இழந்தால் திரும்பாது!

by admin-blog-kh | April 15, 2026 12:52 pm

கண்களால் பார்க்கிறோம், காதுகளால் கேட்கிறோம்இந்த இரண்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை எவ்வளவு கடினம் என்று நினைத்துப் பாருங்கள். ஆனால், பார்வை பிரச்னையை உடனே உணர்கிறோம்; கேட்கும் திறன் மெள்ள மெள்ள குறையும்போதோ பலரும் கவனிப்பதில்லை.  

இந்தியாவில் நிலைஆபத்தான எண்கள் 

இந்தியாவில் சுமார் 6 கோடியே 30 லட்சம் பேர் – மொத்த மக்கள்தொகையில் 6.3 சதவிகிதம் – கணிசமான செவித்திறன் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2030-ம் ஆண்டளவில் 50 கோடியைத் தாண்டும் என்று மதிப்பிடப்படுகிறது. இது வெறும் புள்ளிவிவரம் அல்ல… இன்று கவனிக்காவிட்டால், நாளை மிகப் பெரிய நெருக்கடியாக மாறும் நிலை.

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் காரணங்கள் வேறு வேறு 

குழந்தைகளுக்கு ஏற்படும் செவித்திறன் இழப்பில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானவை மரபியல் காரணங்களால் வருகின்றன. பெரியவர்களுக்கோ வயதாவது, தொடர்ந்து சத்தமான சூழலில் இருப்பது, உயர் ரத்த அழுத்தம்[1], சர்க்கரை நோய் ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. இன்றைய புதிய போக்கு என்னவென்றால்… இளைஞர்களிடையே இயர்ஃபோன் பயன்பாடு காரணமாக செவித்திறன் இழப்பு வேகமாக அதிகரித்துவருகிறது.

இந்த அறிகுறிகள் தெரிந்தால்… 

பேச்சை தெளிவாகக் கேட்க முடியாமல் போவது, காதில் ‘டீன்’ என்று ஒலி கேட்பது (Tinnitus[2]), பேசும்போது சொற்களைத் திரும்பக் கேட்கும் வழக்கம் – இவை செவித்திறன் பிரச்னையின் ஆரம்ப சமிக்ஞைகள். குடும்பத்தில் யாருக்கேனும் செவித்திறன் பிரச்னை இருந்தால், அல்லது இந்த அறிகுறிகள் தெரிந்தால், உடனே ENT நிபுணரை அணுகுவது அவசியம்[3]. தாமதிக்கும்போது பாதிப்பு நிரந்தரமாகிவிடும்.

தொழில்நுட்பம் தரும் நம்பிக்கை 

செவித்திறன் இழப்புக்கு மிகவும் மேம்பட்ட சிகிச்சை வழிகள் உள்ளன. காது கேட்கும் கருவிகள் (Hearing Aids) இப்போது மிகவும் சிறியதாகவும் அழகாகவும் தயாரிக்கப்படுகின்றன. காதணி போலவே காதில் பொருத்திக்கொள்ளலாம், யாரும் கவனிக்க மாட்டார்கள். கடுமையான நிலையில் Cochlear Implant மற்றும் Middle Ear Implant ஆகிய அறுவைசிகிச்சைகள் மூலம் கேட்கும் திறனை மீட்டெடுக்கலாம்.

Also Read:  8 Tips in Choosing the best Hearing-Aid for an Elder[4]

காது கேட்கும் கருவி வேண்டாம்என்கிற தவறான அச்சம் 

‘காது கேட்கும் கருவி பொருத்திக்கொண்டால் முதியவர் மாதிரி தெரிவோம்’ என்கிற தயக்கம் பலருக்கும் இருக்கிறது. இது முற்றிலும் தவறான எண்ணம். கண்ணாடி அணிவது தோல்வியல்ல… அதே போலத்தான் காது கேட்கும் கருவியும். சிகிச்சை எடுக்காமல் தாமதிக்கும்போது, மூளையின் கேட்கும் திறனே வலுவிழந்துவிடும்.

