தடுப்பூசி குழந்தைகளுக்கு மட்டுமா?

by admin-blog-kh | November 3, 2026 12:22 pm

 தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு மட்டுமானவை அல்ல. வயது கூடக் கூட நோய் எதிர்ப்பு சக்தி தளர்வதால், பெரியவர்களுக்கும் தடுப்பூசிகள் அவசியம். பருவகாலக் காய்ச்சல் (Flu) சிலருக்கு உயிருக்கே ஆபத்தாகலாம். ஆண்டுதோறும் போடப்படும் ஃப்ளூ தடுப்பூசி அந்த ஆபத்தைக் குறைக்கும் என்கிறார் காவேரி மருத்துவமனையின் தொற்றுநோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் சௌம்யா ஸ்ரீதரன்.

மழைக்காலம்[1] தொடங்கிவிட்டால்[2] வீடுகளில்[3] இருமலும்[4] தும்மலும்[5] காய்ச்சலும்[6] வரிசைகட்டி[7] வருகின்றன[8]. ‘சாதாரண சளி காய்ச்சல்தான், இரண்டு நாளில் சரியாகிவிடும்’ என்று பெரும்பாலானோர் கடந்துபோகிறோம். பலருக்கு அது சரியாகவும் இருக்கலாம். ஆனால், சிலருக்கு அதே காய்ச்சல் மருத்துவமனைப் படுக்கை வரை கொண்டுசென்றுவிடுகிறது. நவம்பர் 10 அன்று உலக நோய்த்தடுப்பு தினம் (World Immunization Day) அனுசரிக்கப்படுகிறது. தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை, குறிப்பாகப் பெரியவர்களுக்கான தடுப்பூசிகளை, நினைவுபடுத்திக்கொள்ள இது சரியான தருணம்.

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கணக்குப்படி, உலக அளவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 100 கோடி பேர் பருவகால இன்ஃப்ளூயன்சா[9] (Seasonal Influenza) [10]காய்ச்சலால்[11] பாதிக்கப்படுகிறார்கள்[12]. அவர்களில் 30 முதல் 50 லட்சம் பேருக்கு நோய் தீவிரமடைகிறது. இந்தக் காய்ச்சலால் ஏற்படும் சுவாசப் பாதிப்புகள் காரணமாக, ஆண்டுதோறும் சுமார் 2.9 லட்சம் முதல் 6.5 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள்.

பெரியவர்களுக்கு ஏன் தடுப்பூசி? 

‘தடுப்பூசி என்றால் குழந்தைகளுக்குத்தானே? சிறு வயதில் போட்ட தடுப்பூசிகள் போதாதா?’ என்பது பலரின் கேள்வி. இதற்கு டாக்டர் சௌம்யா தரும் விளக்கம் தெளிவானது. வயது கூடக் கூட, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் இயல்பாகவே தளர்ந்துவிடுகிறது. இதை மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு மூப்படைதல் (Immunosenescence) என்கிறார்கள். இதனால், குழந்தைப் பருவத்தில் போட்ட தடுப்பூசிகள் தந்த பாதுகாப்பு, வளர்ந்த பிறகு போதுமானதாக இல்லாமல் போகலாம். மேலும், சில நோய்கள் குழந்தைகளைவிடப் பெரியவர்களுக்குத்தான் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அதனால்தான், பெரியவர்களுக்கும் தடுப்பூசிகள் முக்கியம் என்கிறார் அவர்.

அப்படியென்றால், பெரியவர்களுக்கு[13] எந்தெந்தத்[14] தடுப்பூசிகள்[15]? 2025-ம் ஆண்டில் ‘இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் கம்யூனிட்டி மெடிசின் அண்ட் பப்ளிக் ஹெல்த்’ இதழில் வெளியான, பெரியவர்களுக்கான இந்திய நோய்த்தடுப்பு வழிகாட்டுதல்கள் குறித்த ஆய்வுக் கட்டுரை, சில தடுப்பூசிகளை முக்கியமாகக் குறிப்பிடுகிறது. இன்ஃப்ளூயன்சா (ஃப்ளூ), நிமோனியாவைத் தடுக்கும் நிமோகாக்கல் (Pneumococcal), ஹெபடைடிஸ் பி (Hepatitis B), அக்கி எனப்படும் ஹெர்பிஸ் ஜோஸ்டர் (Herpes Zoster) ஆகியவை அவை. முதியவர்கள், நாள்பட்ட நோய் உள்ளவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் போன்ற அதிக அபாயம் உள்ளவர்களுக்கு இவை வலியுறுத்தப்படுகின்றன. கோவிட்[16] 19 [17]தடுப்பூசிகளும்[18] பூஸ்டர்களும்[19] அதில்[20] இடம்பெற்றுள்ளன[21]. உங்கள் வயது, உடல்நிலை, பணிச்சூழல் ஆகியவற்றைப் பொறுத்து, உங்களுக்கு எவை தேவை என்பதை மருத்துவர்தான் தீர்மானிக்க வேண்டும்.

