by admin-blog-kh | November 10, 2026 12:31 pm
நுரையீரல்[1] புற்றுநோய்[2] புகைப்பவர்களை[3] மட்டும்[4] தாக்கும்[5] நோய்[6] அல்ல[7]. ஆரம்பத்தில் அமைதியாக வளரும் இந்த நோயின் எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிக்காமல், விரைவில் பரிசோதனை செய்துகொண்டால் சிகிச்சைக்கான வாய்ப்புகள் பெருகும் என்கிறார் காவேரி மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சி. செல்வி.
ஒவ்வொரு நொடியும் நாம் சுவாசிக்கும் காற்றுதான் நம் உயிரின் ஆதாரம். அந்தக் காற்றை உடலுக்குள் கொண்டுசெல்லும் நுரையீரலில் அமைதியாக வளரும் நோய்தான் நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer). நுரையீரலில் உள்ள செல்கள் கட்டுப்பாடின்றிப் பெருகி, கட்டியாக உருவாவதே இந்த நோய். நவம்பர் மாதம் உலகின் பல நாடுகளில் நுரையீரல் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச புற்றுநோய் ஆய்வு அமைப்பின் (IARC) கணக்குப்படி, 2022-ம் ஆண்டில் உலக அளவில் சுமார் 25 லட்சம் பேருக்கு நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டது. அதே ஆண்டில் சுமார் 18 லட்சம் பேர் இந்த நோயால் உயிரிழந்தனர். அந்த ஆண்டில் உலகில் அதிகம் கண்டறியப்பட்ட புற்றுநோயும், அதிக உயிர்களைப் பறித்த புற்றுநோயும் இதுவே.
‘புகைப்பவர்களுக்குத்தானே[8] இந்த[9] நோய்[10] வரும்[11]?[12]’ என்பதுதான் பலரின் எண்ணம். உண்மை அப்படி இல்லை. ‘நுரையீரல் புற்றுநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். புகைப்பழக்கம் முக்கியமான ஆபத்துக் காரணிதான். ஆனால், ஒருமுறைகூட புகைக்காதவர்களிடமும் இந்த நோயைப் பார்க்கிறோம். அடுத்தவர் விடும் சிகரெட் புகையைச் சுவாசிப்பதும் (Passive Smoking) இந்த ஆபத்தை அதிகரிக்கும்’ என்கிறார் டாக்டர் செல்வி.
வீட்டுக்குள் நீண்டகாலம் நிலவும் காற்று[13] மாசு[14], சில வகை சமையல் எரிபொருள்களிலிருந்து வரும் புகை, வெளிப்புறக் காற்று மாசு, பணியிடங்களில் உள்ள தீங்கான பொருட்கள் ஆகியவையும் நுரையீரல் புற்றுநோய்க்குக் காரணமாகலாம். குறிப்பாக, ஆஸ்பெஸ்டாஸ் (Asbestos), சிலிகா (Silica), டீசல் புகை, சில தொழிற்சாலை ரசாயனங்கள் ஆகியவற்றுடன் பணியாற்றுபவர்களுக்கு ஆபத்து அதிகரிக்கலாம் என்று அவர் எச்சரிக்கிறார்.
பல வாரங்களாக நீடிக்கும் இருமல், அல்லது வழக்கமான இருமலின் தன்மையில் ஏற்படும் மாற்றம் முதல் எச்சரிக்கை. சளியில் ரத்தம் ஒருமுறை வந்தாலும் அலட்சியம் செய்யக்கூடாது. அதிகரிக்கும் மூச்சுத்திணறல்[15], நெஞ்சுவலி, காரணம் தெரியாமல் எடை குறைதல், பசியின்மை, நீங்காத குரல் கரகரப்பு, திரும்பத் திரும்ப வரும் நெஞ்சுத் தொற்றுகள் ஆகியவையும் கவனிக்க வேண்டிய அறிகுறிகள். ‘இந்த அறிகுறிகள் எல்லாமே புற்றுநோய் என்று அர்த்தமல்ல. ஆனால், இவற்றை ஒருபோதும் புறக்கணிக்கக் கூடாது’ என்கிறார் டாக்டர் செல்வி.
