அலட்சியம் வேண்டாம்!

by admin-blog-kh | April 11, 2026 3:04 pm

உடல் பருமன் என்பது தோற்றம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல… அது ஒரு நாள்பட்ட நோய். இதை உணராமல் போவதே மிகப்பெரிய ஆபத்து!

இந்தியாவில் நிலை என்ன

இந்தியாவில் உடல் பருமன்[1] பிரச்னை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகிறது. 2022-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுமார் 7 கோடி இந்தியர்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4.4 கோடி பெண்கள், 2.6 கோடி ஆண்கள். 1.2 கோடிக்கும் அதிகமான குழந்தைகளும் இதில் அடக்கம். இப்படியே தொடர்ந்தால், 2050-ம் ஆண்டுக்குள் 44 கோடி இந்தியர்கள் உடல் பருமன் அல்லது அதிக எடையுடன் இருப்பார்கள் என்று மதிப்பிடப்படுகிறது.

எந்த உறுப்புகளைப் பாதிக்கிறது

உடல் பருமன் ஒவ்வோர் உறுப்பையும் அமைதியாக அரித்துக்கொண்டே இருக்கும். இதயம், ரத்த நாளங்கள் – உயர் ரத்த அழுத்தம்[2], மாரடைப்பு, பக்கவாதம்; கணையம் – சர்க்கரை நோய்[3]; கல்லீரல் – கொழுப்புக் கல்லீரல் நோய்[4]; நுரையீரல் – தூக்கத்தில் மூச்சுத்திணறல்; மூட்டுகள் – எலும்புத் தேய்மானம், நாள்பட்ட வலி என்று தாக்கம் பரந்து விரிந்திருக்கிறது. முக்கியமான விஷயம்… வெறும் 5 முதல் 10 சதவிகிதம் எடை குறைந்தாலே, இந்த ஆபத்துகள் கணிசமாகக் குறையும்.

அதிக எடையா? உடல் பருமனா? வித்தியாசம் என்ன

Body Mass Index (BMI) அளவை வைத்து இதைத் தீர்மானிக்கலாம். BMI 25-29.9 இருந்தால் அதிக எடை; 30-க்கு மேல் இருந்தால் உடல் பருமன். ஆனால், இந்தியர்களுக்கு BMI 23 ஆனதுமே ஆபத்து தொடங்குகிறது. இடுப்புச் சுற்றளவும் மக்கியம். ஆண்களுக்கு 90 செ.மீ., பெண்களுக்கு 80 செ.மீ.க்கு மேல் இருந்தால் கவனிக்க வேண்டும். அதிக எடை என்பது எச்சரிக்கை அளிக்கிறது. உடல் பருமன் என்பது உடனடி சிகிச்சை தேவைப்படும் நோய்.

வாழ்க்கைமுறை எவ்வளவு முக்கியம்

பதப்படுத்தப்பட்ட உணவுகள், இனிப்புப் பானங்கள், இரவு நேர உணவு என்று ஒவ்வொன்றும் வளர்சிதை மாற்றத்தைக் குலைக்கின்றன. தூக்கமின்மை பசியை அதிகரிக்கும். மன அழுத்தம்[5] கார்டிசோல் என்ற ஹார்மோனை அதிகரித்து உடலில் கொழுப்பைச் சேமிக்கும். தைராய்டு கோளாறு, PCOS[6], சில மருந்துகள்கூட உடல் பருமனை ஏற்படுத்தலாம். இவை பலருக்குத் தெரியாத காரணங்கள்.

Also Read: மறைந்திருக்கும் மர்மம் என்ன?[7]

இது வெறும் மன உறுதியின்மையா

இல்லவே இல்லை. உடல் பருமன் என்பது மரபணு, ஹார்மோன், தூக்கம், மன அழுத்தம், சுற்றுச்சூழல் என பல காரணிகள் சேர்ந்த சிக்கலான நிலை. உடல் தன் எடையைப் பாதுகாக்கும் இயற்கை அமைப்பை கொண்டிருக்கிறது. அதனால் எடை குறைப்பது உயிரியல்ரீதியாகவே சவாலானது. இது தனிப்பட்ட தோல்வி அல்ல; மருத்துவக் கவனிப்பு தேவைப்படும் நோய்.

குழந்தைப் பருவத்திலேயே ஆபத்தா

குழந்தை பருவத்தில் உடல் பருமன் இருந்தால், பின்னாளில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்புக் கல்லீரல், மூட்டு வலி, தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஆகியவை வரலாம். மனநிலையிலும் பாதிப்பு ஏற்படும். வீட்டில் சமைத்த சத்தான உணவு, தினமும் ஒரு மணி நேர உடல் இயக்கம், திரை நேரம் குறைப்பு[8], போதுமான தூக்கம்… இவையே இதற்கான சிறந்த தடுப்புமுறை.

