by admin-blog-kh | June 15, 2026 12:50 pm
இந்தியாவில் 3 முதல் 3.5 கோடி பேருக்கு ஆஸ்துமா உள்ளது. இது உலகிலேயே அதிக எண்ணிக்கை. சென்னை போன்ற நகரங்களில் வாகன மாசு, கட்டுமான புழுதி, ஈரப்பதம் எனத் தூண்டிகள் அதிகம். ‘இன்ஹேலர் அடிமையாக்கும், ஒருமுறை ஆரம்பித்தால் நிறுத்த முடியாது’ என்பதுபோன்ற மூட நம்பிக்கைகளால் நோய் மோசமடைகிறது. மே 6 உலக ஆஸ்துமா தினம் குறித்த விழிப்புணர்வுக் கட்டுரை இது.
‘மூச்சு விட கஷ்டமா இருந்தாலும், இன்ஹேலர் வேண்டாம் டாக்டர். ஒரு முறை ஆரம்பிச்சா அடிமையாகிடுவோம்னு சொல்றாங்க…’ – இந்த எண்ணமே இந்தியாவில் கோடிக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகளின் நிலைமையை மேலும் மோசமாக்கியிருக்கிறது.
ஆஸ்துமா என்பது நுரையீரலின் சுவாசக் குழாய்களில் ஏற்படும் நாள்பட்ட அழற்சி ஏற்படும் நோய்[1]. சுவாசக் குழாய்கள் சுருங்கி, அதிக சளி உற்பத்தியாகிறது. இதனால் மூச்சுத் திணறல், விசில் போன்ற ஒலியுடன் கூடிய மூச்சு (Wheezing), நெஞ்சு இறுக்கம், குறிப்பாக இரவிலும் அதிகாலையிலும் வரும் இருமல் ஆகிய அறிகுறிகள் தோன்றும். இந்தியாவில் 3 முதல் 3.5 கோடி ஆஸ்துமா நோயாளிகள் உள்ளனர். இது உலகிலேயே அதிகம். சென்னை போன்ற நகரங்களில் வாகன மாசு, தொழிற்சாலைப் புகை, கட்டுமான புழுதி[2], AC அறைகளில் குறைவான காற்றோட்டம் – இவையெல்லாம் காரணம். கிராமப்புறங்களிலும் விறகு புகை (biomass fuel), புழுதி, நோயறிதல் இல்லாமை ஆகியவை பிரச்னையாக உள்ளன.
ஆஸ்துமா அறிகுறிகள் சில தூண்டிகளால் (triggers) மோசமடைகின்றன. வாகன மாசு, தொழிற்சாலைப் புகை போன்றவை சுவாசக் குழாய்களை எரிச்சலூட்டுகின்றன. வீட்டில் உள்ள தூசு பூச்சிகள் (dust mites), பழைய படுக்கைகள், கம்பளங்கள், கட்டுமான புழுதி போன்றவை முக்கிய தூண்டிகள். சென்னையில் ஈரப்பதம் அதிகம். இதனால் பூஞ்சை, தேமல் வளர்ச்சி அதிகரிக்கிறது. பருவநிலை மாற்றம், மழைக்காலத்தில் வைரஸ் தொற்றுகள், சிகரெட் புகை, ஊதுபத்தி, கொசு காயில், வாசனைத் திரவியங்கள் – இவையும் தூண்டக்கூடியவை.
இது மிகவும் பொதுவான மூட நம்பிக்கை. ஆஸ்துமா எந்த வயதிலும் தொடங்கக்கூடியது. குழந்தைப் பருவத்திலோ, பதின்ம வயதிலோ, 40 வயதுக்கு மேலோ கூட வரலாம். சில குழந்தைகள் வளரும்போது பிரச்னை குறையலாம். ஆனால், எல்லோரும் குணமாக மாட்டார்கள். சில நேரம் அறிகுறிகள் மீண்டும் பிற்காலத்தில் வரக்கூடும். பெரியவர்களுக்கு மாசு வெளிப்பாடு, பணியிடத்தில் ரசாயனங்கள், ஹார்மோன் மாற்றங்கள், தொற்றுகள் ஆகியவை தூண்டக்கூடியவை.