நுரையீரல் புற்றுநோயின் மிகப் பெரிய சவால், ஆரம்பக் கட்டத்தில் அது வெளிப்படையான அறிகுறிகளைக் காட்டாமல் இருக்கலாம் என்பதுதான். அறிகுறிகள் தோன்றும்போதும், அவற்றைச் சாதாரண சுவாசப் பிரச்னைகள் என்று நினைத்து, பலர் மருத்துவரை அணுகுவதைத் தள்ளிப்போடுகிறார்கள். வீட்டு வைத்தியத்திலும், கடையில் வாங்கும் இருமல் மருந்துகளிலும் வாரக்கணக்கில் நாட்கள் கடந்துவிடுகின்றன. ஆனால், ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிவது, சிகிச்சை முறைகளிலும் அதன் பலன்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.
அப்படியென்றால்[16], [17]எல்லோரும்[18] ஸ்கேன்[19] செய்துகொள்ள[20] வேண்டுமா[21]? ‘[22]குறைந்த[23] அளவு[24] கதிர்வீச்சு[25] கொண்ட[26] சி[27].[28]டி[29]. [30]ஸ்கேன்[19] (Low Dose CT Scan) [31]பரிசோதனை[32], [17]நுரையீரல்[33] புற்றுநோய்[34] வருவதற்கு[35] அதிக[36] வாய்ப்புள்ள[37], [17]தேர்ந்தெடுக்கப்பட்ட[38] சிலருக்கானது[39]. குறிப்பாக, நீண்டகாலம் அதிக அளவில் புகைபிடித்த வயதானவர்களுக்கு இது பொருந்தும். வயது, புகைப்பழக்கத்தின் அளவு, நடைமுறையில் உள்ள பரிசோதனை வழிகாட்டுதல்கள் ஆகியவற்றைப் பொறுத்தே தகுதி தீர்மானிக்கப்படுகிறது. ஆரோக்கியமாக இருக்கும் அனைவருக்கும் இது வழக்கமாகப் பரிந்துரைக்கப்படுவதில்லை. பரிசோதனை தேவையா என்பதை மருத்துவர்தான் மதிப்பிட வேண்டும்’ என்று தெளிவுபடுத்துகிறார் டாக்டர் செல்வி.
‘இன்று நுரையீரல் புற்றுநோயைத் துல்லியமாகக் கண்டறிய பல நவீன முறைகள் உள்ளன. இதில் இன்டர்வென்ஷனல் நுரையீரல் சிகிச்சைப் பிரிவு (Interventional Pulmonology[40]) முக்கியப் பங்கு வகிக்கிறது’ என்கிறார் அவர். அவற்றில் ஒன்று ப்ராங்கோஸ்கோபி (Bronchoscopy). கேமரா பொருத்தப்பட்ட மெல்லிய, வளையக்கூடிய குழாயை மூக்கு அல்லது வாய் வழியாக மென்மையாகச் செலுத்தி, மூச்சுக்குழாய்களுக்குள் பார்க்கும் முறை இது. இதன் மூலம் நுரையீரலைப் பரிசோதிப்பதோடு, சந்தேகத்துக்குரிய பகுதிகளில் இருந்து சிறிய திசு மாதிரிகளையும் எடுக்க முடியும்.
சந்தேகத்துக்குரிய கட்டி மையப் பகுதி மூச்சுக்குழாய்களுக்கு அருகில் இருந்தால், ப்ராங்கோஸ்கோபி மூலமே தேவையான மாதிரிகளைப் பெரும்பாலும் எடுத்துவிடலாம். நுரையீரலின் உள்ளே ஆழமான பகுதியில் கட்டி இருந்தால், ஸ்கேன் வழிகாட்டுதலுடன் ஊசி மூலம் திசு எடுக்கும் முறை (Needle Biopsy) பொருத்தமாக இருக்கலாம். மார்புக்குள் உள்ள நிணநீர் முடிச்சுகளில் (Lymph Nodes) இருந்து மாதிரி எடுக்க, எண்டோப்ராங்கியல் அல்ட்ராசவுண்ட் (EBUS) என்ற முறையும் பயன்படுகிறது.
