by admin-blog-kh | February 7, 2025 12:04 pm
2024 ஆம் ஆண்டின் நீரிழிவு தின கருப்பொருள் “நீரிழிவும் நலவாழ்வும்”. இதில் சமூக நலன், உடல் நலன் மற்றும் மன நலன் ஆகியவை அடங்கும். நீரிழிவு நோய் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம். நீரிழிவு நோய்[1] தடுப்பு உலகளாவிய இலக்காக இருக்க வேண்டும். ஒவ்வொரு தனிநபரின் முதன்மை முன்னுரிமை ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
சமூகத்தில் நீரிழிவு நோய் குறித்து பல தவறான கருத்துக்கள் உள்ளன. இன்சுலின் பற்றிய தவறான புரிதல் முக்கியமானது. இன்சுலின் பயன்படுத்துவது சிகிச்சையின் தோல்வி என்றும், அது சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் பலர் நினைக்கிறார்கள். இது வாழ்நாள் முழுவதும் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல. குறுகிய காலத்திற்கு இன்சுலின் எடுப்பது மிகவும் பயனளிக்கும். பெரும்பாலான நோயாளிகள் கட்டுப்பாட்டில் இருந்தால், நாங்கள் இன்சுலினை நிறுத்த முடியும்.
மற்றொரு தவறான கருத்து, நீரிழிவு மருந்துகள் சிறுநீரகம் அல்லது கல்லீரல் பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பது. அதுவும் உண்மையல்ல. நீரிழிவு மருந்துகள் மிகவும் பாதுகாப்பானவை. ஏற்கனவே சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு பாதுகாப்பான அளவில் மருந்துகளை வழங்க வேண்டும்.
ஆம், தொடர் குளுக்கோஸ் கண்காணிப்பு ஆய்வு இன்றைய நடைமுறையை மாற்றியுள்ளது. இன்று நாங்கள் துல்லியமான நீரிழிவு பராமரிப்பை வழங்க முடிகிறது. நீரிழிவு நோயாளியின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மருந்தின் அளவை தீர்மானிக்க இது உதவுகிறது. இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்களை குறைக்கிறது, குறைந்த இரத்த சர்க்கரை நிலைகளை தடுக்க உதவுகிறது.
செயற்கை நுண்ணறிவு மூலம், நீரிழிவு பராமரிப்பை மேலும் துல்லியமாக வழங்க முடிகிறது. இன்சுலின் பம்ப்கள் தற்போது CGMS உடன் வருகின்றன, இது இரத்த சர்க்கரை அளவுகளுக்கு ஏற்ப இன்சுலினை வழங்கி, குறைந்த சர்க்கரை நிலைகளை கண்டறிந்து உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளைத் தடுக்க எச்சரிக்கைகளை வழங்குகிறது.
வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவு நோய்களுக்கு இடையேயான வேறுபாட்டை விளக்க முடியுமா? அவற்றின் காரணங்கள் குறித்த புதிய கண்டுபிடிப்புகள் ஏதேனும் உள்ளதா?
வகை 1 நீரிழிவில், நோய் எதிர்ப்பு அமைப்பின் காரணமாக கணையத்தின் பீட்டா செல்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவதால் இன்சுலின் உற்பத்தியே நடைபெறுவதில்லை. இது பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தொடங்குகிறது. இதனால் நோயாளிகள் வெளியிலிருந்து இன்சுலின் எடுத்துக்கொள்வது அவசியமாகிறது.
வகை 2 நீரிழிவில், கணையம் இன்சுலின் உற்பத்தி செய்தாலும், உடல் செல்கள் இன்சுலினுக்கு சரியாக பதிலளிப்பதில்லை. இதை இன்சுலின் எதிர்ப்பு நிலை என்கிறோம். இயல்பாக, நாம் உணவு உண்ணும்போது, அது கார்போஹைட்ரேட், கொழுப்புகள் மற்றும் புரதமாக மாற்றப்படுகிறது. கார்போஹைட்ரேட் குளுக்கோசாக மாறி செல்களுக்கு ஆற்றலை வழங்குகிறது. ஆனால் வகை 2 நீரிழிவில், இன்சுலின் இருந்தும் செல்கள் குளுக்கோசை உள்ளே எடுத்துக்கொள்வதில்லை.