சிகிச்சை என்ன

முதல்கட்ட சிகிச்சை வாழ்க்கைமுறை மாற்றம்தான். BMI 30-க்கு மேல் இருந்தால் அல்லது BMI 27-க்கு மேல் இருந்து மற்ற நோய்களும் இருந்தால் மருத்துவ சிகிச்சைக்குப் பரிசீலிக்கலாம். Semaglutide, Tirzepatide[9] போன்ற நவீன மருந்துகள் மருத்துவர் மேற்பார்வையில் 10 முதல் 20 சதவிகிதம் வரை எடை குறைக்கலாம். BMI 40-க்கு மேல் இருந்தால் Bariatric Surgery – Sleeve Gastrectomy, Gastric Bypass போன்ற அறுவைசிகிச்சைகள் 25 முதல் 35 சதவிகிதம் வரை நிரந்தர எடை குறைப்பை அளிக்கின்றன.

மூன்று முக்கிய மாற்றங்கள் 

  1. சாப்பிடும்போது கவனமாக, அளவாகச் சாப்பிடுங்கள் – சர்க்கரை, எண்ணெய் குறைத்து, காய்கறி மற்றும் புரதம் அதிகரியுங்கள்.
  2. தினமும் 30-45 நிமிடம் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி
  3. மன அழுத்தம் குறைப்பு மற்றும் 7-8 மணி நேர தூக்கம்… இந்த மூன்றும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டால், பருமன் பிரச்னையை கட்டுக்குள் கொண்டுவர முடியும். இன்றே வாழ்க்கைமுறையை சரி செய்தால், நாளை நோய்களைத் தவிர்க்கலாம்!

இந்தியாவில் 7 கோடி பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெறும் 5-10% எடை குறைந்தாலே, சர்க்கரை நோய், இதய நோய்[10] ஆபத்துகள் கணிசமாகக் குறையும். உடல் பருமன் தனிப்பட்ட தோல்வி அல்லஇது மருத்துவக் கவனிப்பு தேவைப்படும் நோய்.

BMI அட்டவணை இந்தியர்களுக்கு…

18.5 – 22.9 – சாதாரண எடை
23 – 24.9 – அதிக ஆபத்து தொடக்கம்
25 – 29.9 – அதிக எடை
30+ – உடல் பருமன்
இடுப்புச் சுற்றளவைக் கவனியுங்கள்!
ஆண்கள் – 90 செ.மீ.க்கு மேல் ஆபத்து
பெண்கள் – 80 செ.மீ.க்கு மேல் ஆபத்து

 

Dr. A. நாராயணன் MBBS, DNB[11]
பொது மருத்துவர்
காவேரி மருத்துவமனை, திருநெல்வேலி[12]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. உடல் பருமன்: https://www.kauveryhospital.com/blog/lifestyle/war-against-obesity/
  2. உயர் ரத்த அழுத்தம்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/high-blood-pressure/
  3. சர்க்கரை நோய்: https://www.kauveryhospital.com/blog/family-and-general-medicine/essential-knowledge-a-to-z-of-diabetes/
  4. கொழுப்புக் கல்லீரல் நோய்: https://www.kauveryhospital.com/blog/liver-diseases/obesity-and-non-alcoholic-fatty-liver-disease/
  5. மன அழுத்தம்: https://www.kauveryhospital.com/blog/family-and-general-medicine/impact-of-stress-on-blood-sugar-levels-and-diabetes-management/
  6. PCOS: https://www.kauveryhospital.com/blog/obstetrics-and-gynecology/pcos-all-you-need-to-know-to-conquer-it/
  7. மறைந்திருக்கும் மர்மம் என்ன?: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/what-is-the-hidden-mystery/
  8. திரை நேரம் குறைப்பு: https://www.kauveryhospital.com/blog/lifestyle/can-screen-time-cause-weight-gain/
  9. Tirzepatide: https://www.kauveryhospital.com/blog/family-and-general-medicine/india-approves-tirzepatide-a-diabetes-and-weight-loss-drug/
  10. இதய நோய்: https://www.kauveryhospital.com/blog/heart-health/obesity-and-heart-disease/
  11. Dr. A. நாராயணன் MBBS, DNB: https://www.kauveryhospital.com/doctors/tirunelveli/general-medicine/dr-narayanan-a/
  12. திருநெல்வேலி: https://www.kauveryhospital.com/our-locations/tirunelveli/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/do-not-be-negligent/