இனிப்பு திகட்டும்போது…

இனிப்பு திகட்டும்போது…
January 09 06:49 2026 Print This Article

பெற்றோர் பெரும்பாலும் குழந்தைகள் அதிக நேரம் திரைகளில் செலவிடுவதைப் (ஸ்க்ரீன் டைம்) பற்றிக் கவலைப்படுகிறார்கள். ஆனால், உங்கள் குழந்தை எவ்வளவு ‘சர்க்கரை நேரம்’ செலவிடுகிறது என்று கவனித்திருக்கிறீர்களா?

காலை உணவுத் தானியங்களில் இருந்து பழச்சாறுகள் வரை, ‘இன்னும் ஒண்ணு மட்டும்’ என்று அனுமதிக்கும் பேஸ்ட்ரி வரை… சர்க்கரை நம் குழந்தைகள் சாப்பிடும் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் மறைந்து புகுந்துவிடுகிறது.

மாலை நேரச் சிற்றுண்டிகள்தாம் பெரும்பாலும் குற்றவாளிகள். அவை அதிக சர்க்கரையும், அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட பொருள்களும் நிரம்பியவை.

சர்க்கரைக் குழந்தைகளுக்கு உடனடி ஆற்றலைத் தருகிறது. ஆனால், அதைத் தொடர்ந்து வருவது சோர்வு. பிறகு மீண்டும் தீராத பசி. இப்படி ஒரு சுழற்சி மீண்டும் மீண்டும் தொடர்கிறது. இன்று மருத்துவர்கள் குழந்தைகளின் எட்டு வயதிலேயே நீரிழிவுக் குறைபாட்டைப் பார்க்கிறார்கள். பயமுறுத்தும் விஷயம் என்னவெனில், இது எப்போதும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. சில நேரங்களில் இது சாதாரண சோர்வு, தாகம் அல்லது மனநிலை மாற்றங்கள் போலவே தோன்றும். இவற்றை நாம் எளிதாகப் புறக்கணித்துவிடுகிறோம்.

குழந்தைகளுக்கு வரும் நீரிழிவுக் குறைபாடு இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

டைப் 1 நீரிழிவு 

இது மிகவும் பொதுவான வகை. குழந்தைகளில் கிட்டத்தட்ட 90 சதவிகித நோயாளிகளுக்கு இந்த வகைதான் ஏற்படுகிறது. இது ஒரு தன்னெதிர்ப்பு நிலை. இதில் உடல் இன்சுலினை மிகக் குறைவாகவோ அல்லது சுரக்காமலோ இருக்கும். அறிகுறிகள் திடீரென்று தோன்றும். அதிகப்படியான தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், களைப்பு அல்லது எதிர்பாராத எடை இழப்புப் போன்றவை முக்கிய அறிகுறிகள்.

டைப் 1 நீரிழிவு உள்ள குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் தினசரி இன்சுலின் தேவை. ஆனால், சரியான பராமரிப்பும் ஆதரவும் இருந்தால், அவர்கள் ஆரோக்கியமான, நிறைவான வாழ்க்கையை வாழ முடியும்.

டைப் 2 நீரிழிவு 

இந்த வகை இப்போது குழந்தைகளிடையே வேகமாக அதிகரித்துவருகிறது. இது பெரும்பாலும் உடல் பருமன், துரித உணவு, உடற்பயிற்சி இன்மை ஆகியவற்றுடன் தொடர்புடையது. உடல் இன்னும் இன்சுலினை உற்பத்தி செய்கிறது, ஆனால், அதைத் திறம்படப் பயன்படுத்துவதில்லை. அறிகுறிகள் மெல்ல மெல்லத் தோன்றுவதால், இதைக் கண்டறிவது எளிதல்ல.

தீர்வு என்ன

இதற்கான தீர்வு மிகவும் எளிமையானது. குறைவான சர்க்கரை, அதிக தண்ணீர், சமச்சீரான வீட்டு உணவு, சிறிது நேரம் வெளி விளையாட்டு… இவை நீரிழிவிலிருந்து நீண்ட தூரம் செல்ல உதவும். எளிய ரத்தப் பரிசோதனை மூலம் நீரிழிவை ஆரம்பத்திலேயே கண்டறியலாம். பீதியடையத் தேவையில்லை.

குழந்தைப் பருவத்தைப் புன்னகைகளால் இனிமையாக்குவோம், சர்க்கரை அளவால் அல்ல.

ஏனெனில், வராமல் தடுப்பதுதான் மிக எளிதான பாதுகாப்பு!

Dr. ஆன் பிரவினா
MBBS, DCH, MRCPCH
குழந்தைகள் நல மருத்துவர்
காவேரி மருத்துவமனை, திருநெல்வேலி

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011