Unity is our strength at Kauvery

In this era of disparity,
We are here for unity,
Like the branches of a tree we grow in different directions,
Yet the roots keep us all together.

Kauvery is our roots,
A team is not a group of people who work together but who trust each other,
Unity is our strength at Kauvery where through teamwork and collaboration,
Wonderful things can be achieved.

Kindness and courtesy are at the root of post customer service,
We believe service is the essence of humanities so at Kauvery,
We always welcome you united with a smile,
As we consider each customer as a family member who deserves nothing but the best.

rekha-sister-kway-poem

Poem by Rekha Sister,
Kauvery Hospital Chennai


பெண்

நீரூற்றாய்
நதிநீராய்
நன்சுனையாய்
அருவியாய் ஆறாய் பெருங்கடலாய்…
நீரின்றி அமையாது உலகு
நீயின்றி அமையாது உலகு.
உன்னை,
உன்னால் படைப்பென்பேன்,
உலகின் உயிர்ப்பென்பேன்
உறையா நெருப்பென்பேன்
குறையா அமுதென்பேன்
சிங்கம் என்பேன் – அங்கம்
தங்கம் என்பேன்,
பொங்கும் கங்கை என்பேன்
நம்பாதே, நம்பாதே எனை
ஒருநாளும் நம்பாதே
புனிதப்படுத்தப்பட்ட கங்கையில் தான்
பிணங்களை போட்டெரிப்பார்
புனிதப்படுத்தியே என்றும் உனை
அடிமையாய் வைத்திருப்பார்.
புனித மென்று ஏதுமில்லை
பெருமை சொல்ல ஒன்றுமில்லை – உன்னில்
சிறுமை சொல்ல யாருக்கும்
உரிமையு மில்லை
மனக் கூண்டுக்குள் கிடந்த நீ
குமைந்தது போதும்
சமைந்தவள் அடங்கியிறு – என்று
சுமந்தவளே சொன்னாலும்
பறந்து வா – புதிதாய்
பிறந்து வா, உலகை காண வா

பெண்!
அழகானவள்
பெரும் வடிவானவள்
தேன் சுவையானவள்
கொடி யிடையானவள்
எழில் தனமானவள்
மெலிர் உடலா னவள்
கதிர் விழியானவள்
கோவை கனிதான்
அவள் என்றான்
வெறும் அங்கம் மட்டுந்தான்
பெண் புகழென்றால்,
வங்கம் பொங்கட்டும் – இந்த
தரணி முங்கட்டும்
பெண்!!
கவிஞரின் ஆதிநாதம்
அவர்தம் வாழ்வின் கீதம்.
அவன்
கவிகொண்ட காதல் கூறும்
கண்கொண்ட காட்சி கூறும்
கரங்கொண்ட காமம் கூறும்
‘கவிஞன் ஏட்டில் அவள் கண்ட
சுதந்திரத்தை
நாட்டில் அவள் கண்டதில்லை’ – நல்ல
கூட்டில் அவள் வளர்ந்திருந்தால் மட்டுந்தான்
வீட்டில் அவள் குடும்பத்தரசி என்பார்.
பெயரில் மட்டுந்தான்
அரசி இருக்கும் – குடும்ப
அரசியலில் அவள் தலை
குனிந்தே யிருக்கும்
அடங்குதல் மடங்குதல் புண்ணிய மென்பார்
புண்ணியம் இங்கு ஒருபாலுக்கு நிந்திக்கப்பட்டாதா?
சேர்ந்தே அடங்குவோம்
சேர்ந்தே மடங்குவோம்
சேர்ந்தே தொடங்குவோம்
அன்பிற்கு ஒடுங்குவோம்
ஆணவத்திற்கு எதிர்குரல் ஓங்குவோம்.
‘தேனின் சொட்டே
வாழ்வின் மெட்டெ
கவிதை ஊற்றே – என்
மூச்சு காற்றே
நற்றாமறையே
நனி தமிழ்மொழிய
ே பேராற்றல் கனையே
அன்பின் சுனையே
தாய்மை உருவே
இன்பக் கருவே
ஈடில்லா இணைய
வாழ்வின் துணையே’ – எனப் போன்றும்
வாழ்வின் புகழ்ச்சிக்கு மயங்காதே
பின் இகழ்ச்சி வரும்,
அதைக்கண்டு தளராதே
‘ஆணுக்குப் பெண் இணைய
‘E – Equal E – இணையே”
கல்லுண்டாள் அவ்வை
கலை புரிந்தால் அவ்வை
கவிதை செய்தாள் அவ்வை
காப்பியம் புகழும் ஆண்களின்
தோழமை உற்றாள் அவ்வை
கடைசிவரை தனிவாழ்வு
துறவு கொண்டாள் அவ்வை
அவ்வையை மீறிய பெண்ணியம் உண்டோ
பெண்ணியம் பேச தமிழ்போல் வேறுமொழிக்கு
உரிமைதான் உண்டோ!

