‘ஒரு குழந்தை பிறப்பது என்பது ஒரு தாய் பிறப்பதும்கூட’ – இந்த உண்மையை மனத்தில் கொண்டு, கர்ப்பத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் விழிப்புடன் கடந்தால்தான் அம்மாவும் குழந்தையும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே கர்ப்பத்துக்கான தயாரிப்பு தொடங்க வேண்டும். ஏனென்றால், கர்ப்ப கால சிக்கல்களில் சுமார் 50 சதவிகிதம் முன்பே அறியப்படாத உடல் நிலைகளால் ஏற்படுகின்றன. இந்தக் காலகட்டத்தில் ரத்த சோகை, தைராய்டு, நீரிழிவு போன்றவற்றை சோதனை மூலம் கண்டறியவும். ருபெல்லா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதா என சரிபார்க்கவும். புகைப்பிடித்தல், மது அருந்துதல்… இவற்றை முற்றிலும் நிறுத்தவும். மிக முக்கியமான ஒன்று… கர்ப்பத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே ஃபோலிக் அமிலம் (400-800 மைக்ரோகிராம்) தினமும் எடுத்துக்கொள்வது அவசியம். இது முதுகெலும்புக் குறைபாடுகளை 70 சதவிகிதம் வரை தடுக்கும்.
முதல் மூன்று மாதங்களில் (11-13 வாரங்களில்) Combined Screening மிக அவசியம். NT/NB scan மற்றும் ரத்தப் பரிசோதனை மூலம் டவுன் சிண்ட்ரோம் போன்ற குரோமோசோம் குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறியலாம். சில நேரங்களில் NIPT சோதனையும் பரிந்துரைக்கப்படலாம். இரண்டாம் மூன்று மாதங்களில் Anomaly Scan மற்றும் Fetal Echo மூலம் கருவின் வளர்ச்சியை உறுதிப்படுத்தவும். 21 முதல் 28 வாரங்களில் கர்ப்ப கால நீரிழிவு (Gestational Diabetes) பரிசோதனை… இது 10-20 சதவிகித கர்ப்பங்களை பாதிக்கிறது. மூன்றாம் மூன்று மாதங்களில் கருவின் வளர்ச்சியும் ரத்த அழுத்தமும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். மருத்துவரை 28 வாரங்கள் வரை மாதம் ஒரு முறையும், 28 முதல் 36 வாரங்கள் வரை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையும், 36 வாரங்களுக்குப் பிறகு வாரம் ஒரு முறையும் சந்திக்கவும்.
கர்ப்பமாக இருக்கும்போது இரட்டிப்பு அளவில் சாப்பிட வேண்டும் என்பது தவறான நம்பிக்கை. இரட்டிப்பு ஊட்டச்சத்து தேவை… இரட்டிப்பு சாப்பாடு அல்ல. இந்தியாவில் சுமார் 40 சதவிகித கர்ப்பிணிகளுக்கு ரத்த சோகை இருக்கிறது. இது குறைமாத பிரசவம் மற்றும் குறைந்த எடை குழந்தை பிறப்பதற்கு வழிவகுக்கும். ஆகவே, இரும்புச் சத்து மிக அவசியம். கால்சியம் எலும்பு வளர்ச்சிக்கும், புரதம் மற்றும் DHA – மூளை வளர்ச்சிக்கும் இன்றியமையாதவை. கீரைகள், பருப்பு வகைகள், பழங்கள், பால் பொருட்கள், கொட்டைகள், தானியங்கள்… இவை தினசரி உணவில் இடம்பெற வேண்டும்.
உலக அளவில் 15 சதவிகித கர்ப்பங்கள் அதிக ஆபத்துள்ளவையாக வகைப்படுத்தப்படுகின்றன. 35 வயதுக்கு மேல் கர்ப்பம் தரிப்பது, இரட்டையர், நீரிழிவு, ரத்த அழுத்தம், தைராய்டு, சிறுநீரக நோய், முந்தைய கர்ப்ப கால சிக்கல்கள்… இவை ஆபத்துக் காரணிகள். காவேரி மருத்துவமனையில் சிறப்புக் கண்காணிப்பு, மேம்பட்ட கரு கண்காணிப்பு, 24 மணி நேரமும் அவசர மகப்பேறு சேவை, NICU வசதி எனப் பல்துறை அணி இதை கையாளுகிறது.
‘சுகப்பிரசவம் வெற்றி, சிசேரியன் தோல்வி’ என்ற தவறான நம்பிக்கை இன்னும் நம் சமூகத்தில் உள்ளது. உண்மை என்னவென்றால்… பாதுகாப்பான பிரசவமே சிறந்த பிரசவம். சுகப்பிரசவம் வேகமான குணமடைதல் தருகிறது; ஆனால், கரு சிரமத்தில் இருக்கும்போது, நஞ்சுக்கொடி முன்னே இருக்கும்போது, பிரசவம் முன்னேறாத நிலையில் – சிசேரியன் உயிர் காக்கும் மருத்துவ தேவை. பிரசவ முறை எப்போதும் மருத்துவ பாதுகாப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்; தனிப்பட்ட விருப்பம் அடிப்படையில் அல்ல.
பிரசவத்துக்குப் பிறகும் குணமடைதல் தொடர்கிறது. சுமார் 80 சதவிகித பெண்களுக்கு மனநிலை மாற்றங்கள் ஏற்படும்; 10-15 சதவிகிதம் பேருக்கு பிரசவ மன அழுத்தம் (Postpartum Depression) வரலாம். ரத்தப்போக்கு, ரத்த அழுத்தம் கண்காணிப்பு, தாய்ப்பால் வழிகாட்டுதல், மனநல கவனிப்பு – இவை அனைத்தும் அவசியம். பிரசவத்துக்கு 6 வாரங்களில் வழக்கமான பரிசோதனை கட்டாயம்.
யோனி ரத்தப்போக்கு, கடுமையான தலைவலி அல்லது பார்வை மாற்றம், திடீர் கை முகம் வீக்கம், குழந்தையின் அசைவு குறைதல், கடுமையான வயிற்று வலி, நீர் கசிவு… இவற்றை ஒருபோதும் அலட்சியப்படுத்தாதீர்கள். ஏதாவது அசாதாரணமாக உணர்ந்தால்… காத்திருக்காதீர்கள்… உடனே மருத்துவரை அணுகுங்கள்!
இந்தியாவில் 40 சதவிகித கர்ப்பிணிகளுக்கு ரத்த சோகை இருக்கிறது. உலக அளவில் 15 சதவிகித கர்ப்பங்கள் அதிக ஆபத்துள்ளவை. ஃபோலிக் அமிலம் எடுத்துக் கொள்வதை கர்ப்பத்துக்கு 3 மாதம் முன்பே தொடங்குங்கள்… முதுகெலும்புக் குறைபாட்டை 70 சதவிகிதம் வரை தடுக்கலாம்!
1. மகப்பேறு பரிசோதனை நேரங்களை ஒருபோதும் தவிர்க்காதீர்கள். 2. உங்கள் உடலை கவனியுங்கள்… குழந்தையின் அசைவு குறைந்தாலோ, தீவிர அறிகுறிகள் தெரிந்தாலோ உடனே செயல்படுங்கள். 3. உடல் ஆரோக்கியத்தோடு மனநலத்தையும் சேர்ந்தே கவனியுங்கள்… கர்ப்ப காலம் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கட்டும்!
Dr. R. ஹேமலதா MBBS, DGO, DNB (Obstetrics and Gynaecology) மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவர் மா காவேரி, திருச்சி
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011