by admin-blog-kh | February 17, 2026 6:39 am
டைப் 2 நீரிழிவு[1] உள்ளவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு பன்மடங்கு அதிகம். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையும், தொடர்ந்த கண்காணிப்பும் இந்த இரட்டை அபாயத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள உதவும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு மாரடைப்பு, பக்கவாதம், இதயச் செயலிழப்பு[2] போன்ற இதயப் பிரச்னைகள் வருவதற்கான அபாயம் மிக அதிகம். அதிக ரத்தச் சர்க்கரை, இன்சுலின் எதிர்ப்பு, அதிக கொலஸ்டிரால், உடல் பருமன்[3], உயர் ரத்த அழுத்தம்[4], நாள்பட்ட வீக்கம் ஆகியவை இதற்குக் காரணங்கள்.
நீரிழிவால் ஏற்படும் சிக்கல்கள் (சிறுநீரக பாதிப்பு, கண் பாதிப்பு போன்றவை) இதயப் பிரச்னைகளை மேலும் மோசமாக்கும். இதனால், நீரிழிவு உள்ளவர்கள் தங்கள் இதய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
வயது மற்றும் பாலினம்
வயதானவர்களுக்கும் ஆண்களுக்கும் இதய நோய் அபாயம் அதிகம். நீரிழிவு உள்ள பெண்களுக்கு ஒப்பீட்டளவில் அதிக அபாயம் இருக்கிறது. அமெரிக்க இந்தியர்கள் மற்றும் தென்னாசியர்களுக்கு இளம் வயதிலேயே கடுமையான இதய நோய் வரும் வாய்ப்பு உண்டு.
வாழ்க்கைமுறை
தொடர் உடற்பயிற்சி இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. குறிப்பாக உயர் ரத்த அழுத்தம் அல்லது ரத்தச் சர்க்கரை[5] உள்ளவர்களுக்கு இது மிக முக்கியம். புகைப்பழக்கத்தை நிறுத்துவதும் இதய நோய் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும்.
சமூகக் காரணிகள்
பொருளாதார நிலை, சுகாதார வசதிகள், சமூக ஆதரவு ஆகியவை நீரிழிவு மற்றும் இதய நோயை மாற்றியமைக்கின்றன. குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு நீரிழிவு விகிதமும், இதய நோய் அபாயமும் அதிகம்.
வளர்சிதை மாற்றக் காரணிகள்
அதிக ரத்தச் சர்க்கரை மற்றும் இன்சுலின் எதிர்ப்பு, நீரிழிவு இல்லாதவர்களுக்கும் கூட இதய நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. இன்சுலின் எதிர்ப்பை நீரிழிவு நோயாளிகளின் இதய நோய்க்கான முக்கிய காரணியாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
ஆரோக்கியமான உணவு
புதிய பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள், முழு தானியங்களை அதிகம் சாப்பிடுங்கள். சிப்ஸ், இனிப்புகள், துரித உணவு, ஊறுகாய், ரெடிமேட் உணவுகளைக் குறையுங்கள். இனிப்பு பானங்களுக்குப் பதில் தண்ணீர் குடியுங்கள். மது அருந்துதலைக் குறையுங்கள். இரவு 8 மணிக்குள் இரவு உணவை முடியுங்கள். இது சர்க்கரைக் கட்டுப்பாட்டையும், வளர்சிதை மாற்றத்தையும், செரிமானத்தையும் மேம்படுத்தும்.
ஆரோக்கியமான உடல் எடை
சிறிதளவு எடை குறைப்பு கூட ட்ரைகிளிசரைடு மற்றும் ரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். லட்சிய உடல் எடை = (உயரம் சென்டிமீட்டரில் – 100) என்ற கணக்கு இதற்குப் பொருந்தும்.
தொடர் உடற்பயிற்சி
வழக்கமான உடல் செயல்பாடு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, நீரிழிவை நிர்வகிக்க உதவுகிறது. இது ரத்தச் சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தி, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
மன அழுத்த மேலாண்மை
மன அழுத்தம்[7] ரத்த அழுத்தத்தை உயர்த்தி, அதிகமாகச் சாப்பிடுவது அல்லது குடிப்பது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களைத் தூண்டும். நண்பர்கள், குடும்பத்தினரிடம் பேசுங்கள். உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள். தேவைப்பட்டால் மனநல நிபுணரின் உதவி பெறுங்கள்[8].
A – HbA1c[9]: மூன்று மாத சராசரி ரத்தச் சர்க்கரை அளவை வழக்கமாகப் பரிசோதித்து, அதை இலக்கு வரம்பில் பராமரிக்க வேண்டும்.
B – Blood Pressure (ரத்த அழுத்தம்): 140/90 mmHg க்குக் கீழ் வைத்திருங்கள் (அல்லது உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவு).
C – Cholesterol (கொலஸ்டிரால்): கொலஸ்டிரால்[10] அளவுகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள்.
நீரிழிவும் இதய நோயும் ஒன்றோடொன்று இணைந்த ஆரோக்கியப் பிரச்னைகள் என்பதைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். ஆரம்ப கட்ட தலையீடும், தொடர் மேலாண்மையும் விளைவுகளை மேம்படுத்தி, மேலும் சிக்கல்களைத் தடுக்க உதவும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, எடைக் கட்டுப்பாடு இவை தடுப்புக்கு உதவுகின்றன. HbA1c, ரத்த அழுத்தம், கொலஸ்டிரால், மன அழுத்தம் ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணியுங்கள்.
Dr. ஜி. ஜூடா பாஸ்கர்[11]
MBBS, DNB (General Medicine), DrNB (Cardiology)
இதய நோய் சிறப்பு மருத்துவர்
மா காவேரி மருத்துவமனை – திருச்சி[12]
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011
Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/how-to-deal-with-double-jeopardy/
Copyright ©2026 Kauvery Blog unless otherwise noted.