இது நுரையீரல் ஆரோக்கியத்துக்கான சவால்!

by admin-blog-kh | November 10, 2025 10:39 am

ஆரம்பகால கண்டறிதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே உலக நுரையீரல் புற்றுநோய் தினத்தின் செய்தி.

நுரையீரல் புற்றுநோய் என்பது உலகளவில் புற்றுநோய் மரணங்களுக்கு முதன்மையான காரணமாக இருக்கும் கொடிய நோயாகும். இந்தியாவில் இந்த எண்ணிக்கை மிகவும் கவலைக்குரிய வகையில் அதிகரித்து வருகிறது. 2025-ம் ஆண்டில் இந்தியாவில் ஏறக்குறைய 1.6 லட்சம் நுரையீரல் புற்றுநோயாளிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இவர்களில் 75 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் முற்றிய நிலைகளில்தான் கண்டறியப்படுகிறார்கள். இது இந்திய ஆண்களில் புற்றுநோய்த் தொடர்பான மரணங்களுக்கு இரண்டாவது முக்கிய காரணமாக அமைகிறது.

இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயின் நிலைமை 

மேற்கத்திய நாடுகளில் நுரையீரல் புற்றுநோய்[1] பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களையே பாதிக்கிறது. இந்தியாவிலோ கவலைக்குரிய போக்கு  நிலவுகிறது. ஆம்… 50 வயதுக்கு அருகிலேயே இந்த நோயின் விகிதம் அதிகரித்து வருகிறது. இது நம் நாட்டின் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களின் நேரடி விளைவாகும்.

மற்றொரு கவனிக்கத்தக்க அதிர்ச்சிகரமான போக்கும் உண்டு… புகைபிடிக்காதவர்கள் அல்லது ஒருபோதும் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் நிகழ்வுகள் அதிகரித்து வருவது[2]… இப்போது இது 30 சதவிகிதமாக உள்ளது. இது முதன்மையாக சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பிற அறியப்படாத காரணங்களால் ஏற்படுகிறது.

புகைபிடித்தலைத் தாண்டிய ஆபத்துக் காரணிகள் 

மரபணுக் காரணிகள்

புகைபிடிக்காதவர்களிடையே, குறிப்பாக EGFR போன்ற பரம்பரை மரபணு மாற்றங்கள் நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன. இருப்பினும் இவற்றின் நிகழ்வு குறைவாகவே உள்ளது.

ஏற்கனவே இருக்கும் நுரையீரல் நோய்கள்

காசநோய்[3] மற்றும் பிற நாள்பட்ட அழற்சி நோய்கள் நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றன.

மறைமுகப் புகைபிடித்தல்

பிறர் புகைபிடிக்கும் சூழலில் இருப்பது (செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்) கணிசமான அபாயத்தை ஏற்படுத்துகிறது.

Also Read: Lung Cancer Screening Tests – when does one need it?[4]

சுற்றுச்சூழல் மாசுபாடு

வாகன மற்றும் தொழிற்சாலை வெளியேற்றங்கள் குரூப் 1 புற்றுநோய்க் காரணியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. வீட்டு உள்ளகக் காற்று மாசுபாடும்[5], சமையல் மற்றும் வெப்பப்படுத்தலுக்கு  பயோமாஸ் எரிபொருள் எரிப்பதும் பென்சீன் மற்றும் ஃபார்மால்டிஹைடை வெளியிடுகிறது. இது நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.

தொழில்சார் ஆபத்துகள்

தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறை 

சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறைகளும் அபாயத்தை அதிகரிக்கின்றன.

ஆரம்பகால அறிகுறிகள் மற்றும் கண்டறிதல் 

எச்சரிக்கை அறிகுறிகள்

பரிசோதனைக்கான பரிந்துரைகள் 

20 pack-year அல்லது அதற்கு மேற்பட்ட புகைபிடித்த வரலாறு உள்ள 50-80 வயதுடையவர்கள் ஆண்டுதோறும் குறைந்த டோஸ் மார்பு CT ஸ்கேன் செய்துகொள்ள வேண்டும். Pack-year என்பது நாளொன்றுக்கு 1 பாக்கெட் (20 சிகரெட்) புகைபிடித்து 20 ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கிறது. அல்லது நாளொன்றுக்கு 2 பாக்கெட் புகைபிடித்து 10 ஆண்டுகள் நிறைவடைவதையும் குறிக்கலாம். இன்னும் புகைபிடிப்பவர்கள் அல்லது கடந்த 15 ஆண்டுகளுக்குள் புகைபிடிப்பை நிறுத்தியவர்களுக்கு இந்த வழிகாட்டுதல் பொருந்தும்.

