ஆம்… காசநோயை ஒழிப்போம்!

by admin-blog-kh | March 16, 2026 9:08 am

காசநோய் என்பது பழைய காலத்து நோய்என்று நினைத்துவிட வேண்டாம். அது இன்றும் நம் சமூகத்தில் ஒருமெளன அண்டை வீட்டான்போல வாழ்கிறது. ஆனால், இப்போது சரியான விழிப்புணர்வு, சரியான சிகிச்சையுடன் இந்தியாவைக் காசநோயிலிருந்து விடுவிக்க வாய்ப்பிருக்கிறது!

இந்தியாவில் காசநோய்நிலை என்ன

2015-ம் ஆண்டில் இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 237 பேர் என்று இருந்த காசநோய் தொற்று விகிதம், 2024-ம் ஆண்டில் 183 ஆகக் குறைந்திருக்கிறது. சிகிச்சை வட்டம் 50 சதவிகிதத்திலிருந்து 92 சதவிகிதமாக – கிட்டதட்ட இரட்டிப்பாக – உயர்ந்திருக்கிறது. இது மிகப்பெரிய முன்னேற்றம். ஆனால், இன்னும் சிகிச்சையை இடையில் நிறுத்துவது, சமூகக் களங்கம், மருத்துவத் தகுதி இல்லாதவர்களிடம் சிகிச்சை பெறுவது போன்ற தடைகள் நீக்கப்படும்போதுதான் நாம் காசநோயிலிருந்து விடுதலை பெற முடியும்.

காசநோய் என்றால் என்ன? எப்படி பரவுகிறது

Mycobacterium tuberculosis என்ற கிருமியால் உண்டாகும் காசநோய்[1], காற்றில் கலந்த நுண்திவலைகள் மூலம் பரவுகிறது. நோயாளி இருமும்போது வெளியேறும் திவலைகளை மற்றவர் சுவாசிக்கும்போது கிருமி உடலுக்குள் நுழைகிறது. இது முக்கியமாக நுரையீரலை பாதிக்கும். மூளை, முதுகெலும்பு, இதயம் போன்ற உறுப்புகளையும் பாதிக்கலாம்.

உடலுக்குள் கிருமி நுழைந்தாலும் உடனே நோய் வருவதில்லை. இதை Latent TB என்கிறோம். கிருமி உறங்கிய நிலையில் இருக்கும், அறிகுறிகள் இல்லை, பரவாது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது கிருமி விழிப்படைந்து Active TB ஆகும். 8-9 வாரங்களுக்கும் மேல் இருமல்[2], ரத்தம் கலந்த சளி, திடீர் எடை குறைவு, தொடர்ந்த காய்ச்சல், பசியின்மை… இவற்றில் ஏதாவது தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.

யாருக்கு அதிக ஆபத்து

நீரிழிவு நோயாளிகள்[3], HIV தொற்றுள்ளவர்கள், ஸ்டீராய்டு மருந்துகள் எடுப்பவர்கள், மது அருந்துவோர், ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள், சுகாதார பணியாளர்கள்… இவர்களுக்கு ஆபத்து அதிகம். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே மிகவும் பாதிக்கக்கூடியவர்கள்… அவர்களுக்கு TB மூளைக்காய்ச்சல் போன்ற தீவிர நிலைகள் வரலாம்.

நவீன கண்டறிதல் – GeneXpert 

பழைய மைக்ரோஸ்கோப் முறையில் பல்லாயிரக்கணக்கான கிருமிகள் இருக்கும்போதுதான் கண்டறிய முடியும். இப்போது GeneXpert (CB-NAAT) என்ற DNA அடிப்படையிலான சோதனை ஒரே ஒரு கிருமி இருந்தாலும் கண்டுபிடிக்கும்… மிகத் துல்லியமான, வேகமான தொழில்நுட்பம். காவேரி மருத்துவமனையில் இந்த நவீன கண்டறிதல் வசதி உள்ளது[4].