இயர்ஃபோன்இளைஞர்களுக்கு ஆபத்து 

60 dB-க்கும் அதிகமான ஒலியைத் தொடர்ந்து கேட்டால் காது நரம்புகள் நிரந்தரமாகவே பாதிக்கப்படும். ‘60/60 விதி’ கடைப்பிடிக்கவும்… அதிகபட்ச ஒலியளவின் 60 சதவிகிதத்துக்கும் குறைவாக, நாளொன்றுக்கு 60 நிமிடத்துக்கும் மிகாமல் இயர்ஃபோன் பயன்படுத்துங்கள்.

புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஸ்கிரீனிங் அவசியம் 

பிறந்த குழந்தைக்கு செவித்திறன் சரியாக இருக்கிறதா என்பதை BAER (Brainstem Auditory Evoked Response) மற்றும் Otoacoustic Emissions பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். இந்தப் பரிசோதனைகள் வலியற்றவை; சில நிமிடங்களிலேயே முடிந்துவிடும். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், குழந்தையின் பேச்சு மற்றும் மொழி வளர்ச்சியை பாதிக்காமல் சிகிச்சையைத் தொடங்கலாம்.

மூன்று எளிய பழக்கங்கள்ஆயுள் முழுதும் காக்கும்

  1. 60/60 விதியை கடைப்பிடிக்கவும் – இயர்ஃபோன் ஒலியளவும் நேரமும் கட்டுப்படுத்துங்கள்.
  2. 40 வயதுக்கு மேல் ஆண்டுக்கொரு முறை செவித்திறன் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
  3. ஆலை, கட்டுமானப் பகுதி, விழாக்கள் போன்ற சத்தமான இடங்களில் காது பாதுகாப்புக் கருவி (Ear Protection) அணிந்துகொள்ளுங்கள். கேட்கும் திறன் ஒரு மதிப்புமிக்க கொடை. அதை இழந்த பின் வருந்துவதைவிட, இன்றே பாதுகாப்போம்!

இந்தியாவில் 6 கோடியே 30 லட்சம் பேர் செவித்திறன் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக அளவு இயர்ஃபோன் பயன்பாடு இளைஞர்களுக்கு நிரந்தர காது சேதத்தை ஏற்படுத்தலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் சிகிச்சை மிகவும் எளிது!

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு இந்தப் பரிசோதனைகளைச் செய்யுங்கள்

BAER Test (Brainstem Auditory Evoked Response), Otoacoustic Emissions (OAE) Test. வலியில்லாத இந்தப் பரிசோதனைகள் சில நிமிடங்களில் முடியும். செவித்திறன் குறைபாட்டை ஆரம்பத்திலேயே கண்டறிவதே குழந்தையின் மொழி வளர்ச்சிக்கு அடிப்படை!

 

Dr. M. ஹரி மெய்யப்பன், MBBS, MS (ENT)[5]
ENT தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர்
மா காவேரி மருத்துவமனை, திருச்சி[6]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. உயர் ரத்த அழுத்தம்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/high-blood-pressure/
  2. Tinnitus: https://www.kauveryhospital.com/news-events/october-tinnitus/
  3. உடனே ENT நிபுணரை அணுகுவது அவசியம்: https://www.kauveryhospital.com/centers-of-excellence-and-specialties/ent/
  4. 8 Tips in Choosing the best Hearing-Aid for an Elder: https://www.kauveryhospital.com/blog/ent/8-tips-in-choosing-the-best-hearing-aid-for-an-elder/
  5. Dr. M. ஹரி மெய்யப்பன், MBBS, MS (ENT): https://www.kauveryhospital.com/doctors/maa-kauvery-trichy/otorhinolaryngology/dr-m-hari-meyyappan/
  6. மா காவேரி மருத்துவமனை, திருச்சி: https://www.kauveryhospital.com/maa-kauvery-trichy/women-children-hospital/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/if-lost-it-will-not-return/