இளைஞர்களே இப்போது அதிக அளவில் சிறுநீரகப் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்!

இளைஞர்களே இப்போது அதிக அளவில்  சிறுநீரகப் பாதிப்புக்கு  ஆளாகிறார்கள்!
January 09 06:56 2025 Print This Article

சிறுநீரகப் பிரச்னைகளின் ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள் என்ன

  • சிறுநீரில் அதிக நுரை
  • சிறுநீரில் ரத்தம் கலந்திருத்தல்/கோலா நிறம்/சிவப்பு நிற சிறுநீர் – இது தொண்டை வலி/மேல் சுவாசப் பாதை நோய்த்தொற்றுடன் காணப்படலாம்
  • கால்களில் வீக்கம் – நீண்ட பயணத்துக்குப் பிறகு முதலில் தோன்றி தொடர்ந்து இருக்கலாம்
  • முகத்தில் வீக்கம் – காலையில் அதிகமாகத் தெரியும்
  • இளம் வயதில் உயர் ரத்த அழுத்தம் – 45 வயதுக்குள் உள்ளவர்களில் உயர் ரத்த அழுத்தம்
  • கட்டுப்படுத்த முடியாத உயர் ரத்த அழுத்தம் – 2-3க்கும் மேற்பட்ட மருந்துகள் தேவைப்படும் உயர் ரத்த அழுத்தம்
  • இரவில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை சிறுநீர் கழித்தல்
  • எலும்பு வலி
  • பசியின்மை/குமட்டல்/வாந்தி – சிறுநீரக நோயின் முற்றிய நிலையில் இவை மட்டுமே அறிகுறிகளாக இருக்கலாம்
  • உடற்பயிற்சியின் போது மூச்சுத்திணறல்
  • தெளிவான காரணமின்றி ரத்த சோகை/குறைந்த ஹீமோகுளோபின் அளவு
  • சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்/இருமுறை சிறுநீர் கழித்தல்/மெதுவான சிறுநீர் ஓட்டம்/சிறுநீர் கட்டுப்பாடின்மை

நீரிழிவு/உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய்க்கு இடையேயான தொடர்பை விளக்க முடியுமா?

நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படுகிறது. இந்தியா உலகின் நீரிழிவு தலைநகரமாகக் கருதப்படுகிறது. இதனால் சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு குளோமருலஸ்/சிறுநீரக வடிகட்டிகளைச் சேதப்படுத்தி, சிறுநீரில் புரதம் கசிவதற்குக் காரணமாகிறது. இது ஆரம்பகால அறிகுறியாக இருக்கலாம். பின்னர் கிரியாட்டினின் அளவு உயர்ந்து நோயாளி CKD மற்றும் ESRD நிலைக்குச் செல்கிறார்.

நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்பியல் சிறுநீர்ப்பை பிரச்னைகள் ஏற்பட்டு, சிறுநீர் தேக்கம் மற்றும் சிறுநீர்ப்பை/சிறுநீரகத் தொற்று (பைலோநெஃப்ரைடிஸ்) ஏற்படலாம்.

நீரிழிவு விழித்திரை நோய் உள்ளவர்களுக்கு நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இவர்கள் அனைவரும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

உயர் சர்க்கரை அளவு தமனிகளைக் கடினமாக்கும் ஆர்டீரியோஸ்க்ளிரோசிஸ் ஏற்பட்டு உயர் ரத்த அழுத்தத்துக்குக் காரணமாகலாம்.

நீரிழிவு நோயாளிகள் அனைவரும் சிறுநீரகப் பாதிப்பை கண்டறிய வருடாந்திர உடல் பரிசோதனையுடன் சிறுநீர் அல்புமின் கிரியாட்டினின் விகிதப் பரிசோதனை செய்ய வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் “முதலில் கோழியா அல்லது முட்டையா?” என்பது போன்ற சிக்கலை போன்றது.

உயர் ரத்த அழுத்தம் சிறுநீரக நோயை ஏற்படுத்தலாம், சிறுநீரக நோய் உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தலாம். கட்டுப்படுத்த முடியாத ரத்த அழுத்தம் சிறுநீரக வடிகட்டிகள் மற்றும் ரத்த நாளங்களைச் சேதப்படுத்துகிறது. சிறுநீரக நோயாளிகளுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

சமீப ஆண்டுகளில் இளம் வயது நோயாளிகளைக் காண்கிறீர்களா?