எடுக்கப்பட்ட மாதிரியை நோய்க்குறியியல் நிபுணர் (Pathologist) ஆய்வு செய்து, புற்றுநோய் உள்ளதா, இருந்தால் அது எந்த வகை என்பதைக் கண்டறிகிறார். ‘இந்த வேறுபாடு மிக முக்கியம். எல்லா நுரையீரல் புற்றுநோய்களும் ஒரே மாதிரியானவை அல்ல. எல்லாவற்றுக்கும் ஒரே சிகிச்சையும் இல்லை’ என்கிறார் டாக்டர் செல்வி. கட்டியில் உள்ள குறிப்பிட்ட மரபணு மாற்றங்கள் அல்லது பிற உயிர்க்குறிகாட்டிகளைக் (Biomarkers) கண்டறியும் கூடுதல் பரிசோதனைகளும் செய்யப்படலாம். இலக்கு சிகிச்சை (Targeted Therapy), நோய் எதிர்ப்பு சிகிச்சை (Immunotherapy), கீமோதெரபி[42] (Chemotherapy)[43], கதிரியக்க சிகிச்சை (Radiation Therapy), அறுவை சிகிச்சை ஆகியவற்றில் நோயாளிக்கு எது பலன் தரும் என்பதைத் தீர்மானிக்க இந்த முடிவுகள் உதவுகின்றன.
‘சேதமடைந்த நுரையீரலை மாற்றிவிட்டால் போதுமே?’ என்ற கேள்வி பலருக்கு எழலாம். 250க்கும் மேற்பட்ட நுரையீரல்[44] மாற்று[45] அறுவை[46] சிகிச்சைகளிலும்[47], 35 இதய[48] நுரையீரல்[49] மாற்று[50] அறுவை[51] சிகிச்சைகளிலும்[52] பங்கேற்றவர் டாக்டர் செல்வி. 150க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு எக்மோ (ECMO) உயிர்காப்பு சிகிச்சையை நிர்வகித்த அனுபவமும் அவருக்கு உண்டு. இந்தக் கேள்விக்கு அவர் தெளிவான பதில் தருகிறார். ‘நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை (Lung Transplantation) உயிர் காக்கும் சிகிச்சையாக இருக்கலாம். ஆனால், எல்லா நுரையீரல் நோய்களுக்கும் இது பொருந்தாது. பெரும்பாலான நேரங்களில், உடலில் தற்போது இருக்கும் நுரையீரல் புற்றுநோய்க்கு இது வழக்கமான சிகிச்சை அல்ல. புற்றுநோய் மீண்டும் வரலாம். மேலும், மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு எடுக்க வேண்டிய மருந்துகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கின்றன. இதனால் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவது உடலுக்குக் கடினமாகிவிடும். மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விதிவிலக்கான சூழல்களிலும், சிறப்பு மையங்களிலும் மட்டுமே புற்றுநோய்க்கு மாற்று அறுவை சிகிச்சை பரிசீலிக்கப்படுகிறது’ என்கிறார் அவர்.