குறிப்பாக வகை 2 நீரிழிவில் மரபணுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குடும்ப வரலாறு என்பது மாற்ற முடியாத ஒரு காரணி. ஆனால் தற்போதைய சூழலில், உடல் உழைப்பின்மை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், மன அழுத்தம் போன்ற மாற்றக்கூடிய காரணிகளே நீரிழிவுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. குடும்ப வரலாறு இருந்தாலும், இந்த மாற்றக்கூடிய காரணிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் நீரிழிவை தடுக்கவோ தாமதப்படுத்தவோ முடியும்.
நீரிழிவு நோய் மேலாண்மையில் புதிய சிகிச்சை முறைகள் அல்லது தொழில்நுட்பங்கள் குறித்து நீங்கள் உற்சாகமாக உள்ளீர்களா?ஆம், உலகளவில் நீரிழிவு பிரச்னை[2] அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சை முறைகளிலும் நம்பிக்கையூட்டும் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது இரண்டு புதிய லக்கூறுகள் SGLT2i மற்றும் GLP1 அனலாக் மருந்துகள் – மிகவும் நம்பிக்கை அளிக்கின்றன. இவை இரத்த சர்க்கரையை மட்டுமல்லாமல் உடல்
எடையையும் குறைத்து, இதயம் மற்றும் சிறுநீரகத்தையும் பாதுகாக்கின்றன.
நேரடி தொடர் குளுக்கோஸ் கண்காணிப்பு முறை மூலம், நோயாளியின் இரத்த சர்க்கரை அளவை மருத்துவர் மற்றும் சுகாதார குழு தொலைதூரத்திலிருந்தே கண்காணித்து வழிகாட்ட முடிகிறது.
உணவுமுறையே நீரிழிவு மேலாண்மையின் அடிப்படை தூண். 50 சதவீதத்துக்கும் மேல் இரத்த சர்க்கரை அளவைக் உணவு கட்டுப்பாட்டால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். நீரிழிவுக்கு எந்த அற்புத உணவும் கிடையாது. பரிந்துரைக்கப்படும் உணவு சமச்சீரானதாக, மிதமானதாக, ஊட்டச்சத்து நிறைந்ததாக, குறைந்த கார்போஹைட்ரேட், அதிக நார்ச்சத்து, அதிக புரதம், குறைந்த கொழுப்பு, குறைந்த உப்பு கொண்டதாக இருக்க வேண்டும்.
உடல் பருமனும் நீரிழிவும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. உடல் எடை அதிகரிக்கும்போது இன்சுலின் எதிர்ப்பு ஏற்பட்டு நீரிழிவு வர வாய்ப்புள்ளது. இதனால்தான் ‘டயபெசிட்டி’ என்ற புதிய சொல் உருவாகியுள்ளது. சமீபகால ஆண்டுகளில் உடல் பருமன் அதிகரிப்புக்கு இரண்டு முக்கிய காரணிகள் – அதிக கலோரி உட்கொள்ளல் மற்றும் குறைந்த உடல் செயல்பாடு. எடை மேலாண்மைக்கு இவ்விரண்டையும் கவனிக்க வேண்டும்.
மக்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்:
சில நேரங்களில் எந்த அறிகுறியும் இல்லாமலேயே அதிக இரத்த சர்க்கரை கண்டறியப்படலாம். அதனால்தான் நீரிழிவை ‘அமைதியான நோய்’ என்று அழைக்கிறோம்.
இந்தியாவில் 30 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் நீரிழிவு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், குறிப்பாக அதிக ஆபத்துள்ள குழுக்கள்.
நீரிழிவு முன்னோடி நிலை என்பது சுவரில் இருக்கும் பூனையைப் போன்றது. இந்த நிலையை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், நீரிழிவு நோய் வரும் பாதையை மாற்ற முடியும். ICMR தரவுகளின்படி, இந்தியாவில் 13 கோடிக்கும் மேற்பட்டோர் நீரிழிவு முன்னோடி நிலையில் உள்ளனர், இது நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையான 10 கோடியை விட அதிகம்.
ரத்த சர்க்கரை அளவு சரியாக கட்டுப்படுத்தப்படாத போது சிக்கல்கள் ஏற்படுகின்றன. இரத்த நாளங்களில்தான் முக்கியமாக பாதிப்புகள் ஏற்படுகின்றன. தலை முதல் கால் வரை இரத்தம் பாய்வதால், உடலின் எந்த பகுதியிலும் சிக்கல்கள் ஏற்படலாம்.
