. Robotic Surgery: https://www.kauveryhospital.com/blog/heart-health/revolutionizing-cardiac-care-robotic-surgery-in-cardiology/
  21. Dr. தீப் சந்த் ராஜா. எஸ்: https://www.kauveryhospital.com/doctors/chennai/cardiology/dr-deep-chandh-raja-s/
  22. சென்னை – ஆழ்வார்பேட்டை: https://www.kauveryhospital.com/our-locations/chennai/

Source URL: https://www.kauveryhospital.com/blog/tamil-articles/why-and-how-do-heart-rhythm-disorders-occur/