ஆம். இளம் வயது சிறுநீரக நோயாளிகளைக் காண்கிறோம். மேலும் நோயாளிகள் அதிக அளவில் பரிசோதனை செய்து கொள்வதாலும், ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படுவதாலும் புதிய நோயாளிகள் சிறுநீரக நோயின் ஆரம்ப நிலைகளில் கண்டறியப்படுகிறார்கள்.

பின்வரும் காரணங்களால் இளம் வயதினரில் சிறுநீரக நோய் அதிகரித்துள்ளது.

  • உடல் பருமன் அதிகரிப்பு – இது உடல் பருமன் தொடர்பான சிறுநீரக நோய்களான focal segmental glomerulosclerosis, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.
  • புகைப்பிடித்தல் அதிகரிப்பு – இது உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகத்தில் இஸ்கெமிக் மாற்றங்கள், nodular glomerulosclerosis ஆகியவற்றை ஏற்படுத்தி CKD-க்கு காரணமாகிறது.
  • மதுபானம் அதிகரிப்பு – இது சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை குறைக்கிறது. தசை சிதைவு/ ராப்டோமயோலைசிஸ் மூலம் சிறுநீரகத்தை பாதிக்கிறது. மதுபானம் நாள்பட்ட கல்லீரல் நோயை ஏற்படுத்தி சிறுநீரகத்தையும் பாதிக்கலாம்.
  • போதைப்பொருள் பயன்பாடு – கொகைன்/ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரிக்கையில் CKD மற்றும் collapsing FSGS பிரச்னைகளை ஏற்படுத்தி சிறுநீரகத்துக்கு ஆபத்து விளைவிக்கும்.
  • SAIDs (Non-Steroidal Anti-Inflammatory Drugs) மற்றும் புரோட்டான் பம்ப் தடுப்பான்கள் போன்றT.C (Over the Counter) மருந்துகளின் அதிகப் பயன்பாடு உடனடி மற்றும் நாள்பட்ட சிறுநீரகப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
  • உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் நல மையங்களில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் அதிகப் புரத நிரப்பிகள் சிறுநீரக வடிகட்டிகளைப் பாதித்து சிறுநீரக நோயை ஏற்படுத்துகிறது. இளைஞர்கள் தற்போது பயன்படுத்தும் தோல் வெளுக்கும் கிரீம்களில் காட்மியம், பாதரசம், ஆர்சனிக் போன்ற கன உலோகங்கள் அதிக அளவில் உள்ளன. இவை சமீபத்தில் சிறுநீரக நோயுடன் (Nell1 positive membranous nephropathy) தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளன.
தொடர்புடைய வலைப்பதிவு: நீரிழிவும் சிறுநீரகமும்

சிறுநீரக நோயை தடுக்க என்னென்ன வாழ்க்கை முறை மாற்றங்களை பரிந்துரைக்கிறீர்கள்?

  • நீர்ச்சத்தைப் பராமரிக்கவும், போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். மதுபானம் மற்றும் இனிப்புப் பானங்களை தவிர்க்கவும்.
  • மிதமான புரத உணவு உட்கொள்ளவும். அதிகப் புரத உணவு சிறுநீரக வடிகட்டிகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
  • அதிக சர்க்கரை உட்கொள்வதைத் தவிர்க்கவும். அதிக சர்க்கரை சிறுநீரகத்தைப் பாதிக்கிறது.
  • அதிக உப்பு உணவு உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உணவில் உப்பைக் குறைக்கவும்.
  • அடிக்கடிT.C (Over the Counter) வலி நிவாரணிகளை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • புரோட்டான் பம்ப் தடுப்பான்களை அடிக்கடி பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • தினசரி உடற்பயிற்சி செய்து உடல் நிறைக் குறியீட்டைப் (BMI)பராமரிக்கவும். இது இயல்பான ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.
  • புகைப்பிடித்தல் மற்றும் மதுபானத்தைத் தவிர்க்கவும்.
  • சிறுநீரக நட்பு உணவுமுறையைப் பின்பற்றவும்.
  • ஒழுங்குபடுத்தப்படாத பாரம்பரிய/நாட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

Dr. சாய் சமீரா
சிறுநீரக மருத்துவர் மற்றும் சிறுநீரக மாற்று நிபுணர்
காவேரி மருத்துவமனை, ஓசூர்

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801