தலைவலி வாழ்க்கையைக் கைப்பற்றும்போது…

தலைவலி வாழ்க்கையைக் கைப்பற்றும்போது…
June 20 06:13 2026 Print This Article

ஸ்ட்ரெஸ் அதிகமா இருக்கும்போல, ரெஸ்ட் எடுங்க’ – எப்போ பார்த்தாலும் தலைவலி என்று பல மருத்துவர்களிடம் சென்றும் ஒரே பதில்தான் கிடைக்கிறது. வலி நிவாரண மாத்திரைகளைச் சாப்பிடுகிறோம், தற்காலிகமாகக் குறைகிறது, மீண்டும் வருகிறது. இந்தச் சுழற்சி ஆண்டுக்கணக்கில் தொடர்கிறது. ‘ஸ்ட்ரெஸ்’, ‘சைனஸ் பிரச்னை’, ‘தூக்கமின்மைஎன்று தவறாக முத்திரை குத்தப்பட்டு, சரியான சிகிச்சையே கிடைக்காமல் அமைதியாகத் துன்புறுத்தப்படும் லட்சக்கணக்கான நோயாளிகளின் கதை இது.

ஜூன் 29 – நாள்பட்ட ஒற்றைத் தலைவலி விழிப்புணர்வு தினம் (Chronic Migraine Awareness Day). நாள்பட்ட ஒற்றைத் தலைவலி (Chronic Migraine) என்பது சாதாரண தலைவலி அல்லஇது ஒரு குறிப்பிட்ட நரம்பியல் நோய்.

எப்போதுநாள்பட்டதுஆகிறது

எல்லா ஒற்றைத் தலைவலியும் நாள்பட்டது அல்ல. இதற்கு மருத்துவ உலகில் ஒரு குறிப்பிட்ட அளவுகோல் உள்ளது -‘15/8/3 விதி’. மாதத்தில் குறைந்தது 15 நாட்களுக்குத் தலைவலி வர வேண்டும், இது தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு நீடிக்க வேண்டும், அந்த 15 நாட்களில் குறைந்தது 8 நாட்கள் ஒற்றைத் தலைவலிக்கான அறிகுறிகளுடன் இருக்க வேண்டும். இந்த அளவுகோலைப் பூர்த்தி செய்தால் அது நாள்பட்ட ஒற்றைத் தலைவலி என்று உறுதிப்படுத்தப்படும்.

நவீன வாழ்க்கைமுறை அழுத்தங்கள், அதிக ஸ்கிரீன் நேரம், ஹார்மோன் மாற்றங்கள் (குறிப்பாக மாதவிடாய் காலம் மற்றும் மெனோபாஸ் நிலையில்) காரணமாக சமீபகாலமாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஏன் தவறாகக் கண்டறியப்படுகிறது

நாள்பட்ட ஒற்றைத் தலைவலியின் மிகப்பெரிய சோகம் ஆண்டுக்கணக்கில் சரியான நோயறிதல் கிடைக்காமல் போவதுதான். நோயாளிகள் நிபுணரை அணுகாமல் ‘சாதாரண தலைவலி’ என்று ஒதுக்கிவிடுகிறார்கள். சில நேரங்களில் இது ‘ஸ்ட்ரெஸ்’ அல்லது ‘சைனஸ் பிரச்னை’ என்று தவறாக மதிப்பிடப்படுகிறது. சரியான நேரத்தில் கண்டறியப்படாத எபிசோடிக் ஒற்றைத் தலைவலி, படிப்படியாக நாள்பட்ட நிலைக்கு மாறிவிடுகிறது.

வலி நிவாரண மாத்திரைகளே எதிரியாகும்போது

நாள்பட்ட ஒற்றைத் தலைவலியின் மிகவும் முரண்பாடான உண்மை இதுதான். சாப்பிடும் வலி நிவாரணியே தலைவலியை அதிகமாக்கலாம்! இதை ‘அதீத மருந்து பயன்பாட்டுத் தலைவலி’ (Medication Overuse Headache -MOH) என்கிறார்கள்.

