55 வயதுக்கு மேற்பட்டவர்களின் அதிக கவனத்துக்கு…

by admin-blog-kh | May 29, 2025 5:46 am

சிறுநீர்ப்பை புற்றுநோயின் முதல் அறிகுறியே சிறுநீரில் ரத்தம் கலப்பதாகும். இதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவதால் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உயிரைக் காப்பாற்ற முடியும்.

ஏன் ஏற்படுகிறது? 

சிறுநீர்ப்பைப் புற்றுநோய்[1] என்பது சிறுநீர்ப்பையின் உள்ளுறைச் சுவரில் (யூரோதீலியம்) அசாதாரண செல்கள் கட்டுப்பாடற்று வளர்வதால் ஏற்படுகிறது. இது பெரும்பாலும் புகையிலை, புகை, தொழிற்சாலை ரசாயனங்கள், சில மருந்துகள் போன்ற புற்றுநோய் உண்டாக்கும் பொருட்களைச் சிறுநீரின் வழியாக சிறுநீர்ப்பை உள்ளுறையுடன் தொடர்பு கொள்வதால் உருவாகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 20,000 பேர் சிறுநீர்ப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர்

55 வயதுக்கு மேற்பட்டவர்கள். சிறுநீர்ப்பை புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால், குணமாகும் வாய்ப்பு 70-80 சதவிகிதம் வரை உள்ளது. நோய் முற்றிய நிலையில் கண்டறியப்பட்டாலோ, குணமாகும் வாய்ப்பு

15 சதவிகிதமாகக் குறைகிறது. எனவே, ஆரம்பத்திலேயே கண்டறிதல் மிகவும் முக்கியம்.

ஆபத்துக் காரணிகள் 

முக்கிய அறிகுறி மற்றும் கண்டறிதல் 

சிறுநீரில் ரத்தம் (ஹிமட்டூரியா) காணப்படுவதே இந்நோயின் முதன்மை அறிகுறியாகும். இது ஒரேயொரு முறை தென்பட்டாலும், வலி இல்லாமல் இருந்தாலும்கூட, புறக்கணிக்கக் கூடாது. இது உட்புற வெப்பம் (சூடு) அல்லது சிறிய தொற்றுநோய் என்று கண்டுகொள்ளாமல் விடக்கூடாது.

சிறுநீர்ப்பை புற்றுநோயின் மற்ற அறிகுறிகள்:

சிறுநீரில் ரத்தம் கண்டறியப்பட்டால், பின்வரும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்: 

  1. மருத்துவ வரலாறு மற்றும் உடல் பரிசோதனை
  2. சிறுநீர் பரிசோதனை – ரத்த செல்கள் மற்றும் புற்றுநோய் செல்களைக் கண்டறிய
  3. அல்ட்ராசவுண்ட் மற்றும் சிடி ஸ்கேன் – சிறுநீர்ப்பை சுவர் தடிமன், கட்டிகள் மற்றும் பரவல் பற்றி அறிய
  4. சிஸ்டோஸ்கோபி மற்றும் திசு மாதிரி பரிசோதனை – நேரடியாக சிறுநீர்ப்பையை பார்த்து, சந்தேகத்துக்குரிய பகுதிகளில் திசு மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய…
தொடர்புடைய வலைப்பதிவு: சிறுநீர் காசநோய் என்றால் என்ன?[4]

நோய் நிலைகள் மற்றும் சிகிச்சை முறைகள் 

மேற்பரப்பு சிறுநீர்ப்பை புற்றுநோய் 

தசை ஊடுருவும் சிறுநீர்ப்பை புற்றுநோய் 

மேம்பட்ட அல்லது பரவிய புற்றுநோய் 

நவீன அறுவைசிகிச்சை அணுகுமுறைகள் 

ரோபோட்டிக்-உதவி அறுவைசிகிச்சை: குறைந்த ரத்த இழப்பு, குறைந்த வலி, சிறிய வெட்டுக்கள், விரைவான குணமடைதல் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது. நவீன ரோபோட்டிக் அறுவைசிகிச்சை[6] முறைகள் சிக்கலான சிறுநீர்ப்பை புற்றுநோய் அறுவைசிகிச்சைகளை துல்லியமாகச் செய்ய உதவுகின்றன.

சிறுநீர்ப்பை மறுசீரமைப்பு முறைகள் 

இலியல் கண்டூயிட்: சிறுநீர்ப்பை அகற்றப்பட்ட பிறகு, குடலின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி சிறுநீரகங்களிலிருந்து வரும் சிறுநீரை வயிற்றின் பக்கவாட்டில் உள்ள ஒரு சிறிய துவாரம் (ஸ்டோமா) வழியாக வெளிப்புறப் பைக்கு வழிநடத்துகிறது.

நியோபிளாடர்: குடல் திசுக்களால் உருவாக்கப்பட்ட புதிய சிறுநீர்ப்பை, இயல்பான சிறுநீர் வெளியேற்றத்தை அனுமதிக்கிறது. இது சிறுநீர்ப்பை அகற்றப்பட்ட

50-60% நோயாளிகளுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குகிறது.

