8 வயசு குழந்தைக்கும் ஃபேட்டி லிவரா!

by admin-blog-kh | June 17, 2026 1:49 pm

ஒரு காலத்தில் மது அருந்துவோருக்கு மட்டுமே வரும் நோய் என்று கருதப்பட்ட ஃபேட்டி லிவர், இன்று 8-9 வயது குழந்தைகளுக்கும்கூட வருகிறது[1]. நகர்ப்புற இந்தியாவில் 10 முதல் 30 சதவிகிதம் குழந்தைகளுக்கு ஏற்கெனவே ஃபேட்டி லிவர் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான காரணம், அறிகுறிகள், தீர்வு குறித்த விழிப்புணர்வுக் கட்டுரை இது.

‘பையன் கொஞ்சம் குண்டா இருக்கறது உண்மைதான். ஆனா, ஃபேட்டி லிவர்னு ஸ்கேன்ல வந்திருக்கே…’ என்று அதிர்ச்சியில் உறைந்தார் அந்த அம்மா. மகனுக்கு வயது பத்து. இது இன்று இந்தியாவில் ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் சந்திக்கும் நிலை. ஒரு காலத்தில் நடுத்தர வயது மது அருந்துவோரின் நோய் என்று நம்பப்பட்ட ஃபேட்டி லிவர், இன்று சிறு குழந்தைகளையே தாக்கும் மிகப்பெரிய சுகாதாரப் பிரச்னையாக மாறியிருக்கிறது.

அமைதியான தொற்றுநோய் 

பீடியாட்ரிக் ஃபேட்டி லிவர், அதாவது MASLD (Metabolic associated fatty liver disease), குழந்தையின் கல்லீரலில் தேவைக்கு அதிகமான கொழுப்பு சேரும் நிலை. உடல் பருமன்[2], இன்சுலின் எதிர்ப்பு ஆகியவை முக்கிய காரணம். இந்தியாவில் இதன் வளர்ச்சி பயமுறுத்தும் அளவில் உள்ளது. நகர்ப்புற இந்தியாவில் 10 முதல் 30 சதவிகிதம் குழந்தைகளுக்கு ஃபேட்டி லிவர் இருப்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. உடல் எடை அதிகமுள்ள குழந்தைகளில் இந்த விகிதம் இன்னும் அதிகம். தெற்காசியர்களுக்கு மரபுரீதியாகவே, உடல் எடை குறைவாக இருந்தாலும், உள்ளுறுப்புகளைச் சுற்றிக் கொழுப்பு சேரும் தன்மை உள்ளது.

பீட்சா, பர்கர், சாஃப்ட் டிரிங்க்ஸ்கல்லீரலில் கொழுப்பு சேரும்

இது வெறும் ஜங்க் ஃபுட் பிரச்னை அல்ல; உடலின் முழு வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கும் பிரச்னை. குழந்தைகள் அதிக சர்க்கரை – குறிப்பாக சாஃப்ட் டிரிங்க்ஸ் மற்றும் பேக்கேஜ் உணவுகளை உட்கொள்ளும்போது, கல்லீரல் அந்தச் சர்க்கரையைக் கொழுப்பாக மாற்றுகிறது. அதே நேரம், இன்சுலின் எதிர்ப்பு உருவாகி, சர்க்கரை சரியாகப் பயன்படுத்தப்படாமல் மேலும் அதிக அளவு கொழுப்பு கல்லீரலில் சேமிக்கப்படுகிறது. திரை நேரம் அதிகரிப்பு, உடல் உழைப்பு இல்லாமை, தூக்கமின்மை, இரவில் தாமதமாகச் சாப்பிடுதல்… இவை அனைத்தும் பிரச்னையை மேலும் மோசமாக்குகின்றன.

