Poem Dedicated to Doctors on National Doctor’s Day
Poetry Corner
National Doctors’ Day!
நான் கடவுளும் அல்ல
மாயம் மந்திரம்
என்னிடம் இல்ல ….
காயம் செய்யும் கயவனும் அல்ல
காலனிடம் போர் செய்யும் மருத்துவன் நானே ….
உயிரின் உன்னதம் காக்க
குடும்பத்தை மறந்து
விடுமுறை துறந்து
விடியல் தெரியா தூக்கம் கலைந்து
வலிபோக்கும் வைத்தியன் நானே ….
நான் கடவுளும் அல்ல
மாயம் மந்திரம்
என்னிடம் இல்ல ….
காயம் செய்யும் கயவனும் அல்ல
காலனிடம் போர் செய்யும் மருத்துவன் நானே ….
பெருந்தொற்று உயிர்களை களைய
மருந்தின்றி மக்களை காக்க
இங்கே மருத்துவர்கள் உயிர் கவசமாக
அறிவியல் கொண்டு
பெருந் தொற்றை வென்று
வெற்றி களம் கண்ட அறிஞனும் ஆனேன்
நான் கடவுளும் அல்ல
மாயம் மந்திரம்
என்னிடம் இல்ல ….
காயம் செய்யும் கயவனும் அல்ல
காலனிடம் போர் செய்யும் மருத்துவன் நானே ….
இளமையில் முதுமை பிறந்து
தூக்கம் மறந்து
கல்லூரி கடந்து
மக்கள் சேவை ஒன்றே நினைந்து
மகிழ்ச்சியானேனே …
நான் கடவுளும் அல்ல
மாயம் மந்திரம்
என்னிடம் இல்ல ….
காயம் செய்யும் கயவனும் அல்ல
காலனிடம் போர் செய்யும் மருத்துவன் நானே ….
Dedicated to All the Doctors.
Poem by Dr. Sundar Chidambaram
Senior Consultant – Interventional Cardiologist
Kauvery Hospital, Chennai