காண்டினென்ட் கியூட்டேனியஸ் ரெசர்வாயர்: சிறுநீரைச் சேமிக்க உடலுக்குள் ஒரு பை உருவாக்கப்படுகிறது, இது கத்தீட்டர் மூலம் அவ்வப்போது வடிகட்டப்படும்.

வாழ்வாதாரம் மற்றும் குணமடைதல் 

அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் புதிய வாழ்க்கைமுறைக்கு பழகவேண்டும். இதில் சுய கத்தீட்டர் அல்லது யூரோஸ்டோமி பை பராமரிப்பு அடங்கும். உடற்பயிற்சி சிகிச்சை, உளவியல் ஆதரவு, மற்றும் சரியான ஊட்டச்சத்து உணவுமுறையைப் பின்பற்றுதல்  ஆகியவை குணமடைதலை மேம்படுத்தும்.

மீண்டும் வருதல் மற்றும் பின்தொடர்தல் 

சிறுநீர்ப்பை புற்றுநோய் மீண்டும் வரக்கூடிய வாய்ப்பு அதிகம். எனவே, 3-6 மாதங்களுக்கு ஒருமுறை சிஸ்டோஸ்கோபி மற்றும் பிற பரிசோதனைகள் அவசியம். நோயாளிகள் மருத்துவ ஆலோசனையைத் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

இது சூடு அல்ல… ரொம்பவே சீரியஸ்! 

சிறுநீரில் ரத்தம் ‘உட்புற வெப்பத்தால்’ (சூடு) மட்டுமே ஏற்படுவதில்லை. வயதானவர்களுக்கு மட்டுமே இந்நோய் வரும் என்பதும் தவறான கருத்து. சிறுநீர்ப்பை புற்றுநோய் கண்டறியப்பட்டால் அனைத்து நிலைகளிலும் சிறுநீர்ப்பையை அகற்ற வேண்டும் என்பதும் உண்மையல்ல. எந்த வயதிலும், சிறுநீரில் ரத்தம் கண்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.

Dr. ஆர்த்தி. பி, [7]MBBS, MS., DrNB
சிறுநீரகவியல் ரோபோடிக்
காவேரி மருத்துவமனை, சென்னை[8]

 

 

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

சிறுநீரில் ரத்தம் வந்தால் என்ன காரணமாக இருக்கலாம்?

இது சிறுநீர்ப்பை புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்கக்கூடும். உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.

சிறுநீர்ப்பை புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள் என்ன? 

சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிக்கும்போது வலி, அடிவயிற்று வலி, உடல் சோர்வு போன்றவை முக்கிய அறிகுறிகள் ஆகும்.

ரோபோட்டிக் அறுவைசிகிச்சை என்ன நன்மைகள் தருகிறது? 

குறைந்த வலி, குறைந்த ரத்த இழப்பு, விரைவான குணமடைதல், சிறிய வெட்டுக்கள் ஆகியன முக்கிய நன்மைகள்.

சிறுநீர்ப்பை புற்றுநோய் மீண்டும் வர வாய்ப்பு உள்ளதா? 

ஆம். அதனால் சிஸ்டோஸ்கோபி மற்றும் பின்தொடர் பரிசோதனைகள் 3-6 மாதங்களுக்கு ஒருமுறை அவசியம்.

சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? 

புகையிலை பயன்பாடு, தொழிற்சாலை ரசாயனங்கள், வயது, மரபணு மாற்றங்கள், மற்றும் கீமோதெரபி ஆகியவை ஆபத்துக்காரணிகளாக இருக்கின்றன.

சிறுநீரில் ரத்தம் கண்டால் என்ன பரிசோதனைகள் செய்யப்படும்? 

சிறுநீர் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட், சிடி ஸ்கேன், சிஸ்டோஸ்கோபி மற்றும் திசு மாதிரி பரிசோதனை செய்யப்படும்.

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

Endnotes:
  1. சிறுநீர்ப்பைப் புற்றுநோய்: https://www.kauveryhospital.com/blog/cancer/bladder-cancer-diagnosis-staging-and-treatment-strategies/
  2. கீமோதெரபி: https://www.kauveryhospital.com/blog/cancer/chemotherapy-for-cancer-what-it-is-how-it-works-and-chemo-side-effects/
  3. அடிவயிற்று வலி: https://www.kauveryhospital.com/blog/gastroenterology/abdominal-pain-symptoms-causes-and-treatments/
  4. சிறுநீர் காசநோய் என்றால் என்ன?: https://www.kauveryhospital.com/blog/tamil-articles/what-is-urinary-tuberculosis/
  5. கதிர்வீச்சு சிகிச்சை: https://www.kauveryhospital.com/blog/cancer/side-effects-of-radiation-therapy/
  6. ரோபோட்டிக் அறுவைசிகிச்சை: https://www.kauveryhospital.com/kauvery-institute-of-robotic-surgery/
  7. Dr. ஆர்த்தி. பி, : https://www.kauveryhospital.com/doctors/chennai-vadapalani/urology/dr-aarthy-p/
  8. காவேரி மருத்துவமனை, சென்னை: https://www.kauveryhospital.com/our-locations/chennai-vadapalani/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/for-those-over-55-years-of-age-pay-special-attention/