சளியும் ஃப்ளூவும் ஒன்றல்ல 

ஜலதோஷம் (Common Cold) பொதுவாகப் பெரிய சிக்கல்களை ஏற்படுத்துவதில்லை. ஆனால், இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் அப்படியல்ல. சிலருக்கு அது கடுமையான பாதிப்பையும், உயிரிழப்பையும்கூட ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கிறார் டாக்டர் சௌம்யா.

திடீரென வரும் காய்ச்சல், பெரும்பாலும் வறட்டு இருமல், தலைவலி[22], தசை மற்றும் மூட்டு வலி, கடுமையான உடல் சோர்வு, தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல் ஆகியவை ஃப்ளூவின் வழக்கமான அறிகுறிகள் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. இந்த அறிகுறிகள் பொதுவாக ஒரு வாரம் வரை நீடிக்கும். பாதிக்கப்பட்டவர் இருமும்போதும் தும்மும்போதும், கிருமி படிந்த கைகள் மூலமும் இந்தக் காய்ச்சல் எளிதாகப் பரவுகிறது. பள்ளிகள், முதியோர் இல்லங்கள் போன்ற கூட்டமான இடங்களில் வேகமாகப் பரவும் தன்மையும் இதற்கு உண்டு.

எப்போது மருத்துவரைப் பார்க்க வேண்டும்?  

மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், மூச்சுத்திணறல் ஏற்பட்டால், கட்டுப்படுத்த முடியாத இருமல் இருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும் என்பது டாக்டர் சௌம்யாவின் அறிவுரை.

யாருக்கு ஆபத்து அதிகம்? 

முதியவர்கள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஆகியோருக்கு ஃப்ளூ காய்ச்சலின் சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். நீரிழிவு[23] (Diabetes)[24], நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD[25]), இதய நோய், சிறுநீரக நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களும் இந்த அபாயப் பட்டியலில் இருக்கிறார்கள் என்கிறார் டாக்டர் சௌம்யா. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும், நோயாளிகளுடன் நெருங்கிப் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களும் அதிக அபாயம் உள்ளவர்கள் என்று உலக சுகாதார நிறுவனமும் குறிப்பிடுகிறது. இவர்களுக்கு, ஃப்ளூ தடுப்பூசி ஒரு பாதுகாப்புக் கவசம்.

Also Read: குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்கள்[26]

தடுப்பூசி எப்போது போடலாம்? 

மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு, அதாவது செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் ஃப்ளூ தடுப்பூசி போட்டுக்கொள்வது சிறந்தது. ஆனால், அந்த நேரத்தைத் தவறவிட்டவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதியான ஒருவரை, கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே மருத்துவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். அதாவது, ‘நேரம் தவறிவிட்டது’ என்று தள்ளிப்போடாமல், இப்போதே உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

தயக்கமும் தெளிவும் 

‘தடுப்பூசியால் பக்கவிளைவு வருமோ?’ என்கிற தயக்கம் பலருக்கு உண்டு. எந்த ஒரு மருத்துவச் சிகிச்சையிலும் இருப்பதுபோல, தடுப்பூசியிலும் அதன் நன்மை தீமைகளை எடை போட்டுப் பார்க்க வேண்டும் என்கிறார் டாக்டர் சௌம்யா. அப்படிப் பார்க்கும்போது, தீவிர நோயால் ஏற்படும் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் தடுப்பூசிகள் நிச்சயமாகக் குறைக்கின்றன என்பதே அவரது உறுதியான கருத்து. உங்கள் உடல்நிலைக்கு எந்தத் தடுப்பூசி ஏற்றது என்பதை மருத்துவருடன் கலந்து பேசி முடிவு செய்யுங்கள்.

