பெற்றோர் நலமாக இருந்தால்தான் குழந்தை நலமாக வளரும்!

by admin-blog-kh | June 4, 2026 10:54 am

குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோரின் பங்கை உலகம் கொண்டாடும் நாள் இது. ஆனால், குழந்தையின் நலனுக்காக ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர், தங்கள் சொந்த மனநலத்தைக் கவனிக்கிறார்களா? பெற்றோரின் மனநலம் என்பது ‘சுயநலம்’ அல்ல… அதுவே குழந்தையின் எதிர்கால நல்வாழ்வுக்கான அடித்தளம்!

வீடுதான் முதல் வகுப்பறை 

குழந்தைகள் நாம் சொல்வதைக் கேட்டு மட்டும் கற்றுக்கொள்வதில்லை.  நாம் செய்வதைப் பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறார்கள். மன அழுத்தத்தை எப்படிக் கையாள்வது, மற்றவர்களுடன் எப்படிப் பழகுவது, உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது – இவை அனைத்தையும் குழந்தைகள் பெற்றோரைப் பார்த்தே பதிவு செய்கின்றன. மனநலத்துடன் இருக்கும் பெற்றோர் பாதுகாப்பான, அன்பான, ஆதரவான சூழலை வழங்குவார்கள். ஆனால், மன அழுத்தத்தில் இருக்கும் பெற்றோரோ குழந்தைக்கு மிகவும் தேவையான தருணத்தில் உணர்வு ரீதியாகக் கிடைக்காமல் போவார்கள்.

பெற்றோரின் சிகிச்சையளிக்கப்படாத பதற்றம்[1], மனச்சோர்வு[2], நாள்பட்ட மன அழுத்தம் ஆகியவற்றைக் குழந்தைகள் அமைதியாகக் கவனிக்கிறார்கள், உள்வாங்குகிறார்கள். இது குழந்தைக்கு ஆரம்பகால பதற்றம், உணர்வுத் தூண்டுதல்களுக்கு அதிக உணர்திறன், வீட்டில் பாதுகாப்பின்மை உணர்வு ஆகியவற்றை ஏற்படுத்தலாம்.

குழந்தைகள் வாயால் சொல்வதில்லைநடத்தையில் காட்டுகிறார்கள் 

மன அழுத்தத்தை வார்த்தைகளில் சொல்லும் திறன் குழந்தைகளுக்கு இருக்காது. அவர்களின் அழுத்தம் நடத்தை மாற்றங்களாகவும், உடல் அறிகுறிகளாகவும் வெளிப்படும். அதிக கோபம், பிடிவாதம், அடிக்கடி அழுவது, பெற்றோரை விடாமல் ஒட்டிக்கொள்வது, படிப்பில் கவனக் குறைவு, தூக்கமின்மை, பள்ளி செல்ல மறுப்பது – இவை நடத்தை அறிகுறிகள். மருத்துவ காரணமின்றி வரும் உடல் வலி, அடிக்கடி வயிற்று வலி, வாந்தி – இவை உடல் மூலம் வெளிப்படும் மன அழுத்த அறிகுறிகள் (Somatization).

நல்லெண்ணத்துடன் செய்யும் தவறுகள் 

பல பெற்றோர் நல்ல நோக்கத்துடன் செய்யும் சில செயல்கள் குழந்தையின் மனநலத்தை அறியாமலேயே பாதிக்கின்றன. தொடர்ச்சியான குறை கூறுதல் – சாதனைகளைப் புகழாமல் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டுவது தன்னம்பிக்கையை அழிக்கும். நண்பர்கள் அல்லது உடன்பிறப்புகளுடன் ஒப்பிடுவது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும்.

Also Read: ஆரோக்கியம் உங்கள் கையில்தான் இருக்கிறது… ஆனால், அந்தக் கையில் எப்போதும் போன் இருக்கிறது![3]

அதிக பாதுகாப்பு – ஒவ்வொரு கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றுவது சுயமாகப் பிரச்னை தீர்க்கும் திறனை வளரவிடாமல் தடுக்கும். கடுமையும் தளர்வும் மாறி மாறி வருவது எல்லைகளைப் புரிந்துகொள்வதில் குழப்பத்தை ஏற்படுத்தும். குழந்தையின் உணர்வுகளை ‘ஓவரா சொல்றே’ என்று நிராகரிப்பது எதிர்காலத்தில் அவர்கள் எந்தப் பிரச்னையையும் பகிர்ந்துகொள்வதைத் தடுக்கும். மதிப்பெண் அழுத்தம் தோல்வி பயத்தையும் உணர்வுச் சோர்வையும் உருவாக்கும்.