சிறிய இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகள்:
நீரிழிவு நோயின் சுமை அதிகரித்து வந்தாலும், இந்தியா உலகின் நீரிழிவு தலைநகரத்திலிருந்து நீரிழிவு பராமரிப்பின் தலைநகரமாக மாறி வருகிறது. அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் நீரிழிவை தடுப்பதிலும், சிக்கல்களைத் தடுப்பதிலும் தீவிரமாக ஈடுபடுகின்றன. புதிய மருந்துகள் இதய மற்றும் சிறுநீரக சிக்கல்களைத் தடுக்க உதவுகின்றன.
இன்றைய தலைமுறையினர் தங்கள் கனவுகளை அடைய சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனால் ஆரோக்கியத்தை பொறுத்தவரை குறைபாடுகள் உள்ளன. “நேரமில்லை” என்ற சாக்குப்போக்கில் உடற்பயிற்சி இல்லை. துரித உணவுகள், குறைந்த தூக்கம், அதிக மன அழுத்தம் போன்றவை பொதுவானவை.
ஆம், இங்கிலாந்தில் நடத்தப்பட்ட DIRECT ஆய்வின்படி, குறைந்த கலோரி உணவு மற்றும் முறையான உடற்பயிற்சி மூலம் நீரிழிவை திருப்பி விட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. GLP மூலக்கூறு மருந்துகள் எடையைக் குறைத்து, இதயம் மற்றும் சிறுநீரகச் செயல்பாட்டை மேம்படுத்துவது நம்பிக்கை அளிக்கிறது. விரைவில் வாரம் ஒருமுறை மட்டுமே எடுக்க வேண்டிய இன்சுலின் வர உள்ளது.
பள்ளிகளில் வகை 1 நீரிழிவு உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஆதரவு மிக முக்கியம். மன அழுத்தத்தை சமாளிக்க உதவ வேண்டும்.
பணியிடங்களில், நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த சமூக ஆதரவு தேவை. மருந்துகள், ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடுத்துவதன் மூலம் பணி தரத்தையும் மேம்படுத்த முடியும்.
உடற்பயிற்சி இரத்த சர்க்கரை அளவை மட்டுமல்லாமல் மன நலத்தையும் மேம்படுத்துகிறது. இரத்த அழுத்தம், கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் உடல் எடையையும் குறைக்கிறது. உடற்பயிற்சியின் போது வெளியாகும் என்டோர்ஃபின்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கின்றன.
40 சதவீதத்துக்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகள் ‘நீரிழிவு மன அழுத்தம்’ என்ற மனநலப் பிரச்னையை எதிர்கொள்கிறார்கள். இது பெரும்பாலும் கவனிக்கப்படாமலேயே போகிறது. நோயை ஏற்றுக்கொள்வது, குடும்பம் மற்றும் சமூகத்தின் ஆதரவு, நிதிச் சுமை போன்ற பல காரணிகள் மன உளைச்சலுக்கு வழிவகுக்கின்றன.
வயதானவர்களின் நீரிழிவு மேலாண்மை முழுமையானதாக இருக்க வேண்டும். இளம் நோயாளிகளை விட குறைவான கடுமையான இலக்குகளை வைத்து, குறிப்பாக குறைந்த இரத்த சர்க்கரை நிலைகளை (ஹைப்போகிளைசீமியா) தவிர்க்க வேண்டும். வயதாக வயதாக கால் உணர்வு குறைவதால், கால் பராமரிப்பு மிக முக்கியம். முகம் பராமரிப்பு போலவே கால் பராமரிப்பும் முக்கியம். குடும்பம் மற்றும் சமூக ஆதரவு மிகவும் அவசியம்.
நேர்மறையாக இருங்கள், பிரச்னையுடன் வாழாமல் தீர்வைக் கண்டறியுங்கள்.
Dr. கே.பரணீதரன் MBBS, MD[4] (General Medicine)
நீரிழிவு நோய் நிபுணர்
காவேரி மருத்துவமனை
ஆழ்வார்பேட்டை, சென்னை
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801
Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/you-can-reverse-the-major-causes-of-diabetes/
Copyright ©2026 Kauvery Blog unless otherwise noted.