நம் வாழ்வின் மறைக்கப்பட்ட வீரர்களான செவிலியர்களைப் போற்றும் நேரம் இது. காவேரி மருத்துவமனையின் அன்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த செவிலியர்களுக்கு இதயம் கனிந்த வணக்கமும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக!
நோயாளியின் நிலையை நொடிப் பொழுதும் தவறாது கண்காணிக்கும் விழிப்பான கண்கள்…
காயங்களுக்குக் கனிவுடன் மருந்திடும் மென்மையான கைகள்…
அச்சத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் கனிவான வார்த்தைகள்…
விடியற்காலையிலிருந்து இரவின் அமைதிவரை, நம் செவிலியர்கள் ஓய்வில்லாமல் சேவையாற்றி வருகின்றனர். ஆம்… இவர்கள் பலரது கண்களுக்குப் புலப்படாத உண்மையான சூப்பர் ஹீரோக்கள்!
150 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில், செவிலியர்களின் பங்கு முன் எப்போதையும்விட இப்போது மிக அவசியம். ‘பாண்டமிக்’ என்கிற சொல்லே அறியப்படாத காலத்திலிருந்தே, செவிலியர்கள் சுகாதாரத் துறையின் முதுகெலும்பாக இருந்துள்ளனர். புத்திசாலித்தனமான சிந்தனை, கருணை நிறைந்த இதயம் – இவை இரண்டும் கலந்தவரே ஒரு செவிலியர்.
உடலை மட்டுமல்ல… மனதையும் குணப்படுத்தி நம்பிக்கை ஒளி பாய்ச்சுபவர்கள் இவர்கள். வயது, பாலினம், நிறம், நிலை என எதையும் இவர்கள் பார்ப்பதில்லை. ஆனால், உதவி தேவைப்படும் தருணத்தில் இவர்களின் விழிகள் எப்போதும் திறந்தே இருக்கும். வெளியுலக சத்தங்களைக் கேட்காதவர்கள் போல இருந்தாலும், வார்டில் ஒலிக்கும் மானிட்டர் சத்தத்துக்கு இவர்களின் காதுகள் எப்போதும் கூர்மையாகவே இருக்கும். நோயாளிகளின் கவலைகளை அமைதியாகக் கேட்பார்கள். ஆனால், வலியை குறைக்கும் வார்த்தைகளை மிகத் தெளிவாகச் சொல்வார்கள். இவர்கள் சுகாதாரத் துறையின் இதயத் துடிப்பு!
பின்னர் வந்தது பாண்டமிக். மனிதகுலத்தையே அச்சுறுத்திய ஒரு காலகட்டம். அந்த நேரத்தில் அச்சம் எல்லா இடங்களிலும் நிலவியிருந்தது. ஆனால், செவிலியர்கள் மட்டும் அச்சமின்றி நின்றார்கள்.
PPE உடைகளின் பின்னால் மறைந்திருந்தாலும், அவர்கள் கண்களில் தெரிந்தது சோர்வைத் தாண்டிய தைரியமும் கருணையும்.
அந்த நாட்களில்தான் உலகம் உணர்ந்தது… செவிலியர்களே உயிர்களைக் காப்பாற்றுகிறார்கள்
அதிகாரமளித்தல் என்பது… கல்வி. தொழில்நுட்பம். அங்கீகாரம். மரியாதை. தலைமைத்துவம்.
இந்தியா வளர வளர, சுகாதாரத் தேவைகளும் அதிகரிக்கும். அப்போது ICU-விலோ, அவசர சிகிச்சை பிரிவிலோ, அறுவை சிகிச்சை அறையிலோ, சமூக சுகாதார முகாம்களிலோ, டெலிமெடிசின் தளங்களிலோ முன்னணியில் இருப்பவர்கள் மீண்டும் செவிலியர்களே.
அவர்கள் பராமரிப்பாளர்கள் மட்டும் அல்ல… கல்வியாளர்கள்; ஆலோசகர்கள்; புதுமையாளர்கள்; உயிர்காப்பவர்கள். அவர்களின் ஒவ்வொரு மென்மையான தொடுதலும், ஒவ்வொரு மருந்தளிப்பும், ஒவ்வோர் இதயத் துடிப்பையும் கண்காணிப்பதும், ஒவ்வோர் ஆறுதல் வார்த்தையும் ஓர் உயிரையே காப்பாற்றக் கூடும்.
