அமைதியான அச்சுறுத்தலை எதிர்கொள்வோம்!

by admin-blog-kh | January 6, 2026 8:01 am

எலும்புத்துளைநோய் அல்லது ஆஸ்டியோபொரோசிஸ்[1] என்பது எலும்புகள் பலவீனமடைந்து, சிறிய அதிர்ச்சியிலும் எளிதில் முறிந்துபோகக்கூடிய நிலையாகும். இது ‘அமைதியான நோய்’ என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், எலும்பு முறிவு ஏற்படும் வரை பெரும்பாலும் அறிகுறிகள் தெரிவதில்லை. உலகம் முழுவதும் 20 கோடிக்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவரும்[2], ஆண்களில் ஐந்தில் ஒருவரும் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

எலும்புத்துளைநோய் ஏற்படுவது எப்படி

நமது எலும்புகள் தொடர்ந்து புதுப்பிக்கப்படும் உயிருள்ள திசுக்களாகும். இளமையில், புதிய எலும்புத் திசுக்கள் பழைய திசுக்களைவிட வேகமாக உருவாகின்றன. வயதாகும்போது, எலும்பு இழப்பு வேகம் அதிகரித்து, புதிய எலும்பு உருவாகும் வேகம் குறைகிறது. இதன் விளைவாகவே துளைகள் நிறைந்த கடற்பஞ்சு போல் மாறும் எலும்புகள் உடையக்கூடியதாகி விடுகின்றன.

ஆபத்துக் காரணிகள் 

மாற்ற முடியாத காரணிகள்

மாற்றக்கூடிய காரணிகள்

அறிகுறிகள் மற்றும் கண்டறிதல் 

ஆரம்ப நிலையில் அறிகுறிகள் இல்லாமலிருக்கலாம். முற்றிய நிலையில்…

எலும்பு அடர்த்தி பரிசோதனை (DEXA Scan[6]) மூலம் இந்நோயைக் கண்டறியலாம். 65 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் கட்டாயம் இப்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

Also Read: Spinal Fractures from Osteoporosis – Diagnosis and Treatment[7]

தடுப்பு முறைகள் 

  1. ஊட்டச்சத்து: தினமும் 1000-1200 மில்லிகிராம் கால்சியம் (பால் பொருட்கள், கீரைகள், பாதாம்) மற்றும் 800-1000 IU வைட்டமின் டி (சூரிய ஒளி, மீன், முட்டை) எடுத்துக்கொள்ளுதல்.
  2. உடற்பயிற்சி[8]: வாரத்துக்கு குறைந்தது 150 நிமிடங்கள் எடை தாங்கும் பயிற்சிகள் (நடைப்பயிற்சி, நடனம், யோகா).
  3. வாழ்க்கைமுறை மாற்றங்கள்: புகைபிடிப்பதை நிறுத்துதல், மது அருந்துவதைக் குறைத்தல், கஃபின் பயன்பாட்டை மட்டுப்படுத்துதல்.
  4. விழுதல் தடுப்பு: வீட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள், நல்ல பார்வை பராமரிப்பு, பொருத்தமான காலணிகள்.

சிகிச்சை முறைகள் 

2025-ம் ஆண்டின் புதிய சிகிச்சை வழிகாட்டுதல்களின்படி, எலும்பு முறிவு ஆபத்து அளவைக் கணக்கிட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிஸ்ஃபோஸ்ஃபோனேட் மருந்துகள் (அலென்ட்ரோனேட், ரைசட்ரோனேட்) முதல்நிலை சிகிச்சையாக பரிந்துரைக்கப்படுகின்றன. டெனோசுமாப், ஹார்மோன் சிகிச்சை போன்ற மாற்று முறைகளும் உள்ளன.

எலும்புத்துளைநோய் தடுக்கக்கூடிய மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய நோயாகும். சரியான உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலம் வலிமையான எலும்புகளை பராமரிக்கலாம். வயதானவர்கள் தவறாமல் எலும்பு அடர்த்தி பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். நினைவில் கொள்ளுங்கள்… வலிமையான எலும்புகளே செயல்திறன்மிக்க வாழ்க்கைக்கு அடித்தளம்!

 

எலும்பு ஆரோக்கியத்துக்கான சூப்பர் உணவுகள்

ராகி (கேழ்வரகு): இந்தியாவின் பாரம்பரிய தானியமான ராகியில் 100 கிராமுக்கு 344 மி.கி கால்சியம் உள்ளது – பாலை விட மூன்று மடங்கு அதிகம்! ராகி கஞ்சி, தோசை, இட்லி செய்து சாப்பிடலாம்.

எள்: கருப்பு எள்ளில் வெள்ளை எள்ளை விட அதிக கால்சியம் உள்ளது. தினமும் ஒரு டீஸ்பூன் எள் சாப்பிடுவது எலும்புகளை வலுப்படுத்தும்.

முருங்கைக்கீரை: ‘அதிசயக் கீரை’ என்று அழைக்கப்படும் முருங்கையில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. வாரம் இருமுறை முருங்கைக்கீரை சூப் அருந்தலாம்.

பாசிப்பயறு: புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த பாசிப்பயறு எலும்பு உற்பத்தியை தூண்டுகிறது. முளைகட்டிய பயறு இன்னும் சிறந்தது.

சூரியகாந்தி விதைகள்: மக்னீசியம் நிறைந்த இவ்விதைகள் கால்சியம் உறிஞ்சுதலுக்கு உதவுகின்றன. சாலட்டில் தூவி சாப்பிடலாம். வெறும் வாணலியில் வறுத்தும் அப்படியே சாப்பிடலாம்.

உங்கள் கவனத்துக்கு… காபி, டீ அருந்திய பின் ஒரு மணிநேரம் கழித்தே கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவும். கஃபின் கால்சியம் உறிஞ்சுதலை தடுக்கும்!

 

Dr. மணிவண்ணன்[9], MS (Ortho)
எலும்பியல், ஆர்த்ரோஸ்கோபி, மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்
காவேரி மருத்துவமனைசேலம்[10]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. ஆஸ்டியோபொரோசிஸ்: https://www.kauveryhospital.com/blog/orthopedics/treatment-for-osteoporosis/
  2. இந்தியாவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவரும்: https://www.kauveryhospital.com/blog/orthopedics/what-women-should-know-about-osteoporosis/
  3. கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறைபாடு: https://www.kauveryhospital.com/blog/orthopedics/preventing-osteoporosis-calcium-vitamin-d-and-strength-training-tips/
  4. புகைபிடித்தல்: https://www.kauveryhospital.com/blog/lifestyle/smoking-is-injurious-to-health-myths-facts-and-risks/
  5. முதுகுவலி: https://www.kauveryhospital.com/blog/orthopedics/5-signs-your-back-pain-might-be-an-emergency/
  6. DEXA Scan: https://www.kauveryhospital.com/blog/orthopedics/what-is-a-dexa-scan-and-how-is-it-done/
  7. Spinal Fractures from Osteoporosis – Diagnosis and Treatment: https://www.kauveryhospital.com/blog/orthopedics/spinal-fractures-from-osteoporosis-diagnosis-and-treatment/
  8. உடற்பயிற்சி: https://www.kauveryhospital.com/blog/orthopedics/weight-bearing-exercises-6-effective-workouts-for-strengthening-bones/
  9. Dr. மணிவண்ணன்: https://www.kauveryhospital.com/doctors/salem/orthopaedics/dr-manivannan/
  10. காவேரி மருத்துவமனைசேலம்: https://www.kauveryhospital.com/our-locations/salem/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/lets-confront-the-silent-threat/