மயக்க மருத்துவத்துறை (அனஸ்தீஷியா) என்பது அறுவைசிகிச்சைகளின்போது நோயாளிகள் வலி இல்லாமல் இருக்கவும், அவை பாதுகாப்பாகச் செய்யப்படவும் உதவும் ஒரு சிறப்புப் பிரிவு.
உலக மயக்க மருத்துவ தினம் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16 அன்று கொண்டாடப்படுகிறது. இது முதன் முதலாக 1846 அக்டோபர் 16 அன்று, பொதுமக்கள் முன்னிலையில் ஈதர் மருந்தைக் கொடுத்து ஒருவரை மயக்கமடையச் செய்ததை நினைவு கூறும் நாள். இது மயக்க மருத்துவத்துறையில் ஏற்பட்ட முக்கியமான திருப்பம். இந்த நாளில் புதிய நவீனமான மயக்க மருத்துவத் துறை பிறந்ததைக் கொண்டாடுகிறோம்.
நவீன மயக்க மருத்துவத்துறை உருவாவதற்கு முன், அறுவை சிகிச்சை என்பது மிகவும் வலி நிறைந்ததாகவும், பாதுகாப்பற்றதாகவும், எல்லாரும் அதைப் பார்த்து பயப்படும்படியாகவும் இருந்தது. அதை முற்றிலும் மாற்றியமைத்தது நவீன மயக்க மருத்துவத்துறையே. அறுவைசிகிச்சைகளில் பல சிக்கலான, உயிர்காக்கும் நீண்ட சிகிச்சை முறைகள் உருவாவதற்கும் இது உதவியது.
இதன் பெயரிலேயே உள்ளதுபோல இது தற்காலிகமாக ஒருவரை முழுவதுமாக நினைவிழக்கச் செய்யும் மயக்க முறை.
இந்த முறையின்போது நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சையின்போது நடப்பது எதுவுமே தெரியாது. இது பொதுவாக பெரிய, சிக்கலான, நீண்ட அறுவைசிகிச்சைகள் செய்யும்போது கொடுக்கப்படுவது. உதாரணம்: பைபாஸ் சர்ஜரி.
உதாரணத்துக்கு… சிசேரியன் பிரசவத்துக்கு தரப்படும் மயக்க முறை. இது முதுகுத்தண்டில் ஊசி போட்டு மருந்தை செலுத்தி, கீழ் வயிற்றிலிருந்து கால்கள் வரை மரத்துப்போகச் செய்யும் முறை. இதை spinal anaesthesia என்போம்.
இன்னோர் உதாரணம்: ஒரு குறிப்பிட்ட நரம்பை மட்டும் மரத்துப்போகச் செய்வதன் மூலம் ஒரு காலையோ கையையோ உணர்வின்றி போகச்செய்யும் முறை. இதை nerve blocks என்று சொல்வோம்.
இதை local anaesthesia என்று சொல்லுவோம் (இப்படி சொல்லும்போது, சிலர், இது ஏதோ ‘லோக்கல்’ – தரமற்ற முறை என நினைக்க வாய்ப்பு உள்ளது. அது தவறு). இந்த முறைக்கு உதாரணம்: பற்களை பிடுங்குவதற்கு முன் ஈறுகளில் ஊசிப் போட்டும் முறை.
இவற்றில் முழு மயக்கமுறையில் மட்டுமே முழுதாக நினைவிழப்பு ஏற்படும். மற்ற முறைகளில் நினைவு நன்றாகவே இருக்கும். இந்த முறைகளின்போது சிலருக்கு பயத்தை, படபடப்பைக் குறைக்க மிதமான தூக்கம் வரவழைக்கும் மருந்துகள் கொடுக்கப்படுவதுண்டு.
மற்ற துறைகளைப் போலவே நவீன மயக்க மருத்துவத்துறையிலும் ஏராளமான முன்னேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதனால் இது ‘மிகவும் பாதுகாப்பானது’.
நவீன மருந்துகள், உபகரணங்கள், பயிற்சி முறைகள் –எல்லாமே, அறுவைசிகிச்சையின் போதும் மயக்க மருத்துவத்தின் போதும் ஏற்படக்கூடிய சிக்கல்களை பெருமளவு குறைத்துள்ளன.
மயக்க மருத்துவர் அறுவைசிகிச்சையின்போது நோயாளியின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு மற்றும் சில நேரங்களில் தேவைப்பட்டால் மூளையின் செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணிப்பார்.
பெரும்பாலும் மயக்க மருந்திலிருந்து வெளியே வரும்போது வாந்தி, தலைசுற்றல், தொண்டை வலி போன்ற சில தற்காலிகமான சிரமங்கள் மட்டுமே ஏற்படும்.
மிக அரிதாக சில நேரங்களில் சீரியஸான சிக்கல்கள் – அலர்ஜி, சுவாசப் பிரச்னைகள், இதயப் பாதிப்பு, நரம்புப் பாதிப்பு போன்றவை ஏற்படலாம். ஆனால், இவை ஏற்கனவே உடலில் நோய் உள்ளவர்களுக்குத்தான் வரக்கூடும். இவை நாம் அன்றாடம் காரில் அல்லது மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது ஏற்படும் அசம்பாவிதங்களைக் காட்டிலும் குறைவே.
• மயக்க மருந்துக்கு பிறகு எனக்கு மீண்டும் நினைவு வருமா? வராதா?’ • அறுவைசிகிச்சையின்போது வலி தெரியுமா?’
Dr. புத்தன் ராஜரத்தினம் MD (Anaesthesia), EDIC, IDCCM, PDFCCM தலைவர் –- கிரிட்டிகல் கேர் மெடிசன் காவேரி மருத்துவமனை, சென்னை – வடபழனி
Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet, Radial Road & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and paediatric trauma care.
Chennai Alwarpet – 044 4000 6000 • Chennai Radial Road – 044 6111 6111 • Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4077777 • Trichy – Tennur – 0431 4022555 • Maa Kauvery Trichy – 0431 4077777 • Kauvery Cancer Institute, Trichy – 0431 4077777 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 68011