நேராக நடக்க ஒரு புதிய வாய்ப்பு!

by admin-blog-kh | January 6, 2026 12:16 pm

முதுகெலும்புப் பிரச்னைகளால் அவதிப்படுபவர்களுக்கு நவீன அறுவை சிகிச்சை முறைகள் மூலம் வலியற்ற வாழ்க்கை சாத்தியம். சிறிய துளை மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் விரைவான குணமடைதலை உறுதி செய்கின்றன.

‘டாக்டர், என்னால் நிமிர்ந்து நடக்கவே முடியவில்லை. இடுப்பில் இருந்து கால் வரை மின்சாரம் பாய்வது போல வலி இருக்கிறது’ – முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்களை[1] சந்திக்கும் பெரும்பாலான நோயாளிகளின் முதல் வார்த்தைகள் இவைதாம். உடலின் தூணாக விளங்கும் முதுகெலும்பு பாதிக்கப்படும்போது, வாழ்க்கையே நிலைகுலைந்து போகிறது.

முதுகெலும்பின் முக்கியத்துவம் 

நம் உடலின் மையத்தூண் முதுகெலும்பு. 33 எலும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கப்பட்டு, அவற்றுக்கு இடையில் குஷன் போல் டிஸ்க்குகள் அமைந்திருக்கின்றன. இந்த அமைப்புதான் நமக்கு நேராக நிற்கவும், குனியவும், திரும்பவும் உதவுகிறது. முதுகெலும்புக்குள் பாதுகாப்பாக அமைந்திருக்கும் தண்டுவடம், மூளையில் இருந்து உடல் முழுவதும் சிக்னல்களை அனுப்பும் முக்கியமான பாதையாக செயல்படுகிறது.

இன்றைய வாழ்க்கைமுறையில் நீண்ட நேரம் கணினி முன் உட்கார்ந்திருப்பது, தவறான நிலையில் அமர்வது[2], உடற்பயிற்சியின்மை, அதிக உடல் எடை போன்ற காரணங்களால் முதுகெலும்புப் பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. 40 வயதைக் கடந்தவர்களில் 60 சதவிகிதம் பேர் ஏதாவது ஒரு வகையான முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எப்போது அறுவை சிகிச்சை தேவை

‘முதுகுவலி[3] வந்தால் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பது தவறான எண்ணம்.

டிஸ்க் வெளியே தள்ளிக்கொண்டு நரம்புகளை அழுத்தும்போது, முதுகெலும்பு நழுவும்போது, கட்டிகள் இருக்கும்போது, விபத்தால் முதுகெலும்பு உடையும்போது மட்டுமே அறுவை சிகிச்சை அவசியம். கால்களில் சக்தி குறைதல், நடக்க முடியாத நிலை, சிறுநீர் கட்டுப்பாடின்மை[4] போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.

Also Read: Myths of Spinal Surgery[5]

நவீன சிகிச்சை முறைகள் 

முன்பெல்லாம் முதுகெலும்பு அறுவை சிகிச்சை[6] என்றாலே பெரிய வெட்டு, அதிக ரத்தப்போக்கு, குணமடைவதற்கு நீண்ட காலம் என்று பயப்படுவார்கள். இப்போது அந்த நிலை மாறிவிட்டது. சிறிய துளை மூலம் எண்டோஸ்கோபியைப் பயன்படுத்தி செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன[7].

மைக்ரோஸ்கோபிக் டிஸ்கெக்டமி, எண்டோஸ்கோபிக் ஸ்பைன் சர்ஜரி, மினிமல் இன்வேசிவ்[8] ஃபியூஷன் போன்ற நவீன முறைகளில் வெறும் ஒரு செ.மீ அளவிலான துளை மூலமாகவே அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதனால் தசைகள் பாதிக்கப்படுவதில்லை, ரத்தப்போக்கு குறைவு, வலி குறைவு, மருத்துவமனையில் தங்கும் நாட்கள் குறைவு.

