இரவில் அடிக்கடி எழுகிறீர்களா? கவனியுங்கள்!

by admin-blog-kh | November 16, 2026 8:07 am

‘வயதானால் சிறுநீர்ப் பிரச்னை வருவது சகஜம்’ என்று பல ஆண்கள் அலட்சியம் செய்கிறார்கள். ஆனால், அதே அறிகுறிகள் புராஸ்டேட் புற்றுநோயின் தொடக்கமாகவும் இருக்கலாம். எளிய ரத்தப் பரிசோதனையும் நவீன சிகிச்சை முறைகளும் இந்த நோயை வெல்லும் வழியைத் திறந்து வைத்திருக்கின்றன என்கிறார் காவேரி மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி. அனிஸ்.

இரவில் நான்கைந்து முறை எழுந்து சிறுநீர் கழிக்கச் செல்வதை, ‘வயசாயிடுச்சு, இதெல்லாம் சகஜம்தான்’ என்று பல ஆண்கள் சமாதானம் செய்துகொள்கிறார்கள். கெட்டுப்போகும் தூக்கத்தையும் பொறுத்துக்கொள்கிறார்கள். ஆனால், இப்படி அலட்சியம் செய்யப்படும் அறிகுறிகளுக்குப் பின்னால், புராஸ்டேட் சுரப்பியில் (Prostate Gland) ஏற்படும் பிரச்னைகள் ஒளிந்திருக்கலாம். அவற்றில்[1] ஒன்று[2] புராஸ்டேட்[3] புற்றுநோய்[4] (Prostate Cancer)[5]. சிறுநீர் தொடர்பான பிரச்னைகளைப் பற்றி மனைவியிடமோ, பிள்ளைகளிடமோ, மருத்துவரிடமோகூடப் பேசத் தயங்கும் ஆண்கள் நம்மிடையே ஏராளம். அந்தத் தயக்கமே, ஆரம்பத்திலேயே கண்டறியக்கூடிய ஒரு நோயைத் தாமதமான நிலைக்குத் தள்ளிவிடும் அபாயம் உண்டு. நவம்பர் மாதம் ‘மூவம்பர்’ (Movember) என்ற பெயரில், ஆண்கள் நலம், குறிப்பாக புராஸ்டேட் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பல நாடுகளில் முன்னெடுக்கப்படுகிறது.

உலகப் புற்றுநோய் ஆய்வு நிதியத்தின் (WCRF) தரவுப்படி, 2022-ம் ஆண்டில் உலக அளவில் சுமார் 14.7 லட்சம் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் கண்டறியப்பட்டது. அந்த ஆண்டில், ஆண்களை அதிகம் தாக்கிய புற்றுநோய்களில் இது இரண்டாம் இடத்தில் இருந்தது. இந்தியாவில், உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச புற்றுநோய் ஆய்வு அமைப்பின் (IARC) GLOBOCAN 2024-ம் ஆண்டு மதிப்பீட்டின்படி, ஓர் ஆண்டில் சுமார் 40 ஆயிரம் ஆண்களுக்கு இந்த நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய ஆண்களிடையே அதிகம் காணப்படும் புற்றுநோய்களில் இது ஐந்தாம் இடத்தில் உள்ளது.

புராஸ்டேட் என்றால் என்ன? 

புராஸ்டேட் என்பது ஆண்களுக்கு மட்டுமே உள்ள ஓர் உறுப்பு. விந்துவுக்கான திரவத்தை உற்பத்தி செய்வது இதன் முக்கியப் பணி. சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீரை வெளியே கொண்டுசெல்லும் சிறுநீர்க்குழாய் (Urethra), இந்தச் சுரப்பியின் நடுவழியாகத்தான் செல்கிறது. இந்த அமைப்புதான் பல சிறுநீர்ப் பிரச்னைகளுக்கு அடிப்படை என்று விளக்குகிறார் டாக்டர் அனிஸ்.

