‘நன்றாகத் தூங்கு, ஆரோக்கியமாக வாழு’ – இந்த வருட உலகத் தூக்க தின கருப்பொருளை இப்படி எளிமையாகச் சொன்னாலும், இதன் பின்னே மிகவும் ஆழமான மருத்துவ உண்மை இருக்கிறது. இன்று இந்தியாவில் தூக்கக் கோளாறுகள் ஓர் ‘அமைதியான தொற்றுநோயாக’ பரவிக்கொண்டிருக்கின்றன.
நகர்ப்புற மக்களில் 30 முதல் 50 சதவிகிதம் பேர் தூக்கமின்மை (Insomnia) பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களில் 10 முதல் 12 சதவிகிதம் பேருக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் (Sleep Apnea) இருக்கிறது. இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல… பிரச்னை என்னவென்றால், இவர்களில் பலர் தாங்கள் நோயாளி என்றே அறியாமல் வாழ்கிறார்கள்.
குழந்தைகளுக்கு தூக்க மூச்சுத்திணறல் வருவதற்கு முக்கிய காரணம் டான்சில், அடினாய்டு (Adenoids) வீக்கம்… இவை சுவாசப்பாதையை அடைக்கின்றன. பெரியவர்களுக்கோ உடல் பருமன், புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவை முதன்மைக் காரணங்கள்.
பெரும்பாலும் தூக்க மூச்சுத்திணறலை நோயாளிக்கே தெரிவதில்லை. கணவர் அல்லது அருகில் இருப்பவர்தான் முதலில் கவலைப்படுவார்.
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே நிபுணரிடம் ஆலோசிக்கவும்… தினமும் தூக்கத்தில் கோரமாகக் குறட்டை வருவது; தூங்கும்போது மூச்சு நின்று போவதை யாராவது கவனிப்பது; பகல் நேரத்தில் அதிக அளவு தூக்கம் மற்றும் சோர்வு; கட்டுப்படுத்த முடியாத உயர் ரத்த அழுத்தம்.
தூக்கத்தில் சுவாசப்பாதை மூடப்படும்போது, உடலுக்கு திடீரென்று ஆக்சிஜன் இல்லாமல் போகிறது. ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரம்… அதாவது 6 முதல் 8 மணி நேரம் – உடலுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் போகிறது. இதனால் இதயத் தசைகள் கடுமையாக உழைக்க நேரிடும்; மூளைக்கு செல்களைச் சரிசெய்ய நேரம் கிடைக்காது; சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்; ஹார்மோன் குழப்பம் உண்டாகி சர்க்கரை நோய் வரலாம். கட்டுப்படுத்த முடியாத உயர் ரத்த அழுத்தத்துக்கும் தூக்க மூச்சுத்திணறலே முக்கிய காரணமாக இருக்கிறது.
அதிக மன அழுத்தம், இரவு நேரம் திரை பார்ப்பது, கனமான இரவு உணவு… இவை தூக்கத்தைக் கெடுக்கின்றன. தூக்கமின்மை எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது; எடை அதிகரிக்கும்போது தூக்க மூச்சுத்திணறல் மோசமாகிறது; அது மீண்டும் தூக்கத்தை கெடுக்கிறது… இது ஒரு சுழற்சி. இதை உடைக்காமல் ஆரோக்கியம் மீளாது.
தூக்கக் கோளாறுகளை கண்டறிய Level 1 Sleep Study என்ற முழுமையான பரிசோதனை இருக்கிறது… இதுவே Gold Standard. தூக்கமின்மை, Narcolepsy, Sleep Apnea ஆகியவை வெவ்வேறு நோய்கள்; ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு பரிசோதனைகள் தேவை. நிபுணர் மூலம் துல்லியமாகக் கண்டறிந்தால் மட்டுமே சரியான சிகிச்சை கிடைக்கும்.
குறட்டை என்பது எல்லோருக்கும் சாதாரண விஷயம் இல்லை. அது ஒரு நோயாக இருக்கலாம்; உயிரையே கொல்லும் நோயாகவும் இருக்கலாம். தொடர்ந்து குறட்டைவிடுபவர்களுக்கு பகலில் கடும் தூக்கம் வரும். அப்படி வண்டி ஓட்டினால், வழியில் நடக்கும் விபத்துகள் தனி ஒருவரின் பிரச்னை மட்டுமல்ல… பொதுமக்களின் உயிரையும் பறிக்கும் ஆபத்து.
நல்ல தூக்கம் ஆடம்பரம் இல்லை… அது உடலுக்கு அவசியமான மருந்து!
இந்தியாவில் நகர்ப்புற மக்களில் 50% வரை தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறார்கள். தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலானது இதய நோய், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றின் மறைந்திருக்கும் காரணமாக இருக்கலாம். ஆகவே, குறட்டை சாதாரணம் என்று அலட்சியப்படுத்தாதீர்கள்!
• தினமும் அதீத குறட்டை • தூக்கத்தில் மூச்சு நின்றுவிடுவதாக யாராவது சொல்வது • பகலில் அதிகத் தூக்கம், சோர்வு • கட்டுப்படாத ரத்த அழுத்தம்
டாக்டர் ராமசுப்பிரமணியம் MBBS, DTCD, DNB (Pulmonary Medicine), MBBS, DTCD, DNB(Pulmonary Medicine), a Fellowship in Intervention Pulmonology and Thoracic Oncology நுரையீரல் மருத்துவ நிபுணர் காவேரி மருத்துவமனை, திருச்சி, தென்னூர்
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011