‘உனக்கு ஒண்ணும் இல்லை, சோம்பேறித்தனம்தான்!’ என்று சொல்லாதீர்கள்!

‘உனக்கு ஒண்ணும் இல்லை, சோம்பேறித்தனம்தான்!’ என்று சொல்லாதீர்கள்!
June 19 13:33 2026 Print This Article

உடல் முழுக்க வலி, தீராத சோர்வு, தூங்கியும் களைப்பு நீங்காத நிலை. ஆனால், ரத்தப் பரிசோதனையில் எல்லாம் சாதாரணம். ‘உனக்கு ஒண்ணும் இல்லைடா, சோம்பேறித்தனம்தான்என்று குடும்பத்தாலேயே புறக்கணிக்கப்படும் ஃபைப்ரோமியால்ஜியா மற்றும் ME/CFS எனும் இரு மறைந்த நோய்கள் குறித்த விழிப்புணர்வுக் கட்டுரை இது.

‘தினமும் காலையில எழுந்தா உடம்பு ரொம்ப வலிக்குது. ராத்திரி முழுக்க தூங்கினாலும் களைப்பு போகாது. ஏதோ மூளையில மூடுபனி இருக்கற மாதிரி. எல்லா டெஸ்ட்டும் நார்மலா வருது. வீட்டுல ‘சோம்பேறி’, ‘நடிக்கிறா’னு ஏசுறாங்க…’

மருத்துவமனைக்கு வரும் பல பெண் நோயாளிகளின் வழக்கமான புலம்பல் இது.

மே 12 அன்று உலகம் முழுவதும் ME/CFS மற்றும் ஃபைப்ரோமியால்ஜியா விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இவை கண்ணுக்குத் தெரியாத மறைந்த நோய்கள்.

உண்மையான நோய்கள்தான்மனப்பிரமை அல்ல

ஃபைப்ரோமியால்ஜியா மற்றும் ME/CFS (Myalgic Encephalomyelitis / Chronic Fatigue Syndrome) இரண்டும் தனித்தனி நோய்கள். ஆனால், சில பொதுவான அறிகுறிகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றை மருத்துவ வரலாறு மற்றும் சில சோதனைகள் மூலமே கண்டறிய முடியும். இதற்கென தனி ஆய்வக பரிசோதனை எதுவும் கிடையாது. அதனால்தான் பல நோயாளிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் அல்லது மனச்சோர்வு போன்ற மன நோய் என்று தவறாகக் கருதப்படுகிறது.

அறிகுறிகளை அடையாளம் காணுங்கள் 

ஃபைப்ரோமியால்ஜியாவின் அறிகுறிகள்: உடல் முழுவதும் பரந்து விரிந்த கடுமையான தசை மற்றும் மூட்டு வலி, சாதாரண தொடுதலுக்கும் அதிகரித்த வலி உணர்வு, தூங்கி எழுந்தாலும் மீளாத களைப்பு, சோர்வு, கவலை, மூளையில் குழப்பம், மனச்சோர்வு; குறைந்தது மூன்று மாதங்கள் நீடிக்கும்.

ME/CFS அறிகுறிகள்: மிகத் தீவிரமான சோர்வு, சிறிய உடலுழைப்புக்குப் பிறகு கூட ஆற்றல் முற்றிலும் இழந்துபோதல்; பெரும்பாலும் வைரஸ் தொற்றுக்குப் பிறகு தொடங்கும், குறைந்தது ஆறு மாதங்கள் நீடிக்கும். மூட்டு வாதத்தில் (Arthritis) மூட்டு வீங்கும், சிவக்கும், சூடாகும், தொட்டாலே வலிக்கும். ஆனால், ஃபைப்ரோமியால்ஜியா மற்றும் ME/CFS நோயில் மூட்டு வீக்கம் இருக்காது. சாதாரண வேலை செய்தாலே கடும் சோர்வு ஏற்படும்.

வழக்கமான களைப்பு, திடீரென அதிகரித்த வேலைச்சுமைக்குப் பிறகு ஏற்படும்; அது இயல்பானது. ஆனால், இந்த நோய்களின் சோர்வு வேறு.

பெண்களுக்கு ஏன் அதிகம்

ஆண்களைவிட பெண்களுக்கு இந்த நோய்கள் அதிகம் என்று ஆய்வுகள் சொல்கின்றன. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் பாதிப்பு, வலி செயலாக்கத்தில் உள்ள வேறுபாடு, நோய்த்தொற்று, மனஅழுத்தம் போன்றவற்றுக்கு ஏற்படும் அசாதாரண நோய் எதிர்ப்பு சீர்குலைவு ஆகியவை முக்கிய காரணங்கள்.