வயது ஏற ஏற, புராஸ்டேட் சுரப்பி இயல்பாகவே பெரிதாகும் தன்மை கொண்டது. புற்றுநோய் அல்லாத இந்த வீக்கத்தை, புராஸ்டேட் தீங்கற்ற வீக்கம் (Benign Prostatic Hyperplasia, BPH) என்கிறார்கள். பெரிதாகும் சுரப்பி சிறுநீர்க்குழாயை அழுத்துவதால், சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படுகிறது. இதனால் கீழ்ச் சிறுநீர்ப்பாதை அறிகுறிகள் (Lower Urinary Tract Symptoms, LUTS) தோன்றுகின்றன. அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றுவது, இரவில் நான்கு அல்லது ஐந்து முறை எழுந்து செல்வது, அவசரமாக உணர்ந்தாலும் சிறுநீர் கழிக்கத் தொடங்குவதில் சிரமம், வயிற்றை அழுத்தி முக்க வேண்டிய நிலை ஆகியவை இதில் அடங்கும். சிறுநீர்ப்பை முழுமையாகக் காலியாகாத உணர்வால், 30 முதல் 45 நிமிடங்களுக்குள் மீண்டும் கழிவறைக்குச் செல்ல வேண்டியிருப்பதும் உண்டு.

ஒரே அறிகுறிகள், இரண்டு காரணங்கள் 

இங்குதான் மிகப் பெரிய சவால் இருக்கிறது. ஆரம்பக் கட்ட புராஸ்டேட் புற்றுநோயும் இதே அறிகுறிகளைத்தான் காட்டுகிறது. தீங்கற்ற வீக்கமும், புற்றுநோய்க் கட்டியும் ஒரே இடத்தில் சிறுநீர்க்குழாயை அழுத்துவதால், உடல் உணர்வுகளை மட்டும் வைத்து இரண்டையும் பிரித்தறிய முடியாது. ‘இது சாதாரண வீக்கம்தான்’ என்று தானாக முடிவு செய்துகொள்வது தவறான நிம்மதியைத் தரலாம் என்றும், மருத்துவப் பரிசோதனை மட்டுமே உண்மையைச் சொல்லும் என்றும் எச்சரிக்கிறார் டாக்டர் அனிஸ்.

பரிசோதனைப் பாதை 

முதல் கட்டமாக, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் (Ultrasound Scan) மூலம் புராஸ்டேட்டின் அளவு கணக்கிடப்படுகிறது. அதோடு, சிறுநீர் கழித்த பிறகும் சிறுநீர்ப்பையில் எவ்வளவு சிறுநீர் தங்கியிருக்கிறது (Post Void Residual Urine) என்பதும் அளவிடப்படுகிறது. இதனுடன், பி.எஸ்.ஏ. (Prostate Specific Antigen, PSA) என்ற எளிய ரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.

டாக்டர் அனிஸ் தரும் விளக்கப்படி, ஒரு மில்லிலிட்டர் ரத்தத்தில் 4 நானோகிராம் (4 ng/mL) வரை பி.எஸ்.ஏ. அளவு இருப்பது பொதுவாக நம்பிக்கை தரும் அளவு. ஆனால், அது நோய் இல்லை என்பதற்கான முழு உத்தரவாதம் அல்ல. 4 முதல் 10 வரையிலான அளவு எல்லைக்கோட்டு நிலை. வயது அல்லது தீங்கற்ற வீக்கம் காரணமாகவும் இந்த அளவு காணப்படலாம். 10 முதல் 15 அல்லது அதற்கு மேல் சென்றால், புற்றுநோய் இருக்குமோ என்ற சந்தேகம் வலுக்கிறது. 100, 200 என்ற அளவுகளில் இருந்தால், புற்றுநோய்க்கான வாய்ப்பு மிக அதிகம். ஆனால், பி.எஸ்.ஏ. அளவு மட்டுமே நோயை உறுதி செய்யாது. அதை மருத்துவர்தான் மற்ற பரிசோதனைகளுடன் சேர்த்து மதிப்பிட வேண்டும்.

