மகிழ்ச்சியின் மருந்து உடல் ஆரோக்கியமே!

by admin-blog-kh | March 7, 2026 9:21 am

புரமோஷன் கிடைத்தால் மகிழ்வேன்புதிய வீடு வாங்கினால் சந்தோஷமாக இருப்பேன்…’ – இப்படி நாம் மகிழ்ச்சியை எப்போதும் தள்ளி வைத்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால், இருபது ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான நோயாளிகளைக் கவனித்த ஒரு மருத்துவரின் அனுபவம் சொல்வது வேறொன்று

மகிழ்ச்சி என்பது வெளியில் இருக்கும் பரிசு அல்ல, அது நம் உடலுக்குள்ளேயே இருக்கும் உரிமை!

மகிழ்ச்சி என்பது ஒரு வேதியியல் செயல்பாடு 

மார்ச் 20… உலக மகிழ்ச்சி தினம். மகிழ்ச்சி என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல; அது மூளையில் சுரக்கும் ஹார்மோன்களால் இயங்கும் ஒரு வேதியியல் நிகழ்வு. டோபமின் உந்துதலையும் ஆர்வத்தையும் தருகிறது; செரோடோனின் மனநிலையைச் சீராக்கி நல்வாழ்வை உருவாக்குகிறது; ஆக்சிடோசின் பிறருடன் நெருக்கத்தையும் பாசத்தையும் ஏற்படுத்துகிறது. இந்த ‘மகிழ்ச்சி ஹார்மோன்கள்’ சீராக இருக்கும்போதுதான் உலகம் நம்மால் உணரப்படுகிறது.

சாப்பிட விரும்புகிறோம், பேச ஆசைப்படுகிறோம், வெளியே செல்ல துடிக்கிறோம். ஆனால், வேதியியல் மட்டுமே மகிழ்ச்சியல்ல. அர்த்தம், நோக்கம், நன்றியுணர்வு, உறவுகள் என உள்ளும் வெளியும் ஒன்றாகச் சேரும்போதே உண்மையான, நிலைத்த மகிழ்ச்சி பிறக்கிறது.

உண்மையான மகிழ்ச்சிஆழமானது, நிலையானது 

வீடு, கார், நகை – இவை வாழ்க்கையின் வசதிகளே தவிர, மகிழ்ச்சியின் அளவுகோல்கள் அல்ல. தற்காலிக இன்பம் ஒரு நிமிடம் சிரிக்க வைக்கும், ஆனால், ஆழமான நிறைவை அளிக்காது. உண்மையான மகிழ்ச்சிக்கு நாம் ஆழமாகப் பார்க்க வேண்டும்… நம்மை நாமே மதிக்கிறோமா? பிறரை மரியாதையுடன் நடத்துகிறோமா? நம் சமூகத்துக்கு ஏதாவது பங்களிக்கிறோமா? இந்தக் கேள்விகளுக்கான பதில்களில்தான் நிரந்தர சந்தோஷம் ஒளிந்திருக்கிறது. நன்றியுணர்வு என்பது மகிழ்ச்சியின் மிகச்சக்திவாய்ந்த மூலம். இன்று கிடைத்ததற்கு நன்றி சொல்ல தெரிந்தவர்கள், நாளை இல்லாததற்காகக் கவலைப்படுவதில்லை.

Also Read: உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்![1]

உச்சகட்ட மகிழ்ச்சி’… நாம் கவனிக்காமலே விட்டுவிடுவது

வலியில்லாமல் எழுவது, தெளிவாகப் பார்ப்பது, சுதந்திரமாக நடப்பது… இவற்றை நாம் ‘சாதாரணம்’ என்று கடந்துவிடுகிறோம். ஆனால், இவை கிடைக்காமல் போகும்போதுதான் புரிகிறது, இவையே உண்மையான உச்சகட்ட மகிழ்ச்சி என்று. கோவிட்[2] காலத்தில் பணமும் புகழும் நிறைந்தவர்களும் பயத்தில் நடுங்கினார்கள். ஏனென்றால், உடல் ஆரோக்கியமே அடிப்படை மகிழ்ச்சி என்பது அப்போது உலகுக்குத் தெரிந்தது. ஆரோக்கியமே செல்வம் என்கிற உண்மையை அந்தத் தொற்றுக் காலம் அழுத்தமாக நினைவுபடுத்தியது.

