வெற்றியின் பாதை

Balasubramani

GK. Balasubramani,

Senior Physiotherapist, Kauvery Hospital, SalemCorrespondence: gkbalasubramani027@gmail.com

மலருக்கு இல்லை – அது

உதிர்கிற துன்பம் – ஒரு

நறுமணம் தந்தே – பல

மனங்களை வெல்லும்..!!

உடலுக்குள் இல்லை – உன்

உறுதிக்குள் உண்டு – ஒரு

லட்சியம் கொண்டால் – நீ

நிச்சயம் வெல்வாய்..!

கல்லுக்குள் இருந்தே

தண்ணீரும் பிறக்கும்..!

மண்ணுக்குள் மறைந்தும்

வைரக்கல் ஜொலிக்கும்..!

உன்னைத் துணிந்தே- இந்த

பூமிப் பந்தாடு..!

உள்ளம் மகிழ்ந்தே

நெஞ்சை நிமிர்த்தி

வெற்றி நடைபோடு….!!

Kauvery Hospital