மற்றவரைக் கவனிக்கும் நீங்கள், உங்கள் எலும்புகளையும் கவனியுங்கள்!

by admin-blog-kh | August 25, 2026 7:18 am

வீட்டையும் வேலையையும் குடும்பத்தையும் சமாளிக்கும் பரபரப்பில், பல பெண்கள் தங்கள் சொந்த வலியைக் கண்டுகொள்வதே இல்லை. முழங்கால் வலி[1], தோள்பட்டை விறைப்பு, குதிகால் வலி இருந்தாலும், ‘இது தானாகச் சரியாகிவிடும்’ என்று தள்ளிப்போட்டு, அது அன்றாட வாழ்வைப் பாதிக்கத் தொடங்கிய பிறகே மருத்துவரை நாடுகிறார்கள். ஆனால், எலும்பு, மூட்டு ஆரோக்கியத்தில் பெண்கள் ஆண்களைவிட அதிக அளவு கவனம் தேவைப்படுபவர்கள். பெண்களிடையே முழங்கால் மூட்டழற்சி (Knee Arthritis), எலும்புப் புரை (Osteoporosis[2]), உறைந்த தோள்பட்டை (Frozen Shoulder[3]), கழுத்து வலி, குதிகால் வலி ஆகியவை மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றன.

பெண்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?

பெண்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்

இதற்கு உயிரியல் காரணங்கள் உண்டு. மாதவிடாய் நிறுத்தத்துக்குப் (Menopause[4]) பிறகு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் எலும்பு வலிமையைக் குறைக்கின்றன. மேலும், பெண்களுக்கு இயற்கையாகவே ஆண்களைவிடத் தசை அளவு குறைவு. தசைகள்தாம் எலும்புகளையும் மூட்டுக்களையும் தாங்கிப் பாதுகாக்கின்றன; எனவே, இந்தக் குறைவு காலப்போக்கில் அவர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இதனுடன் வீட்டு வேலை, பராமரிப்புப் பணிகளின் தொடர் உடல் உழைப்பும், முறையான உடற்பயிற்சிக்கு நேரமின்மையும் சேர்ந்து ஆபத்தை அதிகரிக்கின்றன. உலக சுகாதார நிறுவனமும், மூட்டழற்சி போன்ற எலும்பு மூட்டுப் பிரச்னைகள் ஆண்களைவிடப் பெண்களை அதிகம் பாதிக்கின்றன என்று சுட்டிக்காட்டுகிறது.

Also Read: மூன்று முக்கிய வாழ்க்கை நிலைகளில் எச்சரிக்கை அவசியம்![5]

எலும்புப் புரை வயதானவர்களுக்கு மட்டுமே வரும் என்பது தவறான எண்ணம். உடல் உழைப்பின்மையோ, ஊட்டச்சத்துக் குறைபாடோ உள்ள இளம் பெண்களுக்கும் இது வரலாம். நம் எலும்புகள் சுமார் 30 வயதுக்குள் தங்கள் உச்ச வலிமையை அடைந்துவிடுகின்றன. எனவே, இருபது வயதிலிருந்தே, தசை வலிமைப் பயிற்சிகள் (Resistance Exercises), போதிய புரதம், அத்தியாவசிய நுண்ணூட்டச்சத்துகள் நிறைந்த சமச்சீர் உணவு மூலம் வலிமையான எலும்புகளையும் தசைகளையும் உருவாக்கத் தொடங்க வேண்டும்.

