by admin-blog-kh | November 7, 2025 9:01 am
இன்றைய வேகமான நவீன வாழ்க்கையில், தாய்ப்பால் ஊட்டல்[1] என்பது ஓர் இயற்கையான, உயிரோட்டமான செயல் என்பதிலும், குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஆதாரமாக இருப்பதிலும் மாற்றமில்லை. ஆனால், இந்த நவீனச் சூழலில் ஏற்படும் பல்வேறு தடைகள் தாய்மார்களை தாய்ப்பால் ஊட்டுவதைத் தொடர்வதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
ஒவ்வொரு தாயின் பாலூட்டப் பயணமும் தனியாக இருக்கக்கூடாது என்பதையே இந்த வருடத்தின் கருப்பொருள் நினைவூட்டுகிறது. குடும்பம், மருத்துவம், வேலை இடம் மற்றும் சட்டம்… இவை அனைத்தும் ஒருங்கிணைந்து வழங்கும் திறனே தாய்ப்பால் ஊட்டலை வளப்படுத்தி, பயனுள்ளதாக மாற்றும்.
குழந்தை பெற்ற பிறகு வேலைக்குத் திரும்புவது என்பது பல தாய்மார்களுக்கு சிரமம் மற்றும் சவாலான காரியமாக உள்ளது. தாய்மார்களுக்குத் தேவையான ஆதரவுகள் இல்லாத சூழலில், அவர்கள் தாய்ப்பாலை விரைவாக நிறுத்த நேரிடுகிறது.
இந்தத் தடைகளை தவிர்க்க, வேலை இடங்களில் தாய்மாருக்கான வசதிகள் மிகவும் அவசியம்.
பல தாய்மார்கள் ‘பால் வரவில்லையே’ அல்லது ‘குழந்தை அழுகிறதே… பசிக்கிறதோ?’ என்கிற தவறான நம்பிக்கைகளால் பவுடர் பாலை ஆரம்பத்திலேயே கொடுக்கத் தொடங்குகிறார்கள். இது குழந்தையின் வயிற்றுக்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நீடித்த பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
மிகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆரம்பப் பால் (colostrum) போதுமானதாகவே இருக்கும். பவுடர் பாலை ஆரம்பத்திலேயே தருவது நீடித்த பாதிப்பையே ஏற்படுத்தும்.
இன்றும் பல பொதுவிடங்களில் தாய்ப்பால் ஊட்டுவது பற்றிய தவறான கண்ணோட்டம், மரியாதையற்ற பார்வைகள் காரணமாக தாய்மார்கள் வெளியே பால் ஊட்ட முடியாமல் தவிக்கிறார்கள்.
ஒரு தாய்க்கு எங்கே வேண்டுமானாலும் தன்னுடைய குழந்தைக்குப் பால் ஊட்டும் உரிமையும் வசதியும் இருக்க வேண்டும்.[4]
ஒரு தாயின் பாலூட்டல் பயணம் வெற்றிகரமாக அமைய அவரைச் சுற்றியுள்ளவர்களின் ஆதரவு மிக முக்கியம்.
இப்படி ஒட்டுமொத்தமாகவே தாயின் பயணத்தில் நின்று தன்னம்பிக்கையை வளர்க்கும் சூழல் அவசியம்.
பல தாய்மார்கள் சிறிய சிக்கல்களின் காரணமாகவே தாய்ப்பாலை நிறுத்துகிறார்கள். இச்சிக்கல்களை சரியான நேரத்தில் தீர்க்கும் நிபுணர்கள்தாம் பாலூட்டல் ஆலோசகர்கள் (lactation consultants).
ஒவ்வொரு தாய்க்கும் பாலூட்டல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.
தாய்ப்பாலை ஆதரிப்போம்… குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்போம்! இது குழந்தையின் ஆரோக்கிய வளர்ச்சி, தாயின் நலன் மற்றும் எதிர்கால சமுதாயத்தின் முன்னேற்றத்தையும் உறுதி செய்கிறது.
பல தாய்மார்கள் சிறிய சிக்கல்களின் காரணமாகவே தாய்ப்பாலை நிறுத்துகிறார்கள். இச்சிக்கல்களை சரியான நேரத்தில் தீர்க்கும் நிபுணர்கள்தாம் பாலூட்டல் ஆலோசகர்கள் (lactation consultants).
Ms. கிறிஸ்டி எஸ்
குழந்தைப் பிறப்பு கல்வியாளர்,
பாலூட்டுதல் & IYCF ஆலோசகர், சமூக சேவகர்.
மா காவேரி மருத்துவமனை, திருச்சி[5]
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011
Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/the-foundation-for-a-childs-health/
Copyright ©2026 Kauvery Blog unless otherwise noted.