‘ஃப்ளூ தடுப்பூசி போட்டால் ஃப்ளூ காய்ச்சலே வந்துவிடும்’ என்பது இன்னொரு பரவலான அச்சம். ஆனால், ஊசி வழியாகப் போடப்படும், செயலிழக்கச் செய்யப்பட்ட (Inactivated) ஃப்ளூ தடுப்பூசியால் இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் வர முடியாது என்று தடுப்பூசி மருத்துவக் கையேடுகள் தெளிவுபடுத்துகின்றன. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் மூன்றில் ஒருவருக்கும் குறைவானவர்களுக்கு, ஊசி போட்ட இடத்தில் சிவப்பும் வீக்கமும் ஏற்படலாம். அது ஒன்று முதல் இரண்டு நாட்களில் சரியாகிவிடும். காய்ச்சல், குளிர், தலைவலி, உடல் சோர்வு போன்றவை அரிதாகவே வருகின்றன. வந்தாலும் ஒன்றிரண்டு நாட்களில் மறைந்துவிடும். ‘நான் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறேன்’ என்று நினைப்பவர்களும், அதிக அபாயம் உள்ள முதியவர்களுடனோ, குழந்தைகளுடனோ, நோயாளிகளுடனோ வசிக்கும்போது, அவர்களுக்கு நோய் பரவும் வழியாக மாறிவிடக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆன்டிபயாடிக் மாத்திரை வேண்டாம்! 

காய்ச்சல் வந்ததும், மருந்துக் கடையில் ஆன்டிபயாடிக் (Antibiotic) மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவது நம்மிடையே பரவலான பழக்கம். ஆனால், ஆன்டிபயாடிக் மருந்துகள் பாக்டீரியா தொற்றுகளுக்கு மட்டுமே பயன்படும். ஃப்ளூ போன்ற வைரஸ் தொற்றுகளுக்கு அவை எந்தப் பலனையும் தராது என்று தெளிவுபடுத்துகிறார் டாக்டர் சௌம்யா. தேவையில்லாமல் ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்வது, கிருமிகள் மருந்துகளுக்குக் கட்டுப்படாமல் போகும் நுண்ணுயிர் எதிர்ப்புத் திறனை (Antimicrobial Resistance) அதிகரிக்கவே செய்யும் என்றும் அவர் எச்சரிக்கிறார். இதனால், உண்மையிலேயே ஆன்டிபயாடிக் தேவைப்படும் நேரத்தில் அது வேலை செய்யாமல் போகும் ஆபத்து உண்டு. அதிக அபாயம் உள்ளவர்களுக்கும், நோய் தீவிரமானவர்களுக்கும் மருத்துவர்கள் தேவைப்பட்டால் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை (Antivirals) பரிந்துரைப்பார்கள். அதுவும் மருத்துவரின் ஆலோசனைப்படியே.

குடும்பத்தைக் காக்கும் எளிய பழக்கங்கள் 

தொற்றுநோய்கள் பரவும் காலங்களில், முகக்கவசம் (Mask) அணிவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது, கூட்டத்தில் இடைவெளி கடைப்பிடிப்பது ஆகியவை பாதுகாப்பு தரும். இருமும்போதும் தும்மும்போதும் வாயையும் மூக்கையும் மூடிக்கொள்வது, அடிக்கடி கைகளைக் கழுவுவது, காய்ச்சல் இருக்கும்போது வீட்டிலேயே ஓய்வெடுப்பது ஆகியவை மற்றவர்களுக்குத் தொற்று பரவாமல் தடுக்கும் சின்ன, ஆனால் வலிமையான பழக்கங்கள்.

வீட்டில் உள்ள முதியவர்கள், நீரிழிவு அல்லது இதய[27] நோய்[28] உள்ளவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு ஃப்ளூ தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா என்று இந்த உலக நோய்த்தடுப்பு தினத்தில் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய ஊசி,
ஒரு பெரிய பாதிப்பைத் தடுக்கக்கூடும்!

 

ஃப்ளூ தடுப்பூசி ஏன் ஒவ்வோர் ஆண்டும்? 

இன்ஃப்ளூயன்சா வைரஸ்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. அதனால், அந்தந்தக் காலத்தில் பரவும் வைரஸ்களுக்கு ஏற்றபடி ஃப்ளூ தடுப்பூசியின் உள்ளடக்கம் புதுப்பிக்கப்படுகிறது. வடக்கு மற்றும் தெற்கு அரைக்கோளங்களுக்காக ஆண்டுக்கு இருமுறை, தடுப்பூசியின் உள்ளடக்கத்தை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. மேலும், தடுப்பூசி தரும் நோய் எதிர்ப்பு சக்தி காலப்போக்கில் குறைந்துவிடுவதால், ஆண்டுதோறும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். கிருமி உடலுக்குள் நுழைந்து சுமார் இரண்டு நாட்களில் (ஒன்று முதல் நான்கு நாட்களுக்குள்) அறிகுறிகள் தோன்றுகின்றன.

