பயம் வேண்டாம்… நம்பிக்கை வேண்டும்!

by admin-blog-kh | June 8, 2026 6:31 am

ஜூன் 8 – உலக மூளைக் கட்டி தினம் (World Brain Tumour Day). ‘மூளையில் கட்டி இருக்கிறதுஎன்கிற வார்த்தையைக் கேட்டாலே பலருக்கும் பதற்றம் ஏற்படும். ஆனால், மூளைக் கட்டிகள் அனைத்தும் புற்றுநோய் அல்லபல கட்டிகள் அறுவைசிகிச்சை மூலம் முழுமையாக நீக்கப்பட்டு, நோயாளி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம்.

சமீப ஆண்டுகளில் மூளைக் கட்டிகள் அதிகமாகக் கண்டறியப்படுவதற்கு முக்கிய காரணம்… CT மற்றும் MRI ஸ்கேன்கள் சென்னை, தமிழ்நாடு முழுவதும் எளிதாகக் கிடைப்பதுதான். கண்டறிதல் அதிகரித்துள்ளதே தவிர, பீதி அடைய வேண்டியதில்லை.

எந்தத் தலைவலியைக் கவனிக்க வேண்டும்

தலைவலி என்பது மிகவும் சாதாரணமான பிரச்னை[1]. ஸ்ட்ரெஸ், பசி, தூக்கமின்மை, அதிக மொபைல் பயன்பாடு, காய்ச்சல் எனப் பல காரணங்களால் இது வரலாம். ஆனால், சாதாரண மருந்துகளுக்கும் குறையாத தலைவலி, தீவிரம் அதிகரிக்கும் தலைவலி, தன்மை மாறும் தலைவலி, பார்வை மங்குதல், வலிப்பு, தலைச்சுற்றல் போன்றவை சேர்ந்து வரும்போது உடனடியாக நரம்பியல் நிபுணரை அணுக வேண்டும்[2].

மூளைக் கட்டிகள் பொதுவாக நரம்பு அல்லது மூளையின் செயல்பாட்டைப் பாதித்து கை/கால் பலவீனம், பார்வை அல்லது கேட்கும் திறன் குறைவை ஏற்படுத்தலாம். மூளையை எரிச்சலடையச் செய்து வலிப்பு[3], முக வலி போன்றவற்றையும் உருவாக்கலாம்.

புற்றுநோயா, இல்லையா

மூளைக் கட்டிகள் புற்றுநோய் (Malignant) அல்லது புற்றுநோய் அல்லாத (Benign) வகைகளாக இருக்கலாம். உடலின் பிற பகுதிகளில் இருந்து மூளைக்குப் பரவும் கட்டிகளை ‘செகண்டரிஸ்’ அல்லது ‘மெட்டாஸ்டேஸிஸ்’ என்பார்கள். ஆனால், ஒரு முக்கியமான உண்மை… மூளைப் புற்றுநோய் பெரும்பாலும் மூளைக்கு வெளியே பரவாது!

புற்றுநோய் அல்லாத கட்டியை முழுமையாக அகற்றினால், மீண்டும் வரும் அபாயம் மிகக் குறைவு. புற்றுநோய் கட்டிகள் அவற்றின் தீவிரத்தன்மையைப் பொறுத்து மீண்டும் வரலாம். இரண்டு வகைகளுக்கும் அறுவைசிகிச்சையே முதன்மை சிகிச்சை.

Also Read: பக்கவாதத்திலிருந்து பாதுகாப்பு பெறுவோம்[4]

நவீன நோயியல் -இம்யூனோஹிஸ்டோகெமிஸ்ட்ரி, மூலக்கூறு உயிரியல் ஆகியவற்றின் மூலம், புற்றுநோய் என்று நினைத்த பல கட்டிகள் உண்மையில் புற்றுநோய் அல்லாதவை என்று கண்டறியப்படுகின்றன.

விழித்திருக்கும்போதே மூளை அறுவைசிகிச்சை

அவேக் க்ரேனியோடமி (Awake Craniotomy) என்பது நோயாளி விழித்திருக்கும் நிலையிலேயே மூளை அறுவைசிகிச்சை செய்யும் புரட்சிகரமான முறை[5]. மூளையில் பேச்சு, கை-கால் இயக்கம் போன்ற முக்கிய செயல்பாட்டுப் பகுதிகளுக்கு அருகில் கட்டி இருக்கும்போது இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.

இது எப்படிச் சாத்தியம்? மூளைக்கு வலி உணர்வே இல்லை… வெட்டினாலும் வலிக்காது! அறுவைசிகிச்சையின்போது நோயாளி மருத்துவக் குழுவுடன் பேசிக்கொண்டிருப்பார், கட்டியை அகற்றும்போது எந்தச் செயல்பாடும் பாதிக்கப்படவில்லை என்பதை உடனுக்குடன் உறுதிசெய்ய முடியும்.

tஅறுவைசிகிச்சைக்கு முன் ட்ராக்டோகிராஃபி (Tractography) மூலம் மூளையின் முக்கிய நரம்புகளையும், ஃபங்க்ஷனல் MRI மூலம் பேச்சு, இயக்கப் பகுதிகளையும் வரைபடமாக்குகிறார்கள்.

