முதுகெலும்பு வளைகிறதா? சீக்கிரம் கண்டறியுங்கள்!

by admin-blog-kh | July 22, 2026 9:52 am

முதுகெலும்பு பக்கவாட்டில் வளையும் ஸ்கோலியோசிஸ்[1], உலகெங்கும் சுமார் இரண்டு முதல் மூன்று சதவிகிதக் குழந்தைகளைப் பாதிக்கிறது. ஆரம்பத்தில் வலி இருக்காது என்பதால் பெரும்பாலானோர் இதை அறியாமலேயே இருக்கிறார்கள். சரியான நேரத்தில் கண்டறிந்தால், அறுவை சிகிச்சை இல்லாமலேயே பல குழந்தைகளை இயல்பு வாழ்க்கைக்குக் கொண்டுவர முடியும்.

‘என் பையனோட தோள்பட்டை ஒரு பக்கம் கொஞ்சம் தாழ்வா இருக்கு; வளர்ற வயசுல அப்படித்தான் இருக்கும்னு விட்டுட்டோம்…’ என்கிறார்கள் பல பெற்றோர். ஆனால், அது வெறும் தோரணைப் பிரச்னை அல்ல; ஸ்கோலியோசிஸ் எனப்படும் முதுகெலும்பு வளைவாக இருக்கலாம்[2].

ஸ்கோலியோசிஸ் என்பது முதுகெலும்பு நேராக இல்லாமல் பக்கவாட்டில் வளைந்து, சற்று முறுக்கிக்கொள்ளும் ஒரு கட்டமைப்புக் குறைபாடு. இது வெறும் உட்காரும் தோரணையின் தவறு அல்ல. உலக அளவில் இரண்டு முதல் மூன்று சதவிகிதக் குழந்தைகளுக்கு இது வருகிறது[3].

நம் மக்கள்தொகை அளவில் இது பல லட்சம் பேரைக் குறிக்கிறது.

இதில் பல வகைகள் உண்டு. மிகப் பொதுவானது இடியோபதிக் வகை; இதன் சரியான காரணம் தெரியாது, பெரும்பாலும் 10 முதல் 16 வயது வளர்ச்சிக் கட்டத்தில் தோன்றுகிறது. பிறவியிலேயே முதுகெலும்பு சரியாக உருவாகாததால் வரும் வகை, மற்றும் 50 வயதுக்கு மேல் தேய்மானத்தால் வரும் வகையும் உண்டு. குறிப்பாக வளரும் வயதுப் பெண் குழந்தைகளுக்கு இந்த வளைவு வேகமாக அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு.

இந்த நோயின் மிகப் பெரிய ஆபத்து, அது அமைதியாக வளர்வதுதான். ஆரம்ப நிலையில் வலி இருக்காது; தளர்வான உடைகளுக்குள் வளைவும் தெரியாது. அதனால்தான் பலர், மூச்சுத்திணறல், தோற்றமாற்றம், தன்னம்பிக்கைக் குறைவு போன்றவை வந்த பிறகே மருத்துவரிடம் வருகிறார்கள்.

எனவே, பெற்றோரும் ஆசிரியர்களும் சில அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும். சமமற்ற தோள்பட்டைகள், ஒரு தோள் எலும்பு துருத்திக்கொண்டிருப்பது, சமமற்ற இடுப்பு, ஒரு இடுப்பு உயரமாக இருப்பது, ஒரு பக்கம் சாய்ந்து நிற்பது ஆகியவை முக்கிய அறிகுறிகள்.

Also Read: அலட்சியப் போக்குகளால் பாதிப்புக்குள்ளாகும் தண்டுவடம்[4]

இங்கே ஒரு தவறான எண்ணத்தைக் களைய வேண்டும். கனமான பள்ளிப்பை சுமப்பதோ, தவறாக உட்காருவதோ, மொபைல் அதிகம் பார்ப்பதோ ஸ்கோலியோசிஸை உருவாக்குவதில்லை. பெரும்பாலான குழந்தைகளில் இதன் காரணம் தெரியாது; குடும்ப மரபு தெளிவான பங்கு வகிக்கிறது. குடும்பத்தில் யாருக்காவது இது இருந்திருத்தல், வளர்ச்சிக் கட்டத்தில் வேகமாக உயரம் வளர்தல், சில நரம்புத்தசை நிலைகள் ஆகியவை உண்மையான ஆபத்துக் காரணிகள்.

சிகிச்சை மூன்று விஷயங்களைப் பொறுத்தது. வளைவின் தீவிரம், குழந்தையின் வயதும் மீதமுள்ள வளர்ச்சியும், வளைவு அதிகரித்துக்கொண்டிருக்கிறதா என்பது. சிறிய வளைவுகளுக்கு, அவ்வப்போது எக்ஸ்ரே எடுத்துக் கண்காணித்தால் போதும். வளரும் குழந்தைகளில் நடுத்தர வளைவுகளுக்கு, அது அதிகரிக்காமல் தடுக்க பிரேஸ் (முதுகுப் பட்டை) பயன்படுத்தப்படுகிறது. வளைவு கடுமையாகி, சமநிலை, தோற்றம், நுரையீரல் செயல்பாடு அல்லது வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும்போது அறுவை சிகிச்சை பரிசீலிக்கப்படுகிறது. இன்றைய அறுவை சிகிச்சை வெகுவாக முன்னேறியுள்ளது.

