உடல் ஆரோக்கியத்தின் கண்ணாடி!

by admin-blog-kh | April 15, 2026 12:34 pm

புன்னகை அழகாக பூக்கட்டும்என்று பற்களை மட்டுமே கவனிக்கிறோம். ஆனால், வாயின் ஆரோக்கியம் வெறும் தோற்றப் பிரச்னை மட்டுமல்லஅதில் இதயம், நீரிழிவு, கர்ப்பம் என உடலின் ஒவ்வோர் அமைப்பையும் பாதிக்கும் ஆழமான உண்மை இருக்கிறது.

இந்தியாவில் நிலை 

தமிழ்நாட்டில் மிகவும் பரவலாகக் காணப்படும் பிரச்னைகள்: பல் சொத்தை (Dental Caries[1]), பல் ஈறு நோய் (Gum Disease[2]), ரத்தக்கசிவு, மற்றும் வாய் புற்றுநோய். மார்ச் 20… உலக வாய் நல தினம் – இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே அனுசரிக்கப்படுகிறது.

வயதுக்கேற்ப வேறுபடும் பிரச்னைகள் 

2 முதல் 12 வயது குழந்தைகளுக்கு இனிப்பு உணவுகளால் பல் சொத்தை ஏற்படுகிறது. பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ‘நர்சிங் பாட்டில் கேரிஸ்’ என்கிற சிறப்பு வகை சொத்தை வருகிறது. விரல் சப்பும் பழக்கம் பல் வரிசையை கோணலாக்கிவிடும். இளைஞர்களுக்கு ஞானப் பல் (Wisdom Tooth) வலி[3], ஈறு வீக்கம், வாய் துர்நாற்றம் எனப் பல பிரச்னைகள் வருகின்றன. 30 முதல் 50 வயதில் மன அழுத்தத்தால் தூக்கத்தில் பற்களைக் கடிக்கும் (Bruxism) பழக்கம் பரவலாகிறது. 60 வயதுக்கு மேல் வாய் வறட்சி (Xerostomia) மிகவும் அதிகம்… மருந்துகளின் பக்கவிளைவாலோ, மன அழுத்தத்தாலோ உமிழ்நீர் குறைந்து, பாக்டீரியா வேகமாக வளர்கிறது.

வாய் எப்படி இதயத்தை பாதிக்கிறது

வாயில் ஏற்படும் தொற்று உடல் முழுவதையும் பாதிக்கும். வாயில் உள்ள பாக்டீரியாக்கள் ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் அழற்சியை உண்டாக்கும். ஈறு நோயில் உள்ள பாக்டீரியாக்கள் ரத்தத்தில் கலந்து இதயத் திசுக்களை தாக்கி Endocarditis ஏற்படுத்தலாம்; தமனிகளில் அடைப்பை உருவாக்கி மாரடைப்பைக்[4] கூட தூண்டலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு ஈறு நோய் மோசமாகும்; ஈறு நோய் தீவிரமாகும்போது ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தவே முடியாமல் போகும். இரண்டும் ஒன்றையொன்று மோசமாக்கும் சுழற்சி. கர்ப்பிணிகளுக்கு ஈறு நோய் இருந்தால் குழந்தை குறைந்த எடையுடன் பிறக்கும் ஆபத்து அதிகரிக்கிறது.

எப்போது உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்

தூக்கத்தையே கெடுக்கும் கடுமையான பல் வலி; முகம் அல்லது வாயில் வீக்கத்துடன் காய்ச்சல்; வாயை திறக்கவோ விழுங்கவோ கஷ்டமாக இருப்பது; அடிபட்டதால் தொடர்ந்த ரத்தக்கசிவு; தாடை ‘கிளிக்’ பூட்டிக்கொள்வது – இவை அனைத்தும் உடனடி நிபுணர் ஆலோசனை தேவைப்படும் அவசர நிலைகள்.

Also Read: The link between Oral Health and Cardiovascular Disease[5]

தினசரி கடைப்பிடிக்க வேண்டியவை 

மென்மையான பிரஷ் (Soft Bristle) மட்டுமே பயன்படுத்துங்கள். கடினமான பிரஷ் பல் எனாமலையே தேய்த்துவிடும். நாக்கைச் சுத்தம் செய்ய பிரஷின் பின்புறத்தில் உள்ள கரடுமுரடான பகுதியை பயன்படுத்துங்கள். உலோக ஸ்கிரேப்பர் சுவை உணர்மொட்டுகளைப் பாதிக்கும். நூல் ஃப்ளாஸை கடுமையாக இழுத்தால் ஈறு நலிந்து எலும்பு சேதமாகலாம். Water Jet Flosser பயன்படுத்துவது சிறந்தது. ஆல்கஹால் இல்லாத மவுத்வாஷ் அல்லது உப்பு நீர் கொப்பளித்தல் பலன் தரும். பிரஷை மூன்று மாதத்துக்கு ஒருமுறை மாற்றுங்கள்.