 

டாக்டர்[29] சௌம்யா[30] ஸ்ரீ[31]தரன்[32]
MBBS, MD (Gen Med), FNB (Infectious Disease), MRCP (UK), CIC
கன்சல்டன்ட், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர் (Infectious Disease)
காவேரி[33] மருத்துவமனை[34] – [35]சென்னை[36] ஆழ்வார்பேட்டை[37]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. மழைக்காலம்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/the-rains-are-here-stay-alert/
  2. தொடங்கிவிட்டால்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/the-rains-are-here-stay-alert/
  3. வீடுகளில்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/the-rains-are-here-stay-alert/
  4. இருமலும்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/the-rains-are-here-stay-alert/
  5. தும்மலும்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/the-rains-are-here-stay-alert/
  6. காய்ச்சலும்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/the-rains-are-here-stay-alert/
  7. வரிசைகட்டி: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/the-rains-are-here-stay-alert/
  8. வருகின்றன: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/the-rains-are-here-stay-alert/
  9. இன்ஃப்ளூயன்சா: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/why-is-influenza-vaccination-necessary/
  10. (Seasonal Influenza) : https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/why-is-influenza-vaccination-necessary/
  11. காய்ச்சலால்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/why-is-influenza-vaccination-necessary/
  12. பாதிக்கப்படுகிறார்கள்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/why-is-influenza-vaccination-necessary/
  13. பெரியவர்களுக்கு: https://www.kauveryhospital.com/blog/geriatrics/why-are-vaccines-for-pneumonia-important-for-elderly/
  14. எந்தெந்தத்: https://www.kauveryhospital.com/blog/geriatrics/why-are-vaccines-for-pneumonia-important-for-elderly/
  15. தடுப்பூசிகள்: https://www.kauveryhospital.com/blog/geriatrics/why-are-vaccines-for-pneumonia-important-for-elderly/
  16. கோவிட்: https://www.kauveryhospital.com/blog/vaccination/covid-19-vaccination-all-your-doubts-answered/
  17. 19 : https://www.kauveryhospital.com/blog/vaccination/covid-19-vaccination-all-your-doubts-answered/
  18. தடுப்பூசிகளும்: https://www.kauveryhospital.com/blog/vaccination/covid-19-vaccination-all-your-doubts-answered/
  19. பூஸ்டர்களும்: https://www.kauveryhospital.com/blog/vaccination/covid-19-vaccination-all-your-doubts-answered/
  20. அதில்: https://www.kauveryhospital.com/blog/vaccination/covid-19-vaccination-all-your-doubts-answered/
  21. இடம்பெற்றுள்ளன: https://www.kauveryhospital.com/blog/vaccination/covid-19-vaccination-all-your-doubts-answered/
  22. தலைவலி: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/when-a-headache-takes-over-your-life/
  23. நீரிழிவு: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/diabetes-a-to-z/
  24. (Diabetes): https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/diabetes-a-to-z/
  25. COPD: https://www.kauveryhospital.com/blog/pulmonology/early-warning-signs-of-copd/
  26. குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுநோய்கள்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/infectious-diseases-in-children/
  27. இதய: https://www.kauveryhospital.com/blog/heart-health/heart-diseases-and-symptoms-a-mini-reference-guide/
  28. நோய்: https://www.kauveryhospital.com/blog/heart-health/heart-diseases-and-symptoms-a-mini-reference-guide/
  29. டாக்டர்: https://www.kauveryhospital.com/doctors/chennai/infectious-diseases/dr-sowmya-sridharan/
  30. சௌம்யா: https://www.kauveryhospital.com/doctors/chennai/infectious-diseases/dr-sowmya-sridharan/
  31. ஸ்ரீ: https://www.kauveryhospital.com/doctors/chennai/infectious-diseases/dr-sowmya-sridharan/
  32. தரன்: https://www.kauveryhospital.com/doctors/chennai/infectious-diseases/dr-sowmya-sridharan/
  33. காவேரி: https://www.kauveryhospital.com/our-locations/chennai/
  34. மருத்துவமனை: https://www.kauveryhospital.com/our-locations/chennai/
  35. – : https://www.kauveryhospital.com/our-locations/chennai/
  36. சென்னை: https://www.kauveryhospital.com/our-locations/chennai/
  37. ஆழ்வார்பேட்டை: https://www.kauveryhospital.com/our-locations/chennai/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/are-vaccines-only-for-children/