Also Read: சிறுநீர் காசநோய் என்றால் என்ன?[5]

சிகிச்சைஏன் முழுவதுமாக எடுக்க வேண்டும்

நுரையீரல் TBக்கு 6 மாதம், மூளை/முதுகெலும்பு/இதய TB க்கு 12 மாதம் சிகிச்சை தேவை. ஒரு மாதம், இரண்டு மாதத்தில் உடம்பு சரியாகிவிட்டது என்று மருந்தை நிறுத்திவிடுவது மிகப்பெரிய தவறு. இப்படி சிகிச்சையை இடையில் நிறுத்துவோருக்கு MDR-TB – பல மருந்துகளுக்கும் எதிர்ப்புத்தன்மை கொண்ட காசநோய் – வரலாம். இது சிகிச்சைக்கு கடினமானது, செலவும் அதிகம். DOTS முறையில் மருத்துவர் கண்காணிப்பில் முழு கோர்ஸ் எடுப்பதே சரியான வழி. அனைத்து TB வழக்குகளும் அரசின் National TB Elimination Programmeக்கு தகவல் அளிக்கப்பட வேண்டும்.

தடுப்பது எப்படி

BCG தடுப்பூசி குழந்தைகளுக்கு ஓராண்டு வரை பாதுகாப்பு தரும். ஆனால், வாழ்நாள் முழுவதும் காக்காது. வீட்டில் யாரேனும் TB நோயாளி இருந்தால் – காற்றோட்டமான அறையில் வைக்கவும், நோயாளி மாஸ்க் அணிவது கட்டாயம், சளியை ஒரு பாத்திரத்தில் சேகரித்து மண்ணில் புதைக்கவும். ஊட்டச்சத்தான உணவு நோய் எதிர்ப்பை வலுப்படுத்தும்.

தவறான எண்ணங்கள் 

காசநோய் பரம்பரை நோய் அல்ல. பாத்திரம் பகிர்வதால் பரவாது. இது முழுமையாக குணப்படுத்தக்கூடிய நோய். சமூக களங்கத்தால் நோயை மறைக்காதீர்கள். மறைத்தால் பரவும், வெளிப்படுத்தினால் குணமாகும்!

2015-ம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 237 பேர் என்ற காசநோய் விகிதம், 2024-ம் ஆண்டில் 183 ஆகக் குறைந்தது. சிகிச்சை வட்டம் 50 சதவிகிதத்திலிருந்து 92 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆரம்பகட்ட கண்டறிதலும், முழுமையான சிகிச்சையும் இந்தியாவை TB அற்ற தேசமாக்கும்!

மக்களுக்கு ஒரு செய்தி!

• 8 வாரங்களுக்கும் மேல் இருமல் இருந்தால் உடனே GeneXpert சோதனை செய்துகொள்ளுங்கள்.
• சிகிச்சையை இடையில் நிறுத்தாதீர்கள் – MDR-TB ஆபத்து உண்டு.
• TB நோயாளியை களங்கமாக பார்க்காதீர்கள் – ஊக்கமே அவர்களுக்கு சிறந்த மருந்து.
• ‘ஆம்! காசநோயை ஒழிப்போம்!’ – இந்த உறுதிமொழியோடு நாம் ஒன்றிணைவோம்!

Dr. M. V. ராமச்சந்திரன், MBBS, MD[6]
(TB & Respiratory Diseases)
நுரையீரல் மருத்துவர்
காவேரி மருத்துவமனை, சேலம்[7]

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. Mycobacterium tuberculosis என்ற கிருமியால் உண்டாகும் காசநோய்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/tuberculosis-we-can-win/
  2. Active TB ஆகும். 8-9 வாரங்களுக்கும் மேல் இருமல்: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/have-a-cold-cough-or-fever-for-more-than-two-weeks/
  3. நீரிழிவு நோயாளிகள்: https://www.kauveryhospital.com/blog/family-and-general-medicine/essential-knowledge-a-to-z-of-diabetes/
  4. காவேரி மருத்துவமனையில் இந்த நவீன கண்டறிதல் வசதி உள்ளது: https://www.kauveryhospital.com/centers-of-excellence-and-specialties/pulmonology/
  5. சிறுநீர் காசநோய் என்றால் என்ன?: https://www.kauveryhospital.com/blog/tamil-articles/what-is-urinary-tuberculosis/
  6. Dr. M. V. ராமச்சந்திரன், MBBS, MD: https://www.kauveryhospital.com/doctors/salem/pulmonology/dr-m-v-ramachandran/
  7. காவேரி மருத்துவமனை, சேலம்: https://www.kauveryhospital.com/our-locations/salem/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/yes-let-us-eradicate-tuberculosis/