அதே நேரம், மற்ற சிகிச்சைகள் போதுமான பலன் தராத நிலையில் உள்ள, தீவிர நுரையீரல் நோய் கொண்ட, கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த அறுவை சிகிச்சை புதிய வாழ்வைத் தரலாம். நுரையீரல் திசுக்கள் தழும்பாகி இறுகும் நுரையீரல் ஃபைப்ரோசிஸ் (Pulmonary Fibrosis), தீவிர நிலையை எட்டிய நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD) மற்றும் எம்பைசீமா (Emphysema), சில வகை நுரையீரல் தமனி உயர் ரத்த அழுத்தம் (Pulmonary Arterial Hypertension[53]), தேர்ந்தெடுக்கப்பட்ட சில மூச்சுக்குழாய் விரிவு நோய் (Bronchiectasis[54]) மற்றும் சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் (Cystic Fibrosis[55]) பாதிப்புகள் இதில் அடங்கும். நோயின் தீவிரம், நோயாளியின் ஒட்டுமொத்த உடல்நிலை, எதிர்பார்க்கப்படும் பலன், அறுவை சிகிச்சையின் அபாயங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே முடிவு எடுக்கப்படுகிறது.
மூச்சுவிடுவதே பெரும் போராட்டமாகி, கிடைக்கும் மருந்துகள் போதுமான நிவாரணம் தர முடியாத நிலையில்தான், மாற்று அறுவை சிகிச்சையை நோக்கிய பயணம் தொடங்குகிறது.
அறுவை சிகிச்சையோடு மீட்சி முடிந்துவிடுவதில்லை. தொடர் கண்காணிப்பு, புதிய நுரையீரலை உடல் நிராகரிக்காமல் இருக்க பரிந்துரைக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் (Immunosuppressants), தொற்றுத் தடுப்பு, நுரையீரல் மறுவாழ்வுப் பயிற்சிகள் (Pulmonary Rehabilitation), வாழ்நாள் முழுவதுமான மருத்துவப் பின்தொடர்வு ஆகியவை அவசியம். ‘நோயாளிகள் நன்றாக மூச்சுவிட உதவுவது மட்டும் எங்கள் இலக்கு அல்ல. அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு அர்த்தமுள்ள வகையில் திரும்பி, நல்ல வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்க உதவுவதுதான்’ என்கிறார் டாக்டர் செல்வி.
இந்தப் பயணத்தின் மையப்புள்ளி உறுப்பு[56] தானம்[57]. ‘அன்புக்குரியவரை இழந்த குடும்பம், உறுப்புகளைத் தானம் செய்ய எடுக்கும் முடிவு அசாதாரணமான பெருந்தன்மையின் வெளிப்பாடு. அது இன்னொரு குடும்பத்துக்கு மீண்டும் நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைத் தருகிறது. உறுப்பு தானம், ஓர் இழப்பை இன்னொருவருக்கான வாழ்வின் சாத்தியமாக மாற்றுகிறது’ என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் அவர்.
வட இந்தியாவில் உள்ள ஒரு புற்றுநோய் சிகிச்சை மையத்தில், 724 நுரையீரல் புற்றுநோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பத்தில் நான்கு பேர் புகைப்பழக்கம் இல்லாதவர்கள். புகைப்பவர்களைவிட, புகைக்காதவர்களுக்கு இந்த நோய் குறைந்த வயதிலேயே தோன்றியதும் அந்த ஆய்வில் தெரியவந்தது. 2018-ம் ஆண்டில் வெளியான, டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனை 150 நுரையீரல் புற்றுநோயாளிகளிடம் மேற்கொண்ட ஆய்வில், 30 சதவிகிதம் பேர் முதலில் காசநோய் (TB) என்று தவறாகக் கருதப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தனர். அந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 21 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் 50 வயதுக்குட்பட்டவர்கள்.
டாக்டர்[58] சி[59]. [60]செல்வி[61]
DTCD, EDARM, DNB (Pulmonary Medicine), FSM
கன்சல்டன்ட் – இன்டர்வென்ஷனல் & டிரான்ஸ்பிளான்ட் நுரையீரல் சிகிச்சை நிபுணர் மற்றும் ILD சிறப்பு மருத்துவர்
காவேரி[62] மருத்துவமனை[63] -– [64]சென்னை[65] வடபழனி[66]
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011
Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/the-enemy-hiding-within-your-breath/
Copyright ©2026 Kauvery Blog unless otherwise noted.