தொழில்நுட்பம் அறுவைசிகிச்சையின் ஆபத்தைக் குறைக்கிறது  

இன்று பெரும்பாலான மூளைக் கட்டி அறுவைசிகிச்சைகளின் ஆபத்து வெறும் 3 முதல் 4 சதவிகிதம் மட்டுமே. நியூரோ-நேவிகேஷன் (GPS போல அறுவைசிகிச்சை நிபுணரை கட்டிக்கு வழிநடத்தும் கருவி), நியூரோ-மானிட்டரிங் (மூளை நரம்புகளின் செயல்பாட்டைத் தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் அமைப்பு), இன்ட்ராஆபரேட்டிவ் அல்ட்ராசவுண்ட் மற்றும் MRI ஆகிய நவீன கருவிகள் அறுவைசிகிச்சையின் துல்லியத்தையும் பாதுகாப்பையும் பெருமளவில் உயர்த்தியுள்ளன.

குழந்தைகளுக்கு தனி அணுகுமுறை 

‘குழந்தைகள் சிறிய பெரியவர்கள் அல்ல’ -அவர்களுக்குத் தனிப்பட்ட அணுகுமுறை தேவை. பிறவிக் கட்டிகள், மரபணுக் குறைபாடுகள் போன்ற காரணங்களால் குழந்தைகளுக்கு மூளைக் கட்டிகள் வரலாம்.

அறிகுறிகள் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதால், கட்டி பெரிதாகும் வரை கண்டறியப்படாமல் போவது பொதுவான பிரச்னை. ஆனால், குழந்தைகள் அறுவைசிகிச்சையைப் பெரியவர்களைவிட நன்றாகத் தாங்குவார்கள்.

 

நம்பிக்கை இருக்கிறது!

புற்றுநோய் கட்டி என்றாலும்கூட பத்தாண்டுகளுக்கு முன் இருந்ததைவிட இன்று சிகிச்சை முடிவுகள் மிகச் சிறப்பாக உள்ளன, நோயாளிகளின் வாழ்நாளும் செயல்பாட்டுத் தரமும் மேம்பட்டுள்ளன. புற்றுநோய் அல்லாத கட்டி என்றால் கவலையே வேண்டாம், கட்டியை அகற்றிவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம்!

தெரிந்துகொள்வோம்

• மூளைக் கட்டி அறுவைசிகிச்சையின் ஆபத்து இன்று 3-4% மட்டுமே… நவீன தொழில்நுட்பம் காரணம்.
• மூளை புற்றுநோய் பெரும்பாலும் மூளைக்கு வெளியே பரவாது. இது பிற புற்றுநோய்களிலிருந்து வேறுபட்டது.
• அவேக் க்ரேனியோடமி – நோயாளி விழித்திருக்கும்போதே மூளை அறுவைசிகிச்சை செய்யலாம். ஏனெனில் மூளைக்கு வலி உணர்வே இல்லை!
• புற்றுநோய் அல்லாத கட்டிக்கு அறுவைசிகிச்சை ஒன்றே போதுமானது. கதிர்வீச்சு சிகிச்சையால் அதை மறையச் செய்ய முடியாது.

 

டாக்டர் கிரிஷ் ஸ்ரீதர்  MBBS, DNB (Neurosurgery)[6]
குரூப் மென்டார்நரம்பியல் அறிவியல் இயக்குநர்
மூளை & முதுகெலும்பு நிறுவனம்
காவேரி மருத்துவமனைசென்னை[7]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. தலைவலி என்பது மிகவும் சாதாரணமான பிரச்னை: https://www.kauveryhospital.com/blog/neurology/what-kind-of-headache-do-you-have-what-could-be-the-cause/
  2. உடனடியாக நரம்பியல் நிபுணரை அணுக வேண்டும்: https://www.kauveryhospital.com/centers-of-excellence-and-specialties/neurology-and-neuroscience-doctors/chennai/
  3. வலிப்பு: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/is-epilepsy-a-hereditary-disease/
  4. பக்கவாதத்திலிருந்து பாதுகாப்பு பெறுவோம்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/lets-protect-ourselves-from-stroke/
  5. அவேக் க்ரேனியோடமி (Awake Craniotomy) என்பது நோயாளி விழித்திருக்கும் நிலையிலேயே மூளை அறுவைசிகிச்சை செய்யும் புரட்சிகரமான முறை: https://www.kauveryhospital.com/blog/neurology/awake-craniotomy-advances-in-tumour-treatment/
  6. டாக்டர் கிரிஷ் ஸ்ரீதர்  MBBS, DNB (Neurosurgery): https://www.kauveryhospital.com/doctors/chennai-radial-road/neurosurgery/dr-krish-sridhar/
  7. காவேரி மருத்துவமனைசென்னை: https://www.kauveryhospital.com/maa-kauvery-radial-road/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/no-need-for-fear-have-faith/