பி.எஸ்.ஏ. அல்லது ஸ்கேன் முடிவுகள் இயல்புக்கு மாறாக இருந்தால், புராஸ்டேட் எம்.ஆர்.ஐ. (MRI) ஸ்கேன் செய்யப்பட்டு, சந்தேகத்துக்குரிய கட்டிகள் இருக்கின்றனவா என்று பார்க்கப்படுகிறது. மலக்குடல் வழியாக விரலால் செய்யப்படும் பரிசோதனை (Digital Rectal Examination, DRE) மூலம் சுரப்பியில் கடினத்தன்மையோ கட்டியோ இருக்கிறதா என்றும் மருத்துவர் ஆராய்கிறார். இறுதியாக, எம்.ஆர்.ஐ. முடிவுகளுடன் ஒப்பிட்டு, அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதலுடன் சந்தேகப் பகுதியிலிருந்து திசு மாதிரி (Biopsy) எடுக்கப்படுகிறது. மலக்குடல் வழியாக (TRUS Biopsy) அல்லது விதைப்பைக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதி வழியாக (Transperineal Biopsy) இது செய்யப்படுகிறது. இந்தப் பரிசோதனைதான் நோயை உறுதி செய்கிறது. ஒவ்வொரு கட்டமும் அடுத்த கட்டத்துக்கு வழிகாட்டுவதால், தேவையற்ற பரிசோதனைகளும் தவிர்க்கப்படுகின்றன.

Also Read: All about Urethral Stricture Disease, Symptoms and Management[6]

யார், எப்போது பரிசோதனை செய்யலாம்? 

அறிகுறிகளே இல்லாதவர்களுக்கு, நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய செய்யப்படுவதுதான் முன்கூட்டிய பரிசோதனை (Screening). 50 வயதைக் கடந்த ஆண்களும், குடும்பத்தில் புற்றுநோய் வரலாறு போன்ற அதிக அபாயம் உள்ள 45 வயதைக் கடந்த ஆண்களும், பி.எஸ்.ஏ. ரத்தப் பரிசோதனையும் மலக்குடல் பரிசோதனையும் செய்துகொள்வது குறித்து மருத்துவரிடம் பேச வேண்டும் என்று டாக்டர் அனிஸ் பரிந்துரைக்கிறார். முதல் பரிசோதனையின் முடிவையும் தனிப்பட்ட அபாயத்தையும் பொறுத்து, அடுத்த பரிசோதனை எப்போது என்பதை மருத்துவர் தீர்மானிப்பார்.

இந்த நோய் பெரும்பாலும் 60 முதல் 65 வயதைக் கடந்தவர்களிடம்தான் காணப்படுகிறது. 40 முதல் 45 வயதிலேயே ஒருவருக்கு வந்தால், அது குடும்பரீதியான அல்லது மரபணுரீதியான காரணத்தைச் சுட்டிக்காட்டலாம். அப்படிப்பட்ட குடும்பங்களில் உள்ள மற்ற ஆண்கள் முன்கூட்டியே பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்கிறார் அவர்.

எல்லாக் கட்டிகளும் அவசரமானவை அல்ல 

உறுதி செய்யப்பட்ட புற்றுநோய் நான்கு நிலைகளாக (Stages) வகைப்படுத்தப்படுகிறது. முதல் இரண்டு நிலைகளில், கட்டி சிறியதாக, புராஸ்டேட்டுக்குள் மட்டுமே இருக்கும். மூன்றாம் நிலையில், கட்டி சுரப்பியின் வெளிப்புற உறையைத் தாண்டி வளர்ந்திருக்கும். நான்காம் நிலையில், அருகிலுள்ள நிணநீர் முடிச்சுகளுக்கோ (Lymph Nodes), எலும்புகள், நுரையீரல், கல்லீரல் போன்ற தொலைதூர உறுப்புகளுக்கோ பரவியிருக்கும்.

மற்ற பல புற்றுநோய்களைப் போல அல்லாமல், புராஸ்டேட் புற்றுநோய் பல வடிவங்களில் இருக்கிறது. சில கட்டிகள் மிக மெதுவாக வளர்பவை, பரவும் தன்மையும் குறைவு. சில கட்டிகள் வேகமாகப் பரவக்கூடியவை. மிக ஆரம்ப நிலையில், மிகச் சிறிய, தீவிரம் குறைந்த கட்டி புராஸ்டேட்டுக்குள் மட்டும் இருக்கும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு, உடனடி அறுவை சிகிச்சை தேவைப்படாமல் போகலாம். அவர்கள் தொடர் கண்காணிப்பில் (Active Surveillance) வைக்கப்படுகிறார்கள்.

