by admin-blog-kh | August 29, 2025 9:22 am
மயோனஸ் என்பது திக்கான மற்றும் க்ரீமியான தன்மையுடன் இருக்கும் ஓர் உணவுப் பொருளாகும். இதை பக்க உணவாகப் (சைடு டிஷ்) பயன்படுத்தி சாப்பிடுகின்றனர். இதை அதிகமாக தந்தூரி, கிரில், பார்பிக்யூ, ஷவர்மா போன்ற உணவுகளுடன் சேர்த்தே சாப்பிடுகின்றனர்.
பச்சை முட்டை, சர்க்கரை, எண்ணெய், வினிகர், எலுமிச்சைச் சாறு போன்றவற்றைச் சேர்த்து மயோனஸ் தயாரிக்கப்படுகிறது.
அண்மையில் தமிழ்நாடு அரசு மயோனஸ் விற்பனையைத் தடை செய்துள்ளது. இதற்கு
முக்கியமான காரணம், மயோனஸ் உட்கொண்ட சிலருக்கு பாக்டீரியா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அதாவது ஈ.கோலி (E.Coli – Escherichia coli[1]), சால்மோனெல்லா பாக்டீரியா (Salmonella bacteria) என்ற நோய்த்தொற்றுகள் பாதித்துள்ளன.
இவை பெரும்பாலும் வயதானவர்கள், குழந்தைகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்களைப் பாதிக்கும். அதோடு, பல கடைகளில் மயோனஸைத் தயாரித்து 2-3 நாட்களுக்குக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பராமரித்து விற்பனை செய்கின்றனர். இதனால், மயோனஸில் அதிக பாக்டீரியா வளர்ச்சி ஏற்படும். அதனால், தமிழ்நாடு அரசு மயோனஸ் விற்பனையைத் தடை செய்துள்ளது.
மயோனஸில் பச்சை முட்டையைச் சேர்ப்பதால் மட்டும் பாதிப்பு ஏற்படுவதில்லை. அதில் வெள்ளைச் சர்க்கரை, அதிகப்படியான எண்ணெய் சேர்ப்பதாலும் உடல் பருமன்[2], மாரடைப்பு[3], நீரிழிவு[4] ஏற்படும் அபாயம் உள்ளது. மயோனஸ் என்பது ஓர் ஆபத்தான உணவுப் பொருளாகும். அதனால், மயோனஸைத் தவிர்ப்பது நல்லது.
மயோனஸ் தயாரிக்கும் முறையில் பச்சை முட்டை, சர்க்கரை, எண்ணெய், சுவையைக் கூட்டுவதற்காக வினிகர், எலுமிச்சைச் சாறு போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் கடைகளில் பாக்கெட்டில் வாங்கும் மயோனஸில் பாதுகாப்புப் பொருட்கள் (ப்ரிசர்வேட்டிவ்), செயற்கை நிறச் சாயங்கள் மற்றும் செயற்கைச் சுவையூட்டிகள் (ஃப்ளேவர்) ஆகியவையும் சேர்க்கப்படுகின்றன. இதனால் மயோனஸ் மிகவும் தீங்கு விளைவிக்கும் உணவாக மாறுகிறது.
மயோனஸ் என்பது பல ஆரோக்கிய ஆபத்துகளைக் கொண்ட உணவுப் பொருள் என்பது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. பாக்டீரியா தொற்றுகள், உடல் பருமன், இதய நோய்கள்[5], நீரிழிவு போன்ற பல பிரச்னைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. தமிழ்நாடு அரசின் தடையும் இதன் ஆபத்தான தன்மையையே காட்டுகிறது.
புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, தக்காளி சட்னி போன்றவை சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
தயிருடன் வெள்ளரிக்காய், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துத் தயாரிக்கலாம்.
அவகேடோ டிப்: பழுத்த அவகேடோவை நசுக்கி, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து சுவையான டிப் தயாரிக்கலாம்.
உணவுப் பொருட்களை சரியான வெப்பநிலையில் (4°C-க்கு கீழ்) பாதுகாக்க வேண்டும்.
பாக்கெட் உணவுகளின் காலாவதி தேதியை எப்போதும் சரிபார்த்து வாங்கவும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், ஹாட் டாக், சாசேஜ், பேக்கன் போன்றவற்றில் நைட்ரேட்கள் மற்றும் அதிக உப்பு உள்ளது.
பிஸ்கெட், கேக், பாஸ்ட்ரி, வெண்ணெய் போன்றவை இதய நோயை ஏற்படுத்தும்.
கார்பனேட்டட் பானங்கள், எனர்ஜி டிரிங்க்ஸ், பாக்கெட் பழச்சாறுகள் ஆகியவை நீரிழிவுக்கு வழிவகுக்கும்.
சிப்ஸ், பொறித்த கோழி, வடை போன்றவை உடல் பருமனை ஏற்படுத்தும்.
மகாலட்சுமி முருகேசன்
சீனியர் கிளினிக் டயட்டீசியன்
காவேரி மருத்துவமனை, திருச்சி
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Vadapalani & Radial Road), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Vadapalani – 044 4000 6000 • Chennai Radial Road – 044 40504050 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011
Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/mayonnaise-is-a-food-that-is-dangerous-to-health/
Copyright ©2026 Kauvery Blog unless otherwise noted.