நவீன இமேஜிங், ஸ்பைனல் நேவிகேஷன், நரம்புக் கண்காணிப்பு ஆகியவற்றால் இது மிகப் பாதுகாப்பானதாகவும் துல்லியமானதாகவும் மாறியுள்ளது. காவேரி மருத்துவமனையில் திருகுகளைத் துல்லியமாகப் பொருத்த உதவும் ஓ ஆர்ம் (O-arm) நேவிகேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது[5]. குருதி இழப்பு குறைவு, விரைவான மீட்சி, சிறந்த தோற்றம் இதன் பலன்கள்.

ஸ்கோலியோசிஸ் என்பது வெறும் முதுகெலும்பு நிலை மட்டுமல்ல. அது குழந்தையை உணர்வுரீதியாகவும் பாதிக்கும். தோற்றத்தில் வரும் மாற்றம், பதின்வயதினரின் தன்னம்பிக்கையையும் சமூகப் பழக்கத்தையும் பாதிக்கலாம். ஆனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால், பெரும்பாலான குழந்தைகள் முழுமையான, சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ முடியும்.

பெற்றோர்கள் முதலில் பதற வேண்டாம். தகுதிவாய்ந்த முதுகெலும்பு நிபுணரை விரைவில் அணுகுங்கள், வளர்ச்சிக் கட்டத்தில் தவறாமல் கண்காணியுங்கள், குழந்தையை உடல் இயக்கத்திலும் தன்னம்பிக்கையிலும் ஊக்குவியுங்கள். நிரூபிக்கப்படாத மாற்று சிகிச்சைகளை மட்டுமே நம்பி தாமதிப்பது தவறு. ஸ்கோலியோசிஸ் உள்ள குழந்தைகளும் பள்ளி, விளையாட்டு, எதிர்காலம் என எல்லாவற்றிலும் இயல்பாகச் சிறக்க முடியும். விழிப்புணர்வும் சரியான நேரச் சிகிச்சையுமே அதன் ரகசியம்.

 

வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய சோதனை!

ஸ்கோலியோசிஸை ஆரம்பத்திலேயே கண்டறிய ஒரு மிக எளிய வழி உண்டு; இதை ‘முன்னோக்கி குனியும் சோதனை’ (Forward Bend Test) என்கிறோம். குழந்தையை, இரு கைகளையும் தளர்வாகத் தொங்கவிட்டு, முழங்கால்களை மடக்காமல் இடுப்பில் இருந்து முன்னோக்கிக் குனியச் சொல்லுங்கள். அப்போது முதுகின் ஒரு பக்கம் மற்ற பக்கத்தைவிட உயர்ந்து, விலா எலும்புப் பகுதி துருத்திக்கொண்டிருந்தால், அது ஸ்கோலியோசிஸின் அறிகுறியாக இருக்கலாம். இதைப் பள்ளிகளில் வழக்கமான சோதனையாகச் செய்தால், பல குழந்தைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, கடுமையான வளைவுகளைத் தடுக்க முடியும். இத்தகைய அறிகுறி தெரிந்தால், தாமதிக்காமல் முதுகெலும்பு நிபுணரை அணுகுங்கள்.

 

Dr. ஜி. பாலமுரளி MBBS, MRCS (Ed), MD (UK)[6]
முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்
காவேரி மருத்துவமனைசென்னை[7]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

 

 

Endnotes:
  1. முதுகெலும்பு பக்கவாட்டில் வளையும் ஸ்கோலியோசிஸ்: https://www.kauveryhospital.com/blog/neurology/straightening-the-curve-understanding-scoliosis-and-when-surgery-can-help/
  2. முதுகெலும்பு வளைவாக இருக்கலாம்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/spinal-curvature-disorder/
  3. உலக அளவில் இரண்டு முதல் மூன்று சதவிகிதக் குழந்தைகளுக்கு இது வருகிறது: https://www.kauveryhospital.com/blog/spine/paediatric-scoliosis/
  4. அலட்சியப் போக்குகளால் பாதிப்புக்குள்ளாகும் தண்டுவடம்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/spinal-cord-affected-by-negligent-tendencies/
  5. காவேரி மருத்துவமனையில் திருகுகளைத் துல்லியமாகப் பொருத்த உதவும் ஓ ஆர்ம் (O-arm) நேவிகேஷன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது: https://www.kauveryhospital.com/o-arm-imaging-in-chennai/
  6. Dr. ஜி. பாலமுரளி MBBS, MRCS (Ed), MD (UK): https://www.kauveryhospital.com/doctors/chennai/spine-surgery/dr-g-balamurali/
  7. காவேரி மருத்துவமனைசென்னை: https://www.kauveryhospital.com/our-locations/chennai/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/is-your-spine-curving-detect-it-early/