by admin-blog-kh | October 8, 2025 8:12 am
ஸ்ஜோகிரன்ஸ் நோய்க்குறி (Sjogren’s syndrome) என்பது ஒரு தன்னுடல் தாக்கக் கோளாறு. இந்த நோய் உமிழ்நீர் மற்றும் கண்ணீர்ச் சுரப்பிகளைத் தாக்கி கண் மற்றும் வாய் வறட்சியை ஏற்படுத்தும். இது பெண்களை அதிகம் பாதிக்கும். மனநலப் பாதிப்புகளையும் உண்டாக்கும்.
ஸ்ஜோகிரன்ஸ் சிண்ட்ரோம்… இந்தப் பெயரைக் கேட்டால் சற்று விநோதமாகத் தோன்றலாம், இது அந்த நோய்க்குறியை முதன்முதலில் கண்டறிந்த ஸ்வீடன் நாட்டு மருத்துவரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
இந்நோய் ஒருவகையான தன்னுடல் தாக்கக் கோளாறு. அதாவது நம்முடைய உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கான அணுக்கள் நம்முடைய உடலையே தாக்கும் (Autoimmune) தன்னுடல் தாக்கக் கோளாறு.
ஸ்ஜோகிரன்ஸ் நோய்க்குறியில் முக்கியமாகத் தாக்கப்படுவது நம் உமிழ்நீர்ச் சுரப்பியும் கண்ணீர்ச் சுரப்பியுமே. அதனுடைய செயல்திறன் குறைந்து பாதிக்கப்பட்டவர்களின் கண்களும் வாயும் உலர்ந்து போகின்றன. அதோடு, சரும வறட்சி, வறட்டு இருமல், உடல் சோர்வு, யோனி வறட்சி, மூட்டுவலி[1] மற்றும் வீக்கம் போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.
40 வயதுக்கு மேற்பட்ட பெண்களே இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட ஸ்ஜோகிரன்ஸ் நோயாளிகளுக்கு உடல் ரீதியான மேற்கண்ட பிரச்னைகள் மட்டுமன்றி, மனரீதியாக பல்வேறு பிரச்னைகளும் ஏற்படலாம்.
இவற்றில் முக்கியமானவற்றைச் சற்று விளக்கமாகப் பார்ப்போம்
மூளை முடுபனி – Cognitive Dysfunction (அ) Brain fog என்று அழைக்கப்படும் இந்த அறிவாற்றல் குறைபாடு ஒருவரின் கவனிக்கும் திறன், நினைவக சக்தி மற்றும் செயலாக்க வேகத்தைக் குறைத்து விடும். முழுமையாக இது ஏற்படும் காரணத்தை தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும், மூளையிலுள்ள வெள்ளைத் திசுக்கள் பாதிக்கப்படுவதால் (white matter lesions) இந்தக் குறைபாடு ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன.
ஸ்ஜோகிரன்ஸ் நோயாளிகள் பல ஆண்டுகள் இந்தக் குறைபாடுடனே தங்கள் வாழ்நாளை கழிக்கின்றனர். இதுவே பலருக்கு மனஅழுத்தம்[5] ஏற்பட ஒரு காரணமாக அமைகிறது.
நல்ல விஷயம் என்னவென்றால், பல ஆண்டுகள் இது தொடர்ந்தாலும் முற்றிலும் மறதிநோயாக (dementia[6]) மாறுவது மிகவும் குறைந்த சதவிகிதமே (<1%).
ஸ்ஜோகிரன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 30-40% மனஅழுத்தத்துக்கோ மனப்பதற்றத்துக்கோ ஆளாகின்றனர். இந்நோயினால் ஏற்படும் உடல் சோர்வு, உடல் வலி மற்றும் அறிவாற்றல் குறைபாடு ஆகியவற்றால் மனச்சோர்வு ஏற்படுகிறது.
நாம் மகிழ்ச்சியாக, நல்ல மனநிலையில் இருப்பதற்கு செரோடோனின் (serotonin) முக்கியம் என்பது நம்மில் பலரும் அறிந்த ஒரு விஷயம். இந்த நோய்க்குறி அந்த செரோடோனின் மூளையில் நுழைவதற்கு மூலக்கூறுக் காரணியான ட்ரிப்டோபான் (tryptophan) – ஐ வளர்சிதை மாற்றம் செய்து வேறு பாதைக்கு திருப்பி விடுகிறது. அதனால் செரோடோனின் உற்பத்தி குறைவதுடன் நினைவக சக்தியின் இருப்பிடமான ஹிப்போகாம்பஸ் (hippocampus) அளவும் சுருங்கி விடுகிறது. இதனால் மன அழுத்தம் ஏற்படுவதோடு, நினைவக சக்தி குறைதலும் ஏற்படுகிறது.
நமது உடலிலுள்ள என்.எம்.டி.ஏ ஏற்பியை (NMDA receptor) அழிக்கும் வகையில் எதிர்ப்பொருள் (antibodies) இந்த நோயில் உருவாகிறது. அறிவாற்றல் திறனுக்கு இந்த என்.எம்.டி.ஏ (NMDA) முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் அதற்கான எதிர்ப்பொருளை உருவாக்கி தனக்குத் தானே குழி பறித்துக் கொள்கிறது.
இந்நோய் குறி உள்ளவர்களில் முக்கால்வாசி பேருக்கு தூக்கப் பிரச்னை ஏற்படுவதுண்டு. அவர்களுக்கு தூக்கத்தில் ஆழ்ந்து இருப்பதிலும் சிரமம் ஏற்படுகிறது. உடல் வலி மற்றும் வாய், கண் வறட்சி காரணமாகவும் மனப்பிரச்னைகள் காரணமாகவும் இந்தத் தூக்கமின்மை ஏற்படுகிறது.
இந்த நோய் இருப்பதை உறுதிசெய்ய மருத்துவரை அணுகி ரத்தப் பரிசோதனை, ஷிர்மர் கண்ணீர் சோதனை, பிளவு – விளக்கு கண் பரிசோதனை மற்றும் உதட்டிலிருந்து சதையை எடுத்து பயாப்ஸி செய்து பரிசோதனை பார்க்க வேண்டியிருக்கலாம்.
கண் மருத்துவரை அணுகி[8] கண்கள் உலர்ந்து போவதை தடுப்பதற்கான சொட்டு மருந்து, செயற்கை கண்ணீர், மருந்து கலவை பயன்படுத்தலாம்.
வாய் உலர்ந்து போவதைத் தடுக்கும் வகையில் அடிக்கடி தண்ணீர் அருந்துவது, சிட்ரஸ் நிறைந்த பழங்கள் மற்றும் உணவுகள் உட்கொள்ளலாம்.
40 வயதுக்கு மேற்பட்ட பெண்களே இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
Dr. G.R. குறிஞ்சி[9]
MBBS, MD (Psychiatry)
மனநல மருத்துவர்
காவேரி மருத்துவமனை, வடபழனி[10]
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Vadapalani & Radial Road), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Vadapalani – 044 4000 6000 • Chennai Radial Road – 044 40504050 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011
Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/sjogrens-syndrome/
Copyright ©2026 Kauvery Blog unless otherwise noted.