GK. Balasubramani

Senior Physiotherapist, Kauvery Hospital, Salem

*Correspondence: [email protected]

ஊசியின் மகத்துவம்

யாரோடும்

எதோடும்

ஒப்பிட முடியாதது

குழந்தையின் ஸ்பரிசம்

மட்டுமல்ல

ஊசியும் தான் !

தலை வலி முதல்

தலைவிதி வரை

தீர்மானிக்கும்

சக்தி

ஊசிக்கு உண்டு !

பிறப்பின் முதல் துளிக்கும்

இறப்பின் இறுதி மூச்சிற்கும்

ஊசிக்கும்

நிறைய சம்மந்தம் உண்டு !

மக்களின் மனோ மந்திரி

ஊசிதான் !

கடவுளை விட

காய்சல் வந்தால்

ஊசி மீதுதான்

நிறைய நம்பிக்கை

மக்களுக்கு !

ஊசியின் மகத்துவம்

தெரியுமா ?

உங்களுக்கு ?

உங்கள் உடம்பில்

ஒரு முறையாவது

ஊசி உரசிவிட்டுப் போனால் தான்

உங்களால்

உலகில் உருப்படியாய்

வாழ முடியும் !

ஊசியால்

ஆக்கவும்முடியும்

அழிக்கவும்முடியும் !

இவன் சாதரணமானவன்

அல்ல

உங்கள் ரத்தத்தில்

புகுந்து

ரசவதமாய் மாறுவான் !

நோய்கிருமிகளை

தேடிப்பிடித்து

மாங்குமாங்கு என

வெளுத்தெடுப்பான்!

உங்கள் பாஷையில்

சொல்ல வேண்டுமானால்

மருத்துவமனை -செல்போன்

டாக்டர் -சிம்கார்ட்

ஊசிதான் -மெயின் பாலன்ஸ்.

பாலன்ஸ் இல்லாமல்

பேச முடியாது !

ஊசி இல்லா

மருத்துவமனை

ஊறுகாவிற்கு கூட

உதவாது !

உயிரை கொடுப்பதிலும்

சரி

உயிரை எடுப்பதிலும்

கடவுளுக்கு நிகர்

இந்த உலகில் ஊசி மட்டும் தான் !

நீயார் !

உனக்குள் என்ன ?

என்பதை பற்றி

ஆராய உலகில்

இரண்டே விஷயம் தான் !

ஒன்று கடவுள் !

மற்றொன்று ஊசி !

நம்ப முடிய வில்லையா?

பரிசோதனை கூடத்திற்கு

போங்கள்

சரியென தெளிவிர்கள்.

அவன் இன்றி

ஓர் அணுவும் அசையாது !

இவன்

இன்றி ஒரு

அறுவை சிகிச்சை கூட

நடக்காது !

இதுவும் கடவுள் தான் !

குழந்தை கொடுப்பதில்

மருத்துவர்களால்

உருவாக்க பட்ட

செயற்கை கடவுள் !

இவன் நாடி

நரம்புகளின் நண்பன் !

நலமடைய வைப்பதில்

தலைவன் !

பேர் வாங்கி

தருவதில்

கவிஞருக்கு பேனா முனை

மருத்துவருக்கு

ஊசி முனை !

அறுவை சிகிச்சையின்

அஸ்திவாரம் ஊசி !

பரிசோதனை கூடத்தின்

பங்குதாரி ஊசி !

மருத்துவர்களின்

மகத்துவம் ஊசி !

மாத்திரைகளின்

மன்னவன் ஊசி !

ஊசியை நீ நேசி !

அப்போதுதான் உன்

வாழ்வு இனிக்கும் என்பதை

யோசி !

ஆன்மிகத்தில் சொல்ல

வேண்டுமானால் ,

ஊசி -விநாயகர் !

அறிவியலில் சொல்ல வேண்டுமானால்

ஊசி -அமீபா!!!!!!!!!!!!!

Kauvery Hospital