இன்ஹேலர் என்பது ஆஸ்துமா சிகிச்சையின் மிக முக்கியமான, மிகப் பாதுகாப்பான வழி[4]. ஆனால், பலர் பயத்தாலும் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற எண்ணத்தாலோ இதைத் தவிர்க்கிறார்கள். ‘இன்ஹேலர் அடிமையாக்கும்’, ‘ஒரு முறை தொடங்கினால் நிறுத்த முடியாது’, ‘கடுமையான நிலையில் மட்டுமே வேண்டும்’, ‘மாத்திரை நல்லது’ என்பவை அனைத்தும் தவறு. உண்மை என்னவென்றால், இன்ஹேலர் அடிமையாக்காது. மருந்தை நேரடியாக நுரையீரலுக்குக் கொண்டு செல்கிறது… அதனால், விரைவான நிவாரணம், குறைந்த பக்க விளைவுகள். மாத்திரையை விடவும் ஊசியை விடவும் பாதுகாப்பானது. ஆரம்பத்திலேயே இன்ஹேலர் பயன்படுத்துவது நோய் மோசமாவதைத் தடுக்கிறது. இன்ஹேலரைத் தவிர்ப்பதே ஆஸ்துமா சரியாகக் கட்டுப்படாமைக்கு மிகப்பெரிய காரணம்.
ஆஸ்துமா பெரும்பாலும் குடும்பத்தில் பரவி வருகிறது. பெற்றோரில் ஒருவருக்கு ஆஸ்துமா இருந்தால், குழந்தைக்கு வரும் ஆபத்து 20 முதல் 30 சதவிகிதம். இருவருக்கும் ஆஸ்துமா இருந்தால், ஆபத்து 50 முதல் 60 சதவிகிதமாக அதிகரிக்கிறது. ஆனால், மரபியல் மட்டுமே முழுக் கதை அல்ல; சுற்றுச்சூழல் + வாழ்க்கைமுறை + தூண்டிகள் சேர்ந்தே ஆஸ்துமாவை உருவாக்குகின்றன.
உடல் பருமன்[5] நுரையீரல் மீது அழுத்தம் கொடுத்து அழற்சியை அதிகரிக்கிறது. ஜங்க் உணவு, குறைந்த பழங்கள்-காய்கறிகள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கின்றன. AC அறைகள், மோசமான காற்றோட்டம், பூஞ்சை, செல்லப்பிராணியின் உரோமம், கொசு காயில் புகை, ஊதுபத்தி… இவையெல்லாம் உட்புற மாசை உருவாக்குகின்றன. மன அழுத்தமும்[6] ஆஸ்துமா தாக்குதலை அதிகரிக்கும். குடும்பத்தினர் செய்ய வேண்டியவை: வீட்டை சுத்தமாகவும் காற்றோட்டமாகவும் வைக்கவும். வீட்டுக்குள் புகை பிடிக்க வேண்டாம். சூரிய ஒளியும் காற்றும் அறைக்குள் நுழையட்டும். ஆரோக்கியமான உணவு, தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கியமான எடை பராமரிப்பு அவசியம்.
அதிக மாசு உள்ள நாட்களில் காற்றின் தர அளவை (AQI) சரிபார்க்கவும். வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். N95 மாஸ்க் பயன்படுத்தவும். கோடை வெப்பத்தில் தண்ணீர் அதிகமாக அருந்தவும், மதிய வெயிலில் வெளியே செல்லாதீர்கள். தீபாவளி போன்ற பண்டிகை நேரங்களில் பட்டாசு புகைக்கு வெளிப்படுவதைத் தவிர்க்கவும். எப்போதும் உங்கள் ரிலீவர் இன்ஹேலரை உடன் எடுத்துச் செல்லவும்.
• இந்தியாவில் 3 முதல் 3.5 கோடி ஆஸ்துமா நோயாளிகள் உள்ளனர்.
• இன்ஹேலர் அடிமையாக்காது; இது மிகப் பாதுகாப்பான சிகிச்சை.
• ஆஸ்துமா எந்த வயதிலும் வரலாம்… இது குழந்தை நோய் மட்டுமல்ல.
• இரு பெற்றோருக்கும் ஆஸ்துமா இருந்தால் குழந்தைக்கு 50 முதல் 60 சதவிகிதம் ஆபத்து.
• தூசு பூச்சி, பூஞ்சை, புகை, வாசனை திரவியங்கள் முக்கியத் தூண்டிகள்.
• AQI சரிபாருங்கள், N95 மாஸ்க் பயன்படுத்துங்கள், தடுப்பு இன்ஹேலர் பயன்படுத்தவும்.
• தினசரி பிராணாயாமம், நடைப்பயிற்சி, ஆரோக்கிய உணவு நுரையீரலை வலுப்படுத்தும்.
Dr. C. செல்வி DTCD, EDARM, DNB[7]
(Pulmonary Medicine), FSM
நுரையீரல் மருத்துவ நிபுணர்
காவேரி மருத்துவமனை, சென்னை[8]
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011
Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/dont-worry-this-is-a-controllable-disease/
Copyright ©2026 Kauvery Blog unless otherwise noted.