நவீன சிகிச்சை தொழில்நுட்பங்கள் 

Brain Lab நேவிகேஷன் அமைப்பு மூலம் அறுவைசிகிச்சையின்போது கருவிகளை Sub-millimeter அளவுக்குக் கட்டுப்படுத்தலாம். இது GPS போல நேரடியாக வழிகாட்டும். தாடை எலும்பு அரித்துப்போன நோயாளிகளுக்கு Zygoma Implants மூலம் கன்ன எலும்பில் பொருத்தி நிரந்தரப் பற்களை அமைக்கலாம். TMJ வலிக்கு Botox சிகிச்சை செய்தால் தசைகளை தளர்த்தி நிரந்தர நிவாரணம் தரும். 3D Printing மூலம் தனிநபருக்கு ஏற்ற இம்ப்ளான்ட் தயாரித்து பொருத்துவது இன்று சாத்தியம்.

தவறான நம்பிக்கைகளைத் தவிடுபொடியாக்குவோம் 

‘பால் பற்கள் விழுந்துவிடும், பராமரிக்க வேண்டாம்’ – இது முற்றிலும் தவறு. நிரந்தரப் பற்கள் சரியாக முளைக்க பால் பற்களே வழி காட்டுகின்றன; பேச்சு வளர்ச்சிக்கும் இதுவே அடித்தளம்.

‘ஈறில் ரத்தம் வருவது சாதாரணம்’ – இல்லை, இது Gingivitis அல்லது Periodontitis[6] ஆரம்ப நிலை.

‘பல் மருத்துவர் கிட்ட போனால் வலிக்கும்’ – நவீன சிகிச்சைகள் மிகவும் வலியற்றவை.

மூன்று நடைமுறை குறிப்புகள் 

  1. இரவு சாப்பிட்டவுடன் கட்டாயம் பல் துலக்கவும் அல்லது கொப்பளிக்கவும் – இல்லாவிட்டால் பாக்டீரியா இரவு முழுவதும் வேலை செய்யும்.
  2. புகையிலை தவிர்க்கவும் – ஈறு நோய், வாய் புற்றுநோய்[7] ஆபத்தை பல மடங்கு அதிகரிக்கும்.
  3. 40 வயதுக்கு மேல் ஆண்டுக்கொரு முறை Dental Check-up[8]… இது பல்லுக்கானது மட்டுமல்ல, உடல் ஆரோக்கிய பரிசோதனையும்தான்!

உங்கள் புன்னகையே உடல் நலத்தின் கண்ணாடி…அதைப் பாதுகாப்போம்!

வாயில் உள்ள பாக்டீரியாக்கள் ரத்தத்தில் கலந்து இதயம், நுரையீரல், மூளை வரை கூட பாதிக்கலாம். ஈறு நோயும் நீரிழிவும் ஒன்றையொன்று மோசமாக்கும். வாய் ஆரோக்கியமே உடல் ஆரோக்கியத்தின் முதல் படி!

பல் விழுந்தால் என்ன செய்வது? 

• குழந்தைக்கு அடிபட்டு பல் கழன்று விழுந்தால் – பதறாதீர்கள்!
• அந்தப் பல்லை தூக்கி எறியாதீர்கள்.
• பாலில் அல்லது நோயாளியின் உமிழ்நீரில் வைத்திருங்கள்.
• 45 நிமிடங்களுக்குள் மருத்துவரிடம் சென்றால் அந்த பல்லையே மீண்டும் பொருத்திவிட முடியும்!

 

டாக்டர் விஜயலட்சுமி பத்மநாபன்[9]
MDS (Oral & Maxillofacial Surgery), FAOMSI (Fellowship in Craniofacial Trauma)
வாய் மற்றும் முக அறுவைசிகிச்சை நிபுணர்
காவேரி மருத்துவமனை, [10]சென்னை – வடபழனி[11]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. Dental Caries: https://www.kauveryhospital.com/nightingale/a-case-report-on-severe-dental-caries-with-advanced-lesions/
  2. Gum Disease: https://www.kauveryhospital.com/news-events/november-diabetes-gum-disease-other-dental-problems-2021/
  3. இளைஞர்களுக்கு ஞானப் பல் (Wisdom Tooth) வலி: https://youtu.be/Yko5Tfv5q-4?si=k1WrXe9KbzisBvjf
  4. மாரடைப்பைக்: https://www.kauveryhospital.com/blog/heart-health/why-do-people-get-heart-attack-when-they-are-young/
  5. The link between Oral Health and Cardiovascular Disease: https://www.kauveryhospital.com/blog/heart-health/the-link-between-oral-health-and-cardiovascular-disease/
  6. Periodontitis: https://www.kauveryhospital.com/newsletters/periodontal-disease-raising-awareness/
  7. வாய் புற்றுநோய்: https://www.kauveryhospital.com/blog/cancer/oral-cancer/
  8. Dental Check-up: https://www.kauveryhospital.com/centers-of-excellence-and-specialties/dental/
  9. டாக்டர் விஜயலட்சுமி பத்மநாபன்: https://www.kauveryhospital.com/doctors/chennai-vadapalani/dental-and-maxillofacial/dr-vijayalakshmi-p/
  10. காவேரி மருத்துவமனை, : https://www.kauveryhospital.com/our-locations/chennai-vadapalani/
  11. சென்னை – வடபழனி: https://www.kauveryhospital.com/our-locations/chennai-vadapalani/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/the-mirror-of-physical-health/