4 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் தொடர் இருமல், மார்பு வலி, தாமதமாக ஏற்படும் மூச்சுத்திணறல், குரல் மாற்றம், கபத்தில் ரத்தம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக CT ஸ்கேன்[7] செய்துகொள்ள வேண்டும்.

சிகிச்சை திட்டமிடல் 

அறுவைசிகிச்சை, மருத்துவ மற்றும் கதிர்வீச்சு ஆன்காலஜிஸ்ட்கள்[8] நுரையீரல் மருத்துவருடன்[9] சேர்ந்து பல்துறை குழு கூட்டத்தில் தனிப்பட்ட சிகிச்சை திட்டத்தை முடிவு செய்கிறார்கள்.

சிகிச்சை முறைகள் 

சிக்கலான நுரையீரல் புற்றுநோய் அறுவைசிகிச்சைகள் 

நுரையீரல் புற்றுநோயின் குணப்படுத்தும் சிகிச்சையில் அறுவைசிகிச்சை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சிறிய மற்றும் அருகிலுள்ள நிணநீர் கணுக்களுக்குப் பரவாத மிக ஆரம்ப நிலை புற்றுநோய்கள் VATS அல்லது ரோபாட்டிக் அறுவைசிகிச்சை[12] போன்ற குறைந்தபட்ச ஊடுருவல் அறுவைசிகிச்சையுடன் சிகிச்சையளிக்கப்படுகின்றன.

அருகிலுள்ள நிணநீர் முடிச்சுகளில் குறைவான பரவல் கொண்ட உள்ளூர் முற்றிய புற்றுநோயில், அறுவைசிகிச்சைக்கு முன்பாக இம்யூனோதெரபி[13] அல்லது கீமோதெரபி வழங்கப்படுகிறது.

அங்கப் பாதுகாப்பு அறுவைசிகிச்சைகள் 

எண்டோ-பிராங்கியல் கட்டிகளுக்கு அங்கப் பாதுகாப்பு ஸ்லீவ் லோபெக்டமீஸ் போன்ற சிக்கலான செயல்முறைகள் செய்யப்படுகின்றன, இவை பாரம்பரியாக நியூமோனெக்டமியுடன் நிர்வகிக்கப்பட்டன.

காற்றின் தரமும் சுற்றுச்சூழல் காரணிகளும் 

உலகின் 30 மிக மாசுபட்ட நகரங்களில் 21 நகரங்கல் இந்தியாவில் இருப்பதால், காற்று மாசுபாடு நுரையீரல் புற்றுநோயின் குறிப்பிடத்தக்க ஆபத்துக் காரணியாக உள்ளது.

Also Read: Lung Biopsy- Procedure and Recovery[14]

தடுப்பு நடவடிக்கைகள்

தொழில்நுட்பம் மற்றும் புதுமைகள் 

நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. மாலிகுலர் ஆன்காலஜியின் வளர்ச்சியுடன், புதிய மரபணு மாற்றங்கள் மற்றும் இந்த மாற்றங்களுக்கு எதிரான இலக்கு மருந்துகள் இந்தப் புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் ஆயுதக் களஞ்சியத்தின் பகுதியாக மாறியுள்ளன.

நவீன சிகிச்சை முறைகள் 

அறுவைசிகிச்சைக்குப் பின் குணமடைதலும் வாழ்க்கைத் தரமும் 

முழுமையான குணமடைதல்  மற்றும் அறுவைசிகிச்சைக்குப் பிறகு நல்ல வாழ்க்கைத் தரத்துக்கு நுரையீரல் மறுவாழ்வு[15] மிக முக்கியமானது. இது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, உடற்பயிற்சி திறனை மேம்படுத்துகிறது, அறுவைசிகிச்சைக்குப் பிறகான சிக்கல்களைக் குறைக்கிறது, தினசரி வாழ்க்கை நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது மற்றும் உளவியல் நல்வாழ்வை மேம்படுத்துகிறது.

நுரையீரல் புற்றுநோய்த் தடுப்பு வழிகாட்டுதல்கள் 

உடனடி நடவடிக்கைகள்

அபாயகரமான தொழில்கள்

எச்சரிக்கை அறிகுறிகள்

முன்னுரிமை நடவடிக்கைகள் 

உடனடி நடவடிக்கைகள்: புகைபிடித்தல் மற்றும் புகையிலை தொடர்பான அனைத்துப் பொருட்களின் பயன்பாட்டையும் முழுமையாக நிறுத்துவது முதன்மையான தடுப்பு நடவடிக்கையாகும். நீங்கள் தற்போது புகைபிடிக்கவில்லை என்றாலும், மறைமுக புகைபிடித்தலைத் தவிர்ப்பதும் மிக முக்கியம்.