பெற்றோர் கவனிக்க வேண்டிய அறிகுறிகள் 

பெரும்பாலான குழந்தைகளுக்கு வெளிப்படையான அறிகுறிகள் இருக்காது, அதனால்தான் இது ஆபத்தானது. ஆனால், சில நுட்பமான எச்சரிக்கை அறிகுறிகளை பெற்றோர்கள் புறக்கணிக்கக் கூடாது.

Also Read: Liver Detox – Myth or Science?[3]

வயிற்றைச் சுற்றி அதிகமான கொழுப்பு, கழுத்து அல்லது அக்குளில் கரும்புள்ளிகள் (அகன்தோசிஸ் நைக்ரிக்கான்ஸ்), காரணமில்லாத சோர்வு, பாடத்தில் கவனம் குறைவு, உடல் சகிப்புத்தன்மை குறைதல் ஆகியவை முக்கிய அறிகுறிகள். 9 வயதுக்கு மேல் உள்ள உடல் எடை அதிகமுள்ள குழந்தைகளுக்கு ஸ்கிரீனிங் கட்டாயம். குடும்பத்தில் சர்க்கரை நோய்[4] வரலாறு இருந்தாலோ, கழுத்தில் கரும்புள்ளிகள் தெரிந்தாலோ, இன்னும் சிறிய வயதிலேயே பரிசோதனை தொடங்கப்பட வேண்டும்.

எளிய பரிசோதனைகள்உயிர் காக்கும் கண்டறிதல் 

SGOT, SGPT எனப்படும் ரத்தப் பரிசோதனைகள் கல்லீரலில் சேதம் இருக்கிறதா என்பதைக் காட்டும். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் கல்லீரலில் மிதமான கொழுப்பு சேர்ப்பையும் கண்டறியலாம்.

இந்த அளவுகள் பல மாதங்களாகவே அதீத அளவில் இருந்தால், ஃபைப்ரோஸ்கேன் மூலம் கல்லீரலின் கடினத்தன்மை மற்றும் கொழுப்பு அளவைச் சரியாக அறியலாம். மிகத் துல்லியமான அளவீட்டுக்கு MRI பரிசோதனை செய்யப்படுகிறது.

மிதமான ஃபேட்டி லிவர் என்பதே இல்லை 

‘ஃபேட்டி லிவர் பாதிப்பில்லை’ என்கிற எண்ணம் முற்றிலும் தவறு. இது எளிய கொழுப்புச் சேர்ப்பில் தொடங்கி, அழற்சி, தழும்பு (ஃபைப்ரோசிஸ்), சிரோசிஸ், கல்லீரல் புற்றுநோய்[5] வரை படிப்படியாக முற்றலாம். சிலருக்கு இளம் வயதிலேயே ஃபைப்ரோசிஸ் வரக்கூடும். முப்பது வயதிலேயே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை[6] தேவைப்படும் நோயாளிகள் இன்று எங்களைச் சந்திக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் குழந்தைப் பருவத்திலேயே ஃபேட்டி லிவர் தொடங்கியுள்ளது.

ஒரு நற்செய்தியும் உண்டு

ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுத்தால், இது முழுமையாகச் சரியாகக்கூடிய நோய். 7 முதல் 10 சதவிகித எடை குறைப்பே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சர்க்கரையை முற்றிலும் நிறுத்த வேண்டும், குறிப்பாக சாஃப்ட் டிரிங்க்ஸ், பேக்கேஜ் ஜூஸ்கள். வெள்ளை அரிசி, மைதா உணவுகளைக் குறைத்து, பருப்பு, முட்டை, பருப்பு வகைகள் போன்ற புரதங்களை அதிகரிக்கவும். தினமும் ஒரு மணி நேர உடற்பயிற்சி, குறைந்த திரை நேரம், நல்ல தூக்கம் அவசியம். ரத்தப் பரிசோதனைகளில் முன்னேற்றம் 2-3 மாதங்களில் தெரியும்; கல்லீரலில் மாற்றம் 3-6 மாதங்களில் தெரியும்.

