சரியான பயிற்சி மற்றும் வார்ம்-அப் மூலம் பெரும்பாலான விளையாட்டுக் காயங்களைத் தடுக்க முடியும். நவீன ஆர்த்ரோஸ்கோபி நுட்பங்கள் விளையாட்டு வீரர்கள் வேகமாக களத்துக்குத் திரும்ப உதவுகின்றன.
ஆகஸ்ட் 29 அன்று நமது தேசிய ஹாக்கி வீரர் மேஜர் த்யான் சந்த்தின் பிறந்த நாளை நினைவுகூறும் வகையில் தேசிய விளையாட்டு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
எந்தவொரு விளையாட்டு வீரரும் உச்சநிலையில் விளையாட வேண்டுமென்றால், உடல் தகுதியைப் பராமரிப்பதும் விளையாட்டுக் காயங்களைத் தவிர்ப்பதும் அவசியம். மிகவும் பொதுவான விளையாட்டுக் காயங்கள் முழங்கால் மூட்டு அல்லது கணுக்கால் மூட்டில் ஏற்படுபவை. குறிப்பாக கால்பந்து அல்லது ஹாக்கி போன்ற அதிக ஓட்ட நடவடிக்கை தேவைப்படும் விளையாட்டுகளில்.
அடுத்து பொதுவான காயங்கள் தோள்பட்டை மூட்டு அல்லது முழங்கையில் ஏற்படலாம். இந்தக் காயங்கள் மூட்டின் துணை அமைப்புகளான தசைநார்கள், தசைகள் அல்லது அதிர்ச்சியின் வலு மற்றும் திசையைப் பொறுத்து எலும்புகளில் முறிவுகளையும் ஏற்படுத்தலாம்.
சரியான பயிற்சி மற்றும் நிகழ்வுக்கு முன் வார்ம்-அப் செய்வதன் மூலம் பெரும்பாலான காயங்களைத் தவிர்க்க முடியும். உதாரணமாக, முழங்கால் மூட்டுக்க் காயங்கள் மிகவும் பொதுவான காயங்களில் ஒன்று. இதில் மூட்டின் முக்கிய ஆதார அமைப்பான தசைநார்கள் பங்கேற்கின்றன. இவை மூட்டின் அசாதாரண அசைவைத் தடுக்கின்றன.
இந்த அமைப்புகள் மேலும் தசைகளால் பாதுகாக்கப்படுகின்றன. தசைகள் நன்றாக வளர்ச்சியடைந்து பயிற்சி பெற்றிருந்தால், கள விளையாட்டுகளில் டேக்லிங் போன்ற திடீர் அசாதாரண வலுவின்போது தசைநாருக்கு ஏற்படும் காயத்தை கணிசமான அளவுக்குத் தடுக்க முடியும்.
இதே காரணத்துக்காகவே எந்தவொரு நிகழ்வுக்கு முன்பும் வார்ம்-அப் செய்வது மிக முக்கியம். ஏனென்றால், இந்த தசைகள் சூடேறி செயல்பாட்டுக்குத் தயாராக இருக்கும்போதுதான் விரைவாகச் செயல்பட முடியும்.
ஒருமுறை தசைநார் காயம் அடைந்துவிட்டால், அதன் செயல்பாடு இழக்கப்படுகிறது. தசைநாரின் ஆதரவு நடவடிக்கை இழக்கப்பட்டால், மூட்டு அசாதாரண வலுக்களுக்கு உள்ளாகி மூட்டின் சேதத்தை துரிதப்படுத்தலாம் அல்லது பிற தசைநார் காயங்களுக்கு முன்னோடியாகலா்ம். எனவே, தசைநார் சேதமடைந்தால், அதை பொருத்தமான பொருட்களைப் பயன்படுத்தி சரிசெய்ய வேண்டும் அல்லது மீண்டும் கட்டமைக்க வேண்டும்.
இந்தத் தசைநார்கள் அதிக இழுவிசை கொண்ட அமைப்புகள். சரியான நீளத்திலும் நிலையிலும் குணமடையாவிட்டால் பயனுள்ளதாக இருக்காது.
காவேரி மருத்துவமனையில் விளையாட்டுக் காயங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை உள்ளது. எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், அல்ட்ராசவுண்ட் அல்லது எம்ஆர்ஐ எடுத்து துல்லியமான நோய் கண்டறிதல் செய்யப்படுகிறது.
இந்த தசைநார் காயங்களை மேம்பட்ட ஆர்த்ரோஸ்கோபிக் உபகரணங்களைப் பயன்படுத்தி கீஹோல் அறுவைசிகிச்சைகள் மூலம் திறமையாக நிர்வகிக்க முடிகிறது. இதில் மிகச் சிறிய கீறல்கள் செய்து மூட்டுக்க்குள் பெரிதாக்கப்பட்ட விரிவான பார்வையைப் பெற முடிகிறது. இது விளையாட்டு வீரர்கள் ஆரம்பகாலத்திலேயே விளையாட்டு நடவடிக்கைகளுக்குத் திரும்பவும் பயிற்சியை மேற்கொள்ளவும் உதவுகிறது.
அறுவைசிகிச்சைக்குப் பிறகும் அர்ப்பணிப்புடன் கூடிய தொடர்ச்சியான பிசியோதெரபி பயிற்சியானது செயல்பாட்டை மீட்டெடுக்கவும் விளையாட்டுக்குத் திரும்பவும் மிக முக்கியம்.
இளம் விளையாட்டு வீரர்களுக்கு உடல் தகுதியைப் பராமரிப்பது, தசைகளைப் போதுமான அளவுக்கு வளர்த்தெடுப்பது, எந்தவொரு விளையாட்டு நடவடிக்கைக்கு முன்பும் வார்ம்-அப் செய்வது ஆகியவை வெற்றிகரமான நீண்ட விளையாட்டு வாழ்க்கைக்கு மிக முக்கியம்.
எப்போதாவது விளையாடுவது மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டு நடவடிக்கைகளுக்கும் உடல் தகுதி மற்றும் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிப்பது முக்கியம். நீண்ட இடைவெளி கொடுத்து விளையாட்டை மீண்டும் தொடங்க விரும்புபவர்கள், காயங்களைத் தவிர்க்க சுறுசுறுப்பான தீவிர விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கு முன்பு தசை வலுவையும் நெகிழ்வுத்தன்மையையும் மீண்டும் பெற சில காலம் செலவிட வேண்டும்.
எந்தவொரு காயத்துக்கும் பிறகு, சரியான சிகிச்சைக்குப் பிறகும், விளையாட்டுக்குத் திரும்புவதற்கு முன்பு பிசியோதெரபிஸ்ட் மேற்பார்வையில் ஒரு குறிப்பிட்ட காலம் மறுவாழ்வு தேவைப்படுகிறது. இந்த நேரம் காயத்தின் வகை, சிகிச்சை முறை மற்றும் விளையாட்டு நடவடிக்கையின் அளவைப் பொறுத்து மாறுபடும்.
எனவே, நாம் அனைவரும் நமது தசைகளை வளர்த்து, உடல் தகுதியை மேம்படுத்தி, எந்தவித காயமும் இல்லாமல் விளையாட்டை அனுபவிப்போம்!
உடனடி கவனிப்பு தேவை
24 மணி நேரத்துக்குள்
டாக்டர் வி சிங்காரவடிவேலு MBBS, D.Ortho, MS(Ortho), PhD எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் காவேரி மருத்துவமனை சென்னை – ஆழ்வார்பேட்டை
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011