மனமும் உடலும்ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் 

நீண்டகால நோய்கள் வலி, இயலாமை, தனிமையை உருவாக்கி மனதில் தாக்கம் ஏற்படுத்தும். மனதில் சந்தோஷமில்லாவிட்டால் உடல் ஆரோக்கியமும் பாதிக்கும். இந்தச் சுழற்சியை புரிந்துகொண்டால், உடல்நலமும் மனநலமும்[3] சேர்ந்தே பார்க்கப்பட வேண்டும் என்பது தெளிவாகும். வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொள்ளும் மனோபாவமும், அர்த்தமுள்ள இலக்குகளும் இந்தச் சுழற்சியை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இந்த இணைப்பு கட்டறுக்கும் ஆரம்ப அறிகுறிகளைத் (நீடித்த சோர்வான மனநிலை, தூக்கமின்மை, சமூக விலகல், விளக்கமுடியாத தலைவலி[4] போன்றவை) தவிர்க்காதீர்கள். இவை உதவி கேட்கும் உடலின் குரல்.

தடுப்பு சிகிச்சையே சிறந்த சிகிச்சை

வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள் ‘என்னவாகுமோ’ என்கிற மனக்கவலையை நீக்கும். ‘நேர்மறைச் சிந்தனை மட்டுமே போதும்’ என்பதும் தவறு. மனநலப் பிரச்னைகள் வேதியியல் சமநிலையின்மையால் வரும்போது மருத்துவ உதவி அவசியம். உதவி தேடுவது பலவீனமின்மை அல்ல – அது தைரியம்!

மகிழ்ச்சி என்பதை வெளியே தேட வேண்டியது அல்ல – அது நம் ஆரோக்கியமான உடலுக்குள்ளேயே உறைகிறது. வலியில்லாமல் எழுவது, தெளிவாகக் காண்பது, சுதந்திரமாக நடப்பது – இவையே உண்மையான உச்சகட்ட மகிழ்ச்சி!

மூன்று ஆலோசனைகள்

1. தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். ஒரு குறுகிய நடையே மனநிலையை உயர்த்தும் எண்டோர்ஃபின்களை சுரக்கச் செய்யும்.
2. அன்பானவர்களுடன் தரமான நேரம் செலவிடுங்கள். உறவுகள் மன அழுத்தத்துக்கு எதிரான சிறந்த கவசம்.
3. மூச்சுப் பயிற்சி, தியானம் மேற்கொள்ளுங்கள். வேகமான உலகில் நம்மை நிலைப்படுத்திக்கொள்ள இவை மிகவும் உதவும்!

 

Dr. கவிதா சுந்தரவதனம் MBBS, DFH[5]
குடும்ப மருத்துவர்
காவேரி மருத்துவமனை, சென்னைஆழ்வார்பேட்டை[6]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்!: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/your-health-is-in-your-hands/
  2. கோவிட்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/ways-to-protect-your-heart/
  3. மனநலமும்: https://www.kauveryhospital.com/blog/geriatrics/maintaining-a-good-mental-health-in-our-silver-years/
  4. தலைவலி: https://www.kauveryhospital.com/blog/neurology/what-kind-of-headache-do-you-have-what-could-be-the-cause/
  5. Dr. கவிதா சுந்தரவதனம் MBBS, DFH: https://www.kauveryhospital.com/doctors/chennai/family-physician/dr-kavitha-sundaravadanam/
  6. காவேரி மருத்துவமனை, சென்னைஆழ்வார்பேட்டை: https://www.kauveryhospital.com/our-locations/chennai/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/the-cure-for-happiness-is-physical-health/