ரோபோடிக் ஸ்பைன் சர்ஜரி[9] போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் மிகவும் துல்லியமாக அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது. 3டி இமேஜிங் மூலம் முதுகெலும்பின் சரியான நிலையை பார்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குணமடைதல் காலம் 

நவீன அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு பெரும்பாலான நோயாளிகள் மறுநாளே நடக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இரண்டு நாட்களில் வீடு திரும்பலாம். ஒரு மாதத்தில் அன்றாட வேலைகளை செய்ய முடியும். முறையான பிசியோதெரபி பயிற்சிகள் மூலம் முழுமையாக குணமடைய முடியும்.

முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு சரியான உடற்பயிற்சி முறைகளைக் கற்றுக்கொள்வது அவசியம். கோர் தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள், சரியான உடல்நிலை பராமரிப்பு போன்றவை மீண்டும் பிரச்னை வராமல் தடுக்கும்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் முதுகெலும்பு அறுவை சிகிச்சைகள் இப்போது மிகவும் பாதுகாப்பானதாக மாறியுள்ளன. சரியான நேரத்தில் சரியான சிகிச்சை பெற்றால், வலியற்ற வாழ்க்கை நிச்சயம் சாத்தியமே!

 

முதுகெலும்பை பாதுகாக்கும் எளிய வழிகள்!

• நேராக உட்காருங்கள்
• கணினியில் வேலை செய்யும்போது முதுகு நேராக இருக்க வேண்டும்.
• ஒவ்வொரு மணி நேரமும் எழுந்து நடக்கவும்.
• கனமான பொருட்களைத் தூக்கும்போது முழங்காலை மடக்கி குனிந்து எடுக்கவும்.
• மல்லாந்து படுக்காமல் பக்கவாட்டில் படுக்கவும்.
• தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அவசியம்.
• உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.
• நீச்சல் – முதுகெலும்புக்கு மிகச் சிறந்த உடற்பயிற்சி!

 

Dr. பி. கீர்த்திவாசன்[10]
MBBS, MS(Ortho), DNB (Ortho),
Post-doctoral fellowship in Spine Surgery
எலும்பு மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்
காவேரி மருத்துவமனைசென்னை[11]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்களை: https://www.kauveryhospital.com/doctors/chennai/spine-surgery/
  2. நீண்ட நேரம் கணினி முன் உட்கார்ந்திருப்பது, தவறான நிலையில் அமர்வது: https://www.kauveryhospital.com/blog/spine/the-adverse-and-lifelong-repercussions-of-wrong-sitting-posture/
  3. ‘முதுகுவலி: https://www.kauveryhospital.com/blog/orthopedics/5-signs-your-back-pain-might-be-an-emergency/
  4. சிறுநீர் கட்டுப்பாடின்மை: https://www.kauveryhospital.com/blog/urology/urinary-incontinence-in-the-elderly/
  5. Myths of Spinal Surgery: https://www.kauveryhospital.com/blog/spine/myths-of-spinal-surgery/
  6. முதுகெலும்பு அறுவை சிகிச்சை: https://www.kauveryhospital.com/centers-of-excellence-and-specialties/spine-surgery/
  7. சிறிய துளை மூலம் எண்டோஸ்கோபியைப் பயன்படுத்தி செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன: https://www.kauveryhospital.com/endoscopic-spine-surgery/
  8. மினிமல் இன்வேசிவ்: https://www.kauveryhospital.com/centers-of-excellence-and-specialties/minimally-invasive-spine-surgery/
  9. ரோபோடிக் ஸ்பைன் சர்ஜரி: https://www.kauveryhospital.com/kauvery-institute-of-robotic-surgery/
  10. Dr. பி. கீர்த்திவாசன்: https://www.kauveryhospital.com/doctors/chennai/spine-surgery/dr-p-keerthivasan/
  11. காவேரி மருத்துவமனைசென்னை: https://www.kauveryhospital.com/our-locations/chennai/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/a-new-opportunity-to-walk-straight/