வாழ்க்கைமுறை மாற்றங்கள்

வீடியோ உதவி தோராஸ்கோபிக் அறுவைசிகிச்சை (VATS) 

நுரையீரல் புற்றுநோய்க்கான குறைந்தபட்ச ஊடுருவல் அறுவைசிகிச்சைகளான VATS[16] அறுவைசிகிச்சை[17] சிறு கீறல் மூலம் பெரிய நுரையீரல் அறுவைசிகிச்சை செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. பாரம்பரிய தோராகோடமியுடன் ஒப்பிடும்போது – அங்கு மார்பு சுவர் சுமார் 15 செ.மீ அளவு கீறலுடன் திறக்கப்படுகிறது – VATS நுட்பத்தில் அறுவைசிகிச்சைக்குப் பிறகு மிகக் குறைந்த வலி ஏற்படுகிறது.

நன்மைகள்

பல்துறை புற்றுநோய் பராமரிப்பு

நுரையீரல் புற்றுநோய் ஒரு சிக்கலான நோயாகும், இதற்குப் பல்துறை பராமரிப்பு தேவைப்படுகிறது. இது பெரும்பாலும் ஆன்காலஜிஸ்ட், நுரையீரல் மருத்துவர் மற்றும் இன்டர்வென்ஷனல் ரேடியாலஜிஸ்ட் ஆகியோரின் முழுமையான மதிப்பீட்டுடன் தொடங்குகிறது.

நோய் கண்டறிதல் செயல்முறை

டாக்டர் பி. அனிஸ்[19]
MBBS, MS, MRCS, Mch
புற்றுநோயியல் அறுவைசிகிச்சை நிபுணர்
காவேரி மருத்துவமனை, திருச்சி தென்னூர்[20]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

 

Endnotes:
  1. நுரையீரல் புற்றுநோய்: https://www.kauveryhospital.com/news-events/lung-cancer-awareness-month-lets-talk-about-the-most-preventable-cancer/
  2. புகைபிடிக்காதவர்கள் அல்லது ஒருபோதும் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் நிகழ்வுகள் அதிகரித்து வருவது: https://www.kauveryhospital.com/blog/cancer/can-non-smokers-get-lung-cancer/
  3. காசநோய்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/tuberculosis-we-can-win/
  4. Lung Cancer Screening Tests – when does one need it?: https://www.kauveryhospital.com/blog/cancer/lung-cancer-screening-tests-when-does-one-need-it/
  5. காற்று மாசுபாடும்: https://www.kauveryhospital.com/blog/tamil-articles/the-hidden-dangers-of-air-pollution/
  6. 3-4 வாரங்களுக்கு மேல் நீடிக்கும்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/have-a-cold-cough-or-fever-for-more-than-two-weeks/
  7. CT ஸ்கேன்: https://youtu.be/pcFwRsGj6jw?si=nFzFGMRhSQ4V1Wtf
  8. கதிர்வீச்சு ஆன்காலஜிஸ்ட்கள்: https://www.kauveryhospital.com/centers-of-excellence-and-specialties/radiation-oncology/
  9. நுரையீரல் மருத்துவருடன்: https://www.kauveryhospital.com/centers-of-excellence-and-specialties/pulmonology/
  10. கீமோதெரபிக்குப் பிறகு அறுவைசிகிச்சை: https://www.kauveryhospital.com/chemotherapy/
  11. கதிர்வீச்சு சிகிச்சை: https://www.kauveryhospital.com/centers-of-excellence-and-specialties/radiation-oncology/
  12. ரோபாட்டிக் அறுவைசிகிச்சை: https://www.kauveryhospital.com/kauvery-institute-of-robotic-surgery/
  13. இம்யூனோதெரபி: https://youtu.be/izjjO1seesA?si=YLiEhEVs2AwHZqlu
  14. : Lung Biopsy- Procedure and Recovery: https://www.kauveryhospital.com/blog/cancer/lung-biopsy-procedure-and-recovery/
  15. நுரையீரல் மறுவாழ்வு: https://youtu.be/bzSmsevbXoo?si=uHbSFdOXZ5R0zkwi
  16. VATS: https://www.kauveryhospital.com/blog/heart-health/what-is-vats/
  17. அறுவைசிகிச்சை: https://www.kauveryhospital.com/blog/heart-health/what-is-vats/
  18. PET CT ஸ்கேன்: https://youtu.be/DFXMA88J-Xw?si=T-Q42NGee8FlnjBf
  19. டாக்டர் பி. அனிஸ்: https://www.kauveryhospital.com/doctors/trichy-tennur/oncology/dr-b-anis/
  20. திருச்சி தென்னூர்: https://www.kauveryhospital.com/our-locations/trichy-tennur/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/this-is-a-challenge-for-lung-health/