“காவேரித்தாய் – 3”

அக்கறை, ஆரோக்கியம்,

பாசம், நல வாழ்வியல் முறை என அனைத்து பரிமாணங்களையும் பயிற்றுவிக்கும் பல்கலைக்கழகம்,

அவள் உபசரிக்கும் அழகை கவி வடிக்க உவமைகளும் உதவாமல் ஊமையானது.

உயர்தர மருத்துவ வசதி இல்லாத காலங்களில் பல மருத்துவர்களின் கனவுகளுக்கு மத்தியில்,

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு திருச்சியில் முப்பது படுக்கைகள் கொண்டு ஆரம்பமானது அவள் வாழ்க்கை சரித்திரம்.

மருந்தில்லா காலங்களில் பலவகை கண்டறியாத நோய் தொற்று,

உயிர் காக்க நாடி வந்தோர்க்கு பக்குவமாய் நோய் குணமாக்கியவள்.

இன மத பேதம் ஒப்பனை ஏதுமற்ற பேரழகியே!

சேவையில் புடவை உடுத்தி வரும் வண்ணத்துப்பூச்சியே!

பள்ளிக்கூடம் போனதில்லை பரீட்சை ஏதும் கண்டதில்லை

ஆனால் ஒளி வேகத்தில் உயிர் காப்பதில் மருத்துவ மேதை அவள்.

மருத்துவக் கழிவுகளை கலக்காதே,

வகையறியாமல் அப்புறப்படுத்தாதே,

குப்பைகளை சேர்க்காதே,

ஐந்து எஸ் வழிமுறையை பழகு,

முக கவசம் அணியப் பழகு,

உணவையும், நீரையும் வீணாக்காமல் சேமிக்கப் பழகு,

மின்விசிறியை நிறுத்து,

என்ற செல்ல அதட்டலிலும் அடிப்படை அறிவை போதிக்கும் அமைவிடம் அவள்.

அவளின் தன்னலமற்ற தொண்டு தான்,

காவேரியின் செல்வ சேமிப்பு கிடங்கு.

நோய்க்கான காரணம் அறிந்து

அதற்கேற்ப அருமருந்தும் கொடுத்து,

துணை மருத்துவ ஆலோசனை அறிய செய்து, நோயை குணப்படுத்த பாடம் பயிற்றுவித்தாய்.

பல மனித உயிர்களை காத்து

எமனுக்கு சவால் விட்டவள்.

மனித குலத்தை பேணிக் காக்க மரணத்தையும் தள்ளி வைத்தவள்!

உன் கீர்த்தி எழுத பண்ணிசை தேவையில்லை.

முடிவில்லா உன் தாய்மையும் மகத்தான உன் சேவையும்

என்றென்றும் மக்களின் நம்பிக்கை உயிர் மூச்சு.

balasubramani

GK. Balasubramani

Senior Physiotherapist