வேலையில் ஈடுபட வேண்டும், குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்கிற அவசரத்தில் வலி நிவாரண மாத்திரையைப் போடுகிறோம். தற்காலிகமாகக் குறைகிறது, மீண்டும் வருகிறது, மீண்டும் மாத்திரை – இது ஒரு ‘தீய சுழற்சி‘. காலப்போக்கில் மூளை இந்த மருந்துகளுக்குப் பழகிவிடுகிறது, அடிக்கடி தலைவலி வரத் தொடங்குகிறது. இந்தச் சுழற்சியை உடைக்க நரம்பியல் நிபுணரின் உதவி அவசியம். மருந்து வரலாற்றை முழுமையாக ஆய்வு செய்து, அதிகமாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை நிறுத்தி, குறைந்தபட்ச சிறந்த மருந்தில் நோயாளியை நிலைப்படுத்துவதே இலக்கு. 7 முதல் 8 மணி நேரத் தூக்கம், பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த உணவு, தொடர்ச்சியான உடற்பயிற்சி… இவை சிகிச்சையின் அத்தியாவசியத் தூண்கள்.

தூண்டுதல் காரணிகள் 

ஒவ்வொரு நோயாளிக்கும் தூண்டுதல் காரணிகள் வேறுபடும். வெயில், திடீர் வானிலை மாற்றம், கடுமையான வாசனை போன்ற சுற்றுச்சூழல் காரணிகள் உடனடியாகத் தாக்கலாம். அதிக ஸ்கிரீன் நேரம், நேரத்துக்குச் சாப்பிடாமல் இருப்பது, போதுமான தூக்கமின்மை ஆகியவை வாழ்க்கைமுறைத் தூண்டுதல்கள். காஃபி சிலருக்கு தலைவலியைக் குறைக்கும்… சிலருக்கு அதுவே தூண்டுதலாகும்! சீஸ், கோகோ பொருட்கள், ஐஸ்கிரீம் போன்றவை உணவுத் தூண்டுதல்களாக இருக்கலாம்.

எப்போது நரம்பியல் நிபுணரை அணுக வேண்டும்

தலைவலி வேலையின் ஆற்றலையும், வாழ்க்கையின் தரத்தையும் பாதிக்கும்போது, சுய சிகிச்சையை நிறுத்திவிட்டு நரம்பியல் நிபுணரை அணுக வேண்டும். குறிப்பாக, திடீரென்று கடுமையான வலி, வாந்தி, மயக்கம், வலிப்பு, பார்வை மங்குதல் – இவை ‘ரெட் பிளாக்’ அறிகுறிகள். கட்டி அல்லது பக்கவாதம் போன்ற ஆபத்தான நிலைகளை அறிந்து அவற்றை நிராகரிக்கவும் உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம்.

 

தெரிந்துகொள்வோம்

• நாள்பட்ட ஒற்றைத் தலைவலிக்கான அளவுகோல் – 15/8/3 விதி: மாதம் 15 நாட்கள் தலைவலி, 3 மாதம் தொடர்ச்சி, 8 நாட்கள் ஒற்றைத் தலைவலி அறிகுறிகள்.
• வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாகப் பயன்படுத்துவதே தலைவலியை அதிகமாக்கும். இதை MOH (Medication Overuse Headache) என்கிறார்கள்.
• போடாக்ஸ் சிகிச்சை நாள்பட்ட ஒற்றைத் தலைவலிக்கு மட்டுமே பயனுள்ளது. மருத்துவர் மேற்பார்வையில் 4 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை தேவைப்படலாம்.
• காஃபி சிலருக்கு தலைவலியைக் குறைக்கும். சிலருக்கு தூண்டுதலாகும். இதை ‘காஃபின் முரண்பாடு’ என்பார்கள்.

 

இந்தியாவில் 1 முதல் 3% பெண்கள் நாள்பட்ட ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர். மாதத்தில் 15 நாட்களுக்கு மேல் தலைவலி வந்தால்அது சாதாரண தலைவலி அல்ல, நரம்பியல் நோய்!

Dr. சுபா சுப்பிரமணியன் MBBS, MD (Gen. Med), DM (Neurology)
நரம்பியல் சிறப்பு மருத்துவர்
காவேரி மருத்துவமனைசென்னை

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011