நான்காம் நிலையை எட்டிய புராஸ்டேட் புற்றுநோய்கூட, மற்ற புற்றுநோய்களுடன் ஒப்பிடும்போது சிகிச்சைக்கு நன்றாகக் கட்டுப்படுவதாகவும், பலருக்குப் பல ஆண்டுகள் நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடிவதாகவும் நம்பிக்கை தருகிறார் டாக்டர் அனிஸ்.

காவேரி[7] மருத்துவமனையில்[8], ஒவ்வொரு நோயாளியின் சிகிச்சை முறையும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவப் புற்றுநோய் நிபுணர்கள், கதிரியக்கப் புற்றுநோய் நிபுணர்கள் அடங்கிய கட்டி வாரியத்தில் (Tumour Board) விவாதிக்கப்பட்டே முடிவு செய்யப்படுகிறது. ஆரம்ப நிலைகளில் (முதல் நிலையிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாம் நிலையிலும்) அறுவை சிகிச்சையே முதன்மைத் தேர்வு. மூன்றாம், நான்காம் நிலைகளில் அறுவை சிகிச்சை, கதிரியக்கம், மருந்து சிகிச்சைகள் இணைந்த பல்முனை சிகிச்சை (Multimodality Therapy) அளிக்கப்படுகிறது.

அச்சம் போக்கும் ரோபோடிக் 

புராஸ்டேட்[9] அறுவை[10] சிகிச்சை[11] என்றாலே[12], [13]சிறுநீரைக்[14] கட்டுப்படுத்த[15] முடியாமல்[16] போகுமோ[17] (Urinary Incontinence)[18], தாம்பத்திய ஆற்றல் பாதிக்கப்படுமோ (Erectile Dysfunction) என்ற அச்சம்தான் ஆண்களை அதிகம் தயங்க வைக்கிறது. தாம்பத்திய ஆற்றலுக்குக் காரணமான நுண்ணிய நரம்புகளும், சிறுநீரைக் கட்டுப்படுத்தும் சுருக்குத்தசைத் தொகுப்பும் (Urethral Sphincter) புராஸ்டேட்டை ஒட்டியே அமைந்திருக்கின்றன. பாரம்பரிய திறந்த அறுவை சிகிச்சையில், இவை பாதிக்கப்படும் அபாயம் அதிகம் இருந்தது.

ரோபோடிக் அறுவை சிகிச்சை (Robotic Surgery) இந்த நிலையை மாற்றியிருக்கிறது என்கிறார் டாக்டர் அனிஸ். உயர் தெளிவுள்ள முப்பரிமாணப் (3D) பார்வையும், குறுகிய இடுப்புப் பகுதிக்குள் நுட்பமாக இயங்கும் கருவிகளும், நரம்புகளையும் சுருக்குத்தசையையும் பாதுகாத்தபடியே கட்டியை முழுமையாக அகற்ற உதவுகின்றன. சிறுநீர்க் கட்டுப்பாடு, தாம்பத்திய ஆற்றல் ஆகியவற்றைப் பாதுகாப்பதே இதன் நோக்கம். இறுதி முடிவுகள், நோயின் நிலையையும் அறுவை சிகிச்சை நிபுணரின் அனுபவத்தையும் பொறுத்தும் அமைகின்றன.

தயக்கத்தை உடையுங்கள் 

அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரவில் பலமுறை எழுதல், சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால், கூச்சப்படாமல் உடனே அறுவை சிகிச்சை நிபுணர், சிறுநீரகவியல் நிபுணர் அல்லது புற்றுநோய் நிபுணரை அணுகுங்கள். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், குணமாக்கும் சிகிச்சைக்கான வாய்ப்பு அதிகம் என்பதே டாக்டர் அனிஸின் முக்கியச் செய்தி. வீட்டில் உள்ள அப்பா, தாத்தா, கணவர் யாராவது இரவில் அடிக்கடி எழுகிறார்களா? இன்றே அவர்களிடம் பேசுங்கள்.