நோய் கண்டறிதலே ஒரு சவால் 

இதற்கு ஒற்றை ரத்தப் பரிசோதனை இல்லை. பொது உடல் வலி, தூக்கக் கலக்கம், சோர்வு, மூளை மந்தம் என வரும் நோயாளிகளில் வலுவான சந்தேகம் வேண்டும். விரிவான மருத்துவ வரலாறு, உடற்பரிசோதனை, ACR 2010 அளவுகோல்களைப் பயன்படுத்தி கண்டறிய வேண்டும். ரத்தப் பரிசோதனைகள் மூலம் மாற்று நோய்களை நீக்க வேண்டும், ரூமடாய்டு ஆர்த்ரைடிஸ், SLE, வைட்டமின் D குறைபாடு, மயோசைடிஸ், தைராய்டு பிரச்னைகள், ரத்தசோகை போன்றவை அவை.

கோவிட்டுக்குப் பிறகு அதிகரிப்பு 

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு, ஃபைப்ரோமியால்ஜியா மற்றும் ME/CFS போன்ற நோய்கள் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளன. கடுமையான சோர்வு, மனச்சோர்வு, ஆற்றல் இழப்பு போன்றவை முக்கிய அறிகுறிகள். நோய் எதிர்ப்பு அமைப்பின் சீர்குலைவினால் அசாதாரண சைட்டோகைன்கள் உருவாகி, ஃபைப்ரோமியால்ஜியா போன்ற நோயை உருவாக்குவதே இதற்குக் காரணம்.

காவேரியின் ஒருங்கிணைந்த சிகிச்சை 

காவேரி மருத்துவமனையில் நாங்கள் பல மருத்துவத் துறைகள் இணைந்து சிகிச்சையளிக்கிறோம். மூட்டு அழற்சியியல் நிபுணர், மனநல மருத்துவர், தொழில்முறை சிகிச்சையாளர், பிசியோதெரபிஸ்ட், ஆலோசகர்கள் அனைவரும் இணைந்து செயல்படுகிறோம். நோயாளியின் முக்கிய அறிகுறிகளைப் பொறுத்து மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. கூடவே ஆலோசனை, படிப்படியான உடற்பயிற்சி, தூக்கச் சீரமைப்பு ஆகியவை சேர்ந்தே முழுமையான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வாழ்க்கைமுறை, சுய பராமரிப்பு 

ஆற்றலை நிர்வகிக்க வேண்டும். ஒரே நேரத்தில் அதிக வேலை செய்வதற்குப் பதில், வேலையைப் பிரித்துச் செய்ய வேண்டும். நல்ல தூக்கம் அவசியம். மன அழுத்தத்தைக் குறைக்க தியானம், யோகா உதவும். வெதுவெதுப்பான நீர்க் குளியல் தசை வலியைக் குறைக்கும். அழற்சி எதிர்ப்பு உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள், ஒமேகா 3 நிறைந்த உணவுகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

 

தெரிந்துகொள்வோம்

• ஃபைப்ரோமியால்ஜியா மற்றும் ME/CFS உண்மையான நோய்கள்; மனப்பிரமை அல்ல.
• இவற்றுக்கு ஒரு குறிப்பிட்ட ரத்தப் பரிசோதனை இல்லை; மருத்துவ மதிப்பீட்டின் அடிப்படையில் மட்டுமே கண்டறியப்படுகிறது.
• மூட்டு வீக்கம் இல்லாமை இவற்றை மூட்டு வாதத்தில் இருந்து வேறுபடுத்துகிறது.
• சிறு வேலைக்கும்கூட கடும் சோர்வு ஏற்படுவது இந்த நோய்களின் தனித்துவ அறிகுறி.
• கோவிட்டுக்குப் பிறகு இந்த நோய்கள் அதிகரித்துள்ளன.
• குடும்ப ஆதரவே நோயாளி குணமடைதலுக்கு மிக முக்கியம்.

 

Dr. பி. செந்தில்குமார் MBBS, MD, DM (Rheumatology)
மூட்டு அழற்சியியல் நிபுணர்
காவேரி மருத்துவமனை, திருச்சி

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011