ஒரே நோய்வெவ்வேறு வெளிப்பாடு 

மூட்டழற்சியும் பெண்களில் வேறுபட்டு வெளிப்படுகிறது. எக்ஸ்-கதிர் படத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அளவு பாதிப்பு தென்பட்டாலும், பெண்கள் அதிக வலியையும் விறைப்பையும் உணர்கிறார்கள். அறிகுறிகள் சற்று முன்னதாகவே தோன்றலாம், அன்றாடச் செயல்கள் கடினமாகலாம், பல மூட்டுக்கள் ஒரே நேரத்தில் பாதிக்கப்படலாம். பெண்களின் இடுப்பு அகலமாக இருப்பதால் முழங்கால் மூட்டின் மேல் அழுத்தம் அதிகரிக்கிறது. ஆரம்பச் சிகிச்சையும் தொடர் தசை வலிமைப் பயிற்சிகளும் வலியைக் குறைத்து, இயக்கத் திறனைப் பேணுகின்றன.

தினசரி சிறு பழக்கங்களே பெரிய மாற்றம் 

வேலை, வீடு, குடும்பம் என அனைத்தையும் சமாளிக்கும் பெண் தன் எலும்புகளையும் மூட்டுக்களையும் நீண்ட காலம் பாதுகாக்க என்ன செய்யலாம்? தசை வலிமைப் பயிற்சிகளே சிறந்த வழிகளில் ஒன்று. உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இருங்கள், போதிய புரதமும் நுண்ணூட்டச்சத்துகளும் கொண்ட சமச்சீர் உணவை உண்ணுங்கள், ஆரோக்கியமான உடல் எடையைப் பேணுங்கள், தொடர்ந்து வரும் வலியைப் புறக்கணிக்காதீர்கள்.

மற்றவர்களைக் கவனிப்பதில் தன்னை மறக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் இது ஒரு நினைவூட்டல்: உங்கள் ஆரோக்கியமும் முக்கியம். இன்று நீங்கள் எலும்புகளுக்குச் செய்யும் சிறு கவனிப்பே, நாளைய சுதந்திரமான, சுறுசுறுப்பான வாழ்வுக்கு அடித்தளம்!

எப்போது எலும்பியல் நிபுணரை அணுக வேண்டும்?

வலி இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்தால்; அன்றாட வேலைகளைத் தடுத்தால்; மூட்டில் வீக்கம் இருந்தால்; இரவில் தூக்கத்தைக் கலைத்தால். இவற்றைத் தள்ளிப்போடாமல் எலும்பியல் நிபுணரை (Orthopaedic Specialist) உடனே சந்திக்கவும். ஆரம்பத்திலேயே கண்டறிவது பெரும்பாலும் எளிய சிகிச்சையையும் சிறந்த குணமடைதலையும் உறுதி செய்கிறது.

Dr. ராஜ்சிரிஷ் பெல்லாள் ஸ்ரீதரன் MBBS, DNB, FRCS[6]
(Trauma & Orthopaedics), Dip. SICOT
எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்
காவேரி மருத்துவமனைசேலம்[7]

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011

Endnotes:
  1. முழங்கால் வலி: https://www.kauveryhospital.com/blog/orthopedics/knee-pain-causes-new-age-treatments-and-prevention-tips/
  2. Osteoporosis: https://www.kauveryhospital.com/blog/orthopedics/what-women-should-know-about-osteoporosis/
  3. Frozen Shoulder: https://www.kauveryhospital.com/blog/orthopedics/frozen-shoulder-factors-stages-treatments/
  4. Menopause: https://www.kauveryhospital.com/blog/obstetrics-and-gynecology/10-reasons-to-celebrate-menopause/
  5. மூன்று முக்கிய வாழ்க்கை நிலைகளில் எச்சரிக்கை அவசியம்!: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/caution-is-necessary-during-three-important-stages-of-life/
  6. Dr. ராஜ்சிரிஷ் பெல்லாள் ஸ்ரீதரன் MBBS, DNB, FRCS: https://www.kauveryhospital.com/doctors/salem/orthopaedics/dr-rajsirish-bellal-sridharan/
  7. காவேரி மருத்துவமனைசேலம்: https://www.kauveryhospital.com/our-locations/salem/

Source URL: https://www.kauveryhospital.com/blog/vaazhga-nalamudan/you-look-after-others-take-care-of-your-bones-too/