 

டாக்டர்[19] பி[20]. [21]அனிஸ்[22]
MBBS, MS, MRCS, MCh
கன்சல்டன்ட், புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் (Surgical Oncologist)
காவேரி[23] மருத்துவமனை[24] – [25]திருச்சி[26] தென்னூர்[27]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. அவற்றில்: https://www.kauveryhospital.com/blog/cancer/prostate-cancer-the-silent-risk-many-men-ignore-and-why-early-detection-can-make-all-the-difference/
  2. ஒன்று: https://www.kauveryhospital.com/blog/cancer/prostate-cancer-the-silent-risk-many-men-ignore-and-why-early-detection-can-make-all-the-difference/
  3. புராஸ்டேட்: https://www.kauveryhospital.com/blog/cancer/prostate-cancer-the-silent-risk-many-men-ignore-and-why-early-detection-can-make-all-the-difference/
  4. புற்றுநோய்: https://www.kauveryhospital.com/blog/cancer/prostate-cancer-the-silent-risk-many-men-ignore-and-why-early-detection-can-make-all-the-difference/
  5. (Prostate Cancer): https://www.kauveryhospital.com/blog/cancer/prostate-cancer-the-silent-risk-many-men-ignore-and-why-early-detection-can-make-all-the-difference/
  6. All about Urethral Stricture Disease, Symptoms and Management: https://www.kauveryhospital.com/blog/urology/all-about-urethral-stricture-disease-symptoms-and-management/
  7. காவேரி: https://www.kauveryhospital.com/
  8. மருத்துவமனையில்: https://www.kauveryhospital.com/
  9. புராஸ்டேட்: https://www.kauveryhospital.com/blog/urology/urinary-incontinence-in-the-elderly/
  10. அறுவை: https://www.kauveryhospital.com/blog/urology/urinary-incontinence-in-the-elderly/
  11. சிகிச்சை: https://www.kauveryhospital.com/blog/urology/urinary-incontinence-in-the-elderly/
  12. என்றாலே: https://www.kauveryhospital.com/blog/urology/urinary-incontinence-in-the-elderly/
  13. , : https://www.kauveryhospital.com/blog/urology/urinary-incontinence-in-the-elderly/
  14. சிறுநீரைக்: https://www.kauveryhospital.com/blog/urology/urinary-incontinence-in-the-elderly/
  15. கட்டுப்படுத்த: https://www.kauveryhospital.com/blog/urology/urinary-incontinence-in-the-elderly/
  16. முடியாமல்: https://www.kauveryhospital.com/blog/urology/urinary-incontinence-in-the-elderly/
  17. போகுமோ: https://www.kauveryhospital.com/blog/urology/urinary-incontinence-in-the-elderly/
  18. (Urinary Incontinence): https://www.kauveryhospital.com/blog/urology/urinary-incontinence-in-the-elderly/
  19. டாக்டர்: https://www.kauveryhospital.com/doctors/trichy-tennur/oncology/dr-b-anis/
  20. பி: https://www.kauveryhospital.com/doctors/trichy-tennur/oncology/dr-b-anis/
  21. . : https://www.kauveryhospital.com/doctors/trichy-tennur/oncology/dr-b-anis/
  22. அனிஸ்: https://www.kauveryhospital.com/doctors/trichy-tennur/oncology/dr-b-anis/
  23. காவேரி: https://www.kauveryhospital.com/our-locations/trichy-tennur/
  24. மருத்துவமனை: https://www.kauveryhospital.com/our-locations/trichy-tennur/
  25. – : https://www.kauveryhospital.com/our-locations/trichy-tennur/
  26. திருச்சி: https://www.kauveryhospital.com/our-locations/trichy-tennur/
  27. தென்னூர்: https://www.kauveryhospital.com/our-locations/trichy-tennur/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/do-you-wake-up-frequently-during-the-night-take-note/