தோல்வியே வெற்றியின் பாதை

 

தயக்கத்தைவிட மிகப்பெரிய தடையேதும் கிடையாது,

அதைநீ தாண்டாமல் எதையும் அடைய முடியாது.

ஒன்பது கிரகங்களும் உனக்காய்மட்டுமே உலவாது, ஆருடத்தையே நம்பிஇருந்தால் அப்பியபீடை அகலாது.

அனுபவம்தான் ஆண்டவன் அவனைநீ தேடிப்போ, கோவில்கோவிலாய்ப் போவதைவிட வெற்றியை நாடிப்போ.

யார்தான் தோற்கவில்லை எதற்குநீ வெட்கவேண்டும், எம்முயற்சியும் செய்யாதோர்தான் வெட்கவேண்டும்.

ஐம்புலத்தின் காதைமட்டும் அவ்வப்போது ஊமையாக்கு, ஆசைகளை ஓடவிட்டு அதையேஉன் பாதையாக்கு.

பிறப்புஓர் பந்தயம் இறப்பின்பின்னே முடிவுதெரியும், இடையில்தெரியும் முடிவுயெல்லாம் எக்கணமும் மாற்றம்புரியும்.

மரணத்தைவிட எதுவுமே நிரந்தரமில்லை. புரிந்துகொள்

எந்நொடியும் இறப்பு வரலாம். எண்ணியதை அடைய

விவேகம் கொள்.

 

GK. Balasubramani

Balasubramani
Senior Physiotherapist.