மதுரை கொண்ட மீனாட்சியை
தான் கொண்ட போதிலும்
ஆட்சி மீனாட்சிக்கே
சொக்க வைத்த நாதனெல்லாம்
அங்கு இடப்புறந்தான் அமர்ந்திருந்தார்
சோர்விலா இராணிதான்
வலப்புறத்தில் அமர்ந்திருப்பார்.
தமிழ் சமூகம் தாய்வழி சமூகம் என்று
சாட்சியாய் அவள் நின்றியிருப்பாள்.
கல்வி மட்டும் தவிர்த்திருந்தால் – வெறும்
கலவிக்கு இரையாகி வாழ்ந்திருப்பாள்
பெரும் மேன்மை துறந்து வீழ்ந்திருப்பாள்
வீட்டில் முடங்கி சோர்ந்திருப்பாள்.
நகரத்து பிள்ளைகளுக் கெட்டும் கல்வி
எம் கிராமத்துப் பிள்ளைகளுக்குக்
கிட்டும் எப்போது – பெண்ணின்
வெற்றிகள் விண்ணை முட்டும் அப்போது.
மகள்,
மன்னவி,
மருமகள்,
மங்கை,
மகளிர் – வார்த்தையிலும் மெல்லினம்
இவர்கள் வாழ்க்கையிலும் மெல்லினம்
வலிமை கொள்
வல்லமை கொள்
வல்லினம் கொள்
‘பெண்’ என்ற சொல்லே வல்லினத்தில்தானே
தொடங்குகிறது

ஆணின்
பொங்கி வரும் கண்ணீர்,
முடவாசம் வீசும் உமிழ்நீர்,
உடலை துறக்கும் மலசிறுநீர்
என்று
ஆணுக்கு சுரக்கும் எந்நீரும்
தீட்டல்ல,
உயிர் சுமக்கும் ஒருநீர்
தினையென எனை சுமந்த கருநீர்
மாத மொருமுறை வரும் உயிர்நீர்
தீட்டென்றால்,
திட்டுங்கள் ‘தமிழை’
இச்சொல்லை ஏற்றதற்கு.
உன் உதிரம் தீட்டு
உயிர் வரும் வழியெல்லாம் தீட்டு
என்றால், இவ்வுலகமே
தீட்டுத்தானே!
தாய்மை பெரும் வரமென்பார்.
வேண்டிப் பெருதல் தாய்மையில்லை
உன் உடல் உன் உரிமை
தாய்மை வெறும் வரம் அல்ல
நீ இவ்வுலகிற் கிடும் பெரும் உரம்.
நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதியுண்டு,
வீட்டிலே அவ்வேலை செய்ய ஒரு சாதியுண்டு.
புரியாமலா பெயர் வைத்தார்
பெண் சாதி யென்று?
கேட்டால் சொல்வர் – இது
கலாச்சார நீதி யென்று.

dr-s-kathir-azhagan
Dr.Kathir2019-09-23%2011:13:20am

Poem by Dr. S. Kathir Azhagan
Consultant Orthopedic Surgeon
Kauvery Hospital, Chennai