டிஜிட்டல் யுகத்தில் பெற்றோரின் சவால் 

கல்வியும் சமூக உறவுகளும் டிஜிட்டல் தளத்தில் இயங்கும் இன்றைய உலகில், ஸ்கிரீன் நேரத்தை முழுமையாகத் தடுப்பது சாத்தியமில்லை[4]. தண்டனையாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கண் பாதிப்பு, சைபர் புல்லியிங், போதைத்தன்மை போன்ற ஆபத்துகளை விளக்கிச் சொல்ல வேண்டும். முக்கியமாக, பெற்றோரே தங்கள் ஸ்கிரீன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி முன்மாதிரியாக இருக்க வேண்டும். சாப்பிடும்போது போன் வேண்டாம், படுக்கையறையில் டிவி வேண்டாம், நேரடிப் பேச்சுக்கும் வெளிப்புற விளையாட்டுக்கும் முன்னுரிமை தர வேண்டும்[5].

உணர்வுத் தாங்கு திறனை எப்படிக் கட்டமைப்பது

குழந்தையின் பிரச்னைகளை (ஆசிரியர், நண்பர்கள், சமூக ஊடகம் தொடர்பானவை) உடனடி தீர்ப்போ, தலையீடோ இன்றி பொறுமையாகக் கேளுங்கள். ‘நீ வருத்தப்படுறது புரியுது’, ‘நான் கேக்கிறேன் சொல்லு’ என்பது போன்ற வார்த்தைகள் பாதுகாப்பான உணர்வுச் சூழலை உருவாக்கும். பெற்றோர் தங்கள் சொந்தக் குழந்தைப் பருவ அனுபவங்களையும், எதிர்கொண்ட சவால்களையும் பகிர்ந்துகொள்ளலாம்.

போராட்டம் என்பது வாழ்க்கையின் இயல்பான பகுதி என்று குழந்தை புரிந்துகொள்ளும். ஒவ்வொரு பிரச்னையையும் தீர்த்துவைப்பதற்குப் பதிலாக, ‘நீ என்ன செய்யலாம்னு நினைக்கிறே?’ என்று கேளுங்கள். அதனால் பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் வளரும், எதிர்காலப் பதற்றத்தைத் தடுக்கும்.

குழந்தையை நலமாக வளர்க்க, முதலில் பெற்றோர் நலமாக இருக்க வேண்டும். இதுவே குழந்தை வளர்ப்பின் ஆரம்பப் புள்ளி!

குழந்தைகளின் முதல் வகுப்பறை வீடுதான். பெற்றோரின் மனநலமே குழந்தையின் உணர்வு வளர்ச்சியை நிர்ணயிக்கிறது. மன அழுத்தமுள்ள பெற்றோரின் குழந்தைகள் கண்ணுக்குத் தெரியாமலே பாதிக்கப்படுகின்றனர்!

 

Dr. S. தஸ்னிம் பேகம் MBBS, MD(Psychiatry)[6]
மனநல மருத்துவர்
மா காவேரி மருத்துவமனைதிருச்சி[7]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. பதற்றம்: https://www.kauveryhospital.com/blog/psychiatry/what-is-generalized-anxiety-disorder/
  2. மனச்சோர்வு: https://www.kauveryhospital.com/blog/psychiatry/recognizing-symptoms-and-treating-clinical-depression/
  3. ஆரோக்கியம் உங்கள் கையில்தான் இருக்கிறது… ஆனால், அந்தக் கையில் எப்போதும் போன் இருக்கிறது!: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/your-health-is-in-your-hands-but-those-hands-are-always-holding-a-phone/
  4. ஸ்கிரீன் நேரத்தை முழுமையாகத் தடுப்பது சாத்தியமில்லை: https://www.kauveryhospital.com/blog/paediatrics/the-screen-time-trap-what-every-parent-needs-to-know/
  5. நேரடிப் பேச்சுக்கும் வெளிப்புற விளையாட்டுக்கும் முன்னுரிமை தர வேண்டும்: https://www.kauveryhospital.com/blog/lifestyle/effect-of-technology-on-children/
  6. Dr. S. தஸ்னிம் பேகம் MBBS, MD(Psychiatry): https://www.kauveryhospital.com/doctors/maa-kauvery-trichy/psychiatry/dr-s-thasnim-begam/
  7. மா காவேரி மருத்துவமனைதிருச்சி: https://www.kauveryhospital.com/maa-kauvery-trichy/women-children-hospital/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/a-child-will-grow-up-healthy-only-if-the-parents-are-healthy/