குடும்பமே மாற வேண்டும் 

குழந்தையின் பழக்கவழக்கங்கள் குடும்பத்திலிருந்தே உருவாகும். சாஃப்ட் டிரிங்க்ஸுக்குப் பதில் தண்ணீர், மோர்; பேக்கேஜ் ஸ்னாக்ஸுக்குப் பதில் நிலக்கடலை, பழங்கள், சுண்டல்; கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியங்கள் சேர்க்கலாம்[7]. பாதித் தட்டு காய்கறிகள், கால் பகுதி புரதம், கால் பகுதி கார்போஹைட்ரேட் என்கிற சமச்சீர் உணவு. சாப்பிடும் நேரத்தில் மொபைல், டி.வி.யை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தினசரி வெளியே விளையாடுவது கட்டாயம்.

 

தெரிந்துகொள்வோம்

• மிதமான ஃபேட்டி லிவர் என்று எதுவும் கிடையாது; அது எதிர்கால நோய்களின் எச்சரிக்கை மணி.
• உடனடியாகச் செய்ய வேண்டிய இரண்டு முக்கிய மாற்றங்கள்: சாஃப்ட் டிரிங்க்ஸ் மற்றும் பேக்கேஜுட் உணவுகளை முற்றிலும் நிறுத்துதல், தினமும் உடற்பயிற்சி.
• ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்த முடியும்.
• சில மாதங்களுக்கு ஒருமுறை தொடர் பரிசோதனை அவசியம்.
• பிரச்னையைப் புறக்கணித்தால், அது அமைதியாக சிரோசிஸ், சர்க்கரை நோய், கல்லீரல் செயலிழப்பு வரை முற்றும்.

டாக்டர் செந்தில் ஞானசேகரன் MBBS, MS, MCh, PDF (Liver Transplant)[8]
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்
காவேரி மருத்துவமனை, சென்னை[9]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. ஒரு காலத்தில் மது அருந்துவோருக்கு மட்டுமே வரும் நோய் என்று கருதப்பட்ட ஃபேட்டி லிவர், இன்று 8-9 வயது குழந்தைகளுக்கும்கூட வருகிறது: https://www.kauveryhospital.com/blog/liver-diseases/fatty-liver-disease-in-kids-best-advice-from-doctors/
  2. உடல் பருமன்: https://www.kauveryhospital.com/blog/paediatrics/the-alarming-rise-of-childhood-obesity-what-parents-need-to-know/
  3. Liver Detox – Myth or Science?: https://www.kauveryhospital.com/blog/lifestyle/liver-detox-myth-or-science/
  4. சர்க்கரை நோய்: https://www.kauveryhospital.com/blog/family-and-general-medicine/essential-knowledge-a-to-z-of-diabetes/
  5. கல்லீரல் புற்றுநோய்: https://www.kauveryhospital.com/blog/liver-diseases/liver-cancer-faqs/
  6. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை: https://www.kauveryhospital.com/liver-transplantation/
  7. சாஃப்ட் டிரிங்க்ஸுக்குப் பதில் தண்ணீர், மோர்; பேக்கேஜ் ஸ்னாக்ஸுக்குப் பதில் நிலக்கடலை, பழங்கள், சுண்டல்; கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியங்கள் சேர்க்கலாம்: https://www.kauveryhospital.com/blog/liver-diseases/the-link-between-liver-health-and-diet-what-to-eat-for-a-healthy-liver/
  8. டாக்டர் செந்தில் ஞானசேகரன் MBBS, MS, MCh, PDF (Liver Transplant): https://www.kauveryhospital.com/doctors/chennai-radial-road/liver-diseases/dr-senthil-gnanasekaran/
  9. காவேரி மருத்துவமனை, சென்னை: https://www.kauveryhospital.com/our-locations/chennai-radial-road/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/an-8-year-old-child-with-a-fatty-liver/