Maa Kauvery Breast Clinic - 100% Lady Breast Specialists

Maa Kauvery Breast Clinic in Trichy | மார்பக ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு

ஒரு பெண் சிறு பிள்ளையாக இருக்கும் வயதிலிருந்து பருவம் அடைந்து பெண்ணாக வளர்ந்து பெரியவளாகும் வரை அம்மாவுடன் அவளுக்கான நெருக்கத்தை வார்த்தைகளால் சொல்லமுடியாது.

இன்றைய காலகட்டத்தில் அம்மா வெறும் அம்மாவாக இல்லாமல் நல்ல தோழியாகவும் இருப்பது மிகவும் அவசியமானது. இத்தகைய சூழ்நிலையில் தாயைப்போல் ஒரு பெண்ணிற்கு மனம் விட்டு பேச வேறு யார் கிடைப்பார்கள்? அதுவும் தன் உடலை பற்றி, உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றி பேச அம்மாவிடம் பேசுவது போல் வேறு எவரிடம் பேசமுடியும்?

ஆகையால் தான் உங்கள் மார்பக பிரச்சனைகளை பற்றி பேச நாங்கள் 100% லேடி மார்பக ஸ்பெஷலிஸ்டுகள் கொண்ட ஒரு கிளினிக்கை தொடங்கியுள்ளோம். இனி நீங்கள் உங்கள் மார்பக பிரச்சனைகளை தயக்கமின்றி, கூச்சமின்றி, பயமின்றி உங்கள் அம்மாவிடம் பேசுவதுபோல் இந்த அம்மாவிடமும் பேசலாம்.

எண். 27, அலெக்ஸாண்டிரியா சாலை, கண்டோன்மென்ட், திருச்சி–620001.
போன்: +91 0431 4077777

மார்பக ஆரோக்கியம் மற்றும் பொதுவான வழிகாட்டுதல்

மார்பக ஆரோக்கியம் மற்றும் பொதுவான வழிகாட்டுதல்

1. மார்பகத்தை அறிவோம்

வயது, ஹார்மோன் மாற்றங்களால் மார்பகங்களின் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. உங்கள் மார்பகத்தின் இயல்பான நிலையை அறிந்திருப்பது மிக முக்கியம்.

2. மார்பக வலி

சுழற்சி முறை வலி மாதவிடாயுடன் தொடர்புடையது, பெரும்பாலும் தானாகவே சரியாகும். சுழற்சியற்ற வலி தொடர்ந்தால் மருத்துவரை அணுகிப் பரிசோதிக்க வேண்டும்.

3. மார்பகக் கட்டிகள்

பெரும்பாலான கட்டிகள் புற்றுநோய் அல்லாதவை (Benign). எனினும் மேமோகிராம் அல்லது அல்ட்ராசவுண்ட் மூலம் உறுதிசெய்ய வேண்டும்.

4. காம்பு திரவம் வெளியேறுதல்

திரவத்தில் இரத்தம் கலந்திருந்தால் அல்லது தானாகவே கசிந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும்.

சுய பரிசோதனை செய்யும் முறை - Breast Self-Examination

5. சுய பரிசோதனை செய்யும் முறை (BSE)

மாதம் ஒருமுறை சுய பரிசோதனை செய்ய வேண்டும் (மாதவிடாய் முடிந்த 2–3 நாட்களுக்குப் பிறகு).

  • கண்ணாடி முன் நின்று கைகளைப் பக்கவாட்டில் வைத்துப் பார்த்தல்.
  • கைகளை தலைக்கு மேல் உயர்த்திப் பார்த்தல்.
  • விரல் நுனிகளால் வட்ட வடிவத்தில் அழுத்திப் பரிசோதித்தல்.
  • அக்குள் பகுதியை ஆய்வு செய்தல்.

தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும் (Myths vs Facts)

Myths vs Facts about Breast Health
தவறு
  • கட்டிகள் இருந்தால் அது கண்டிப்பாக புற்றுநோய்.
  • பெண்களுக்கு மட்டுமே புற்றுநோய் வரும்.
  • குடும்பத்தில் வரலாறு இருந்தால் மட்டுமே வரும்.
  • பிரா (Bra), டியோடரண்ட் உபயோகிப்பதால் வரும்.
  • மேமோகிராம் (Mammogram) பாதுகாப்பற்றது.
உண்மை
  • பெரும்பாலான கட்டிகள் ஆபத்தில்லாதவை (Benign).
  • ஆண்களுக்கும் மார்பகத் திசுக்கள் உள்ளதால் வரக்கூடும்.
  • 3-ல் 2 பங்கு நோயாளிகளுக்குக் குடும்ப வரலாறு இருப்பதில்லை.
  • இதற்கு எந்த அறிவியல்பூர்வ ஆதாரமும் இல்லை.
  • மிகவும் குறைந்த அளவே கதிர்வீச்சு என்பதால் மிகவும் பாதுகாப்பானது.

மார்பகப் புற்றுநோய் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை

புற்றுநோய்க்கான எச்சரிக்கை அறிகுறிகள்

புற்றுநோய்க்கான எச்சரிக்கை அறிகுறிகள்

  • மார்பகத்தின் அளவு, வடிவம் அல்லது தோலின் அமைப்பில் மாற்றம்
  • தோலில் பள்ளம் விழுதல் (Dimpling) அல்லது புடைப்புகள்
  • காம்பு உள்நோக்கி இழுக்கப்படுதல் (Pulled-in nipple)
  • காம்பைச் சுற்றி தடிப்பு, அலர்ஜி அல்லது சிவத்தல்
  • காம்பிலிருந்து இரத்தம் கலந்த கசிவு
  • அக்குள் பகுதியில் வீக்கம் அல்லது கட்டிகள்

ஆபத்துக் காரணிகள்

மாற்ற முடியாதவை: வயது & பாலினம், ஹார்மோன் தாக்கம், மரபியல்.
மாற்றக் கூடியவை: உடல் பருமன், மது & புகைப்பிடித்தல், உணவு முறை.

லம்பேக்டமி

ஆரம்ப கட்ட, சிறிய கட்டி கொண்ட நோயாளிகளுக்கு – முழு மார்பகத்தையும் நீக்காமல் கட்டியை மட்டும் அகற்றும் அறுவை சிகிச்சை.

மாஸ்டெக்டமி

புற்றுநோயின் நிலை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து முழு மார்பகத்தையும் நீக்கும் முறை; தேவைப்படின் மார்பக மறுசீரமைப்பும் செய்யலாம்.

அறுவை சிகிச்சைக்குப் பின் பராமரிப்பு

கட்டு 3–5 நாட்கள் உலர்ந்திருக்க வேண்டும் (3 வாரங்களில் காயம் ஆறும்); பக்கவிளைவு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.

25–35% பெண்களின் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் பங்கு
4 நிமிடம் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் இந்தியாவில் ஒரு கண்டறிதல்
30–50 வயதுடைய பெண்களுக்கு அதிகரிக்கும் ஆபத்து
100% ஆரம்பகால பரிசோதனையால் தடுக்கக்கூடியது
Maa Kauvery Breast Clinic

40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை ‘மேமோகிராம்’ (Mammogram) பரிசோதனை செய்துகொள்வது மிகவும் முக்கியம். மார்பகத்தில் ஏதேனும் மாற்றம் தெரிந்தால் உடனடியாகத் தொடர்புகொள்ளவும்.

அப்பாயிண்ட்மெண்ட் பதிவு செய்ய

    Watch & Learn

    Breast Pain: When You Should See A Doctor – Dr. Megha Answers

    Not All Breast Lumps Are Cancerous – Breast Cancer Awareness

    Maa Kauvery Breast Clinic

    044 3140 7777

    100% லேடி மார்பக ஸ்பெஷலிஸ்டுகள் – தயக்கமில்லாமல் இன்றே பேசுங்கள்.

    அப்பாயிண்ட்மெண்ட் பதிவு செய்ய
    Kauvery Hospital