எங்கள் அன்பு செவிலியர்களே,
உங்கள் தைரியத்துக்கு நன்றி.
உங்கள் கருணைக்கு நன்றி.
உங்கள் அர்ப்பணிப்புக்கு நன்றி.
நீங்கள் சுகாதாரத் துறையின் இதயம். இதயத் துடிப்பு. ஆன்மா!
காவேரி மருத்துவக் குழுமத்தின் செவிலியர்கள் வெறும் சுகாதார சேவையை வழங்கும் நிபுணர்கள் மட்டுமல்ல; அவர்கள் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றின் உயிரூட்டும் எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றனர். இயல்பிலேயே உயர்ந்த திறனும் அபாரமான திறமைகளும் கொண்ட இவர்களின் பயணம், தொடர்ச்சியான கற்றல், வளர்ச்சி மற்றும் புதுப்பித்தல் செயல்பாடுகளால் மேலும் வளம் பெறுகிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் உயர்ந்த தரமான சிகிச்சையை வழங்க வேண்டும் என்கிற காவேரி மருத்துவமனையின் தத்துவத்துடன் ஒத்திசைவாக, இச்செவிலியர்கள் தங்களது அறிவையும் திறன்களையும் இடையறாது மேம்படுத்திக் கொண்டே இருக்கின்றனர்.
இந்த நோக்கத்தை முன்னிறுத்தி, காவேரி செவிலியர் கல்லூரி தகுதியான செவிலியர்களுக்கு பட்டப்படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகள் மூலம் விரிவான பயிற்சிகளை வழங்குகிறது. இதை மேலும் உயர்த்தும் விதமாக, முதுநிலை பட்டதாரிகளுக்காக விரைவில் முனைவர் பட்டப்படிப்புகளையும் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் செவிலியர்கள் மருத்துவ அறிவியலின் முன்னேற்றத்துக்கு தங்களது பங்களிப்பை வலுப்படுத்துவதோடு, மனிதகுல சேவையில் புதிய பரிமாணங்களை உருவாக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
மேலும், காவேரி செவிலியர்கள் மருத்துவ மற்றும் செவிலியத் துறைகளில் நடைபெறும் புதிய முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் ‘Continuing Nursing Education (CNE)’ கருத்தரங்குகளை வடிவமைத்து நடத்துகின்றனர். கல்வியாளர்களாகவும் ஆராய்ச்சியாளர்களாகவும் திகழும் இவர்களை மேலும் தொழில்துறை தேவைகளுக்கேற்ற வகையில் உருவாக்கும் நோக்கில், விரைவில் ‘Nurse Practitioner’ திட்டங்களையும் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சி துறையிலும் காவேரி செவிலியர்கள் தங்களது தனித்துவத்தை நிரூபித்து வருகின்றனர். வழக்குக்கட்டுரைகள் (case studies) மற்றும் சொந்த ஆராய்ச்சிப் படைப்புகள் மூலம் அவர்கள் மருத்துவ இலக்கியத்தில் தங்கள் தடத்தை பதித்து வருகின்றனர்.
குறிப்பாக, காவேரி மருத்துவமனையின் அதிகாரப்பூர்வ இதழான ‘Nightingale Journal’ வழியாக, செவிலியர்களால் எழுதப்பட்ட அறிவியல் மற்றும் மருத்துவக் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. இந்திய அளவில் ஒரு மருத்துவமனை வெளியிடும் இவ்வகை சிறப்பு இதழ் இது என்பது மிக முக்கியமான முன்னெடுப்பாகும். இத்தகைய முயற்சிகள் அனைத்தும் காவேரி மருத்துவமனையின் செவிலியர்களை உயர்த்திப் பாராட்டும் உறுதியையும், சுகாதார சேவையில் அவர்கள் வகிக்கும் மையப்பங்கையும் வெளிப்படுத்துகின்றன.
Dr. Venkita S. Suresh Group Medical Director, Kauvery Hospital Editor-in-Chief, The Kauverian Medical Journal Editor-in-Chief, The Nightingale Journal
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011