என் செவிலிய பணி

Devi*

Staff Nurse, Kauvery Hospital, Vadapalani, Chennai, Tamil Nadu

*Correspondence

விட்டு செல்ல நினைத்தும் விலக முடியவில்லை

நான் என் பணியின் மீது கொண்ட காதலா

இல்லை என் செவிலிய பணி என் மீது கொண்ட காதலா

விதியா, இல்லை சதியா யார் அறிவார்

உடல் காயங்களோடு என்னை தேடி வரும்

நோயாளிகளுக்கு நான் காயம் ஆற்றினேன்

என் மனக்கவலைகளையும், காயங்களையும்

யார் ஆற்றுவார்

அத்தனை சுகம் என் செவிலிய பணி

அன்னையின் மடியானது

என் மனக்கவலையும், காயங்களையும்

பனி போல் மறைத்திடும்

ஒரு மனிதனின் காயங்களையும், நோயையும்

போக்கி அவன் உதட்டில் கண்டு ரசிக்கும்

சிறு புன்னகையில் உள்ளது

வாழ்வின் சாதனையும்

நம் பிறப்பின் அர்த்தமும்!!

Kauvery Hospital