தயக்கம் தவிர்

பிறர் என்ன நினைப்பார்களோ

என்ற பயத்தில்

மனதில் உள்ள எண்ணங்களை

வெளிப்படுத்தப் பலருக்குத் தயக்கம்..

மனைவியுடன்

நிறைய பேச ஆசை

ஆனால் ஒரு தயக்கம்..

பிள்ளைகளிடம்

பேச நிறைய விஷயம்

ஆனாலும் இயலாது..

எனக்குத் தெரிந்தவரை

காதலர்கள்

காதல் மயக்கத்தில் பேசுவார்கள்..

ஆனால்

இருவரும் ஒருவருக்கொருவர்

உண்மையைப் பேசத் தயங்குவார்கள்..

சக பணியாளர்களிடம்

அதுவும் உயரதிகாரிகளிடம்

மரியாதை கருதி

பேசத் தயங்குவது பலரது பலவீனம்..

நண்பர்களிடம்

மனம் விட்டுப்

பேசுவதற்குக் கூட

தயங்கும் மனிதர்கள் உண்டு..

பேச வேண்டிய இடத்தில்

பேசாதவற்றை

முன்பின் தெரியாத

பொது வெளி மனிதர்களிடம்

பேசிக்கொண்டிருப்பார்கள்..

தங்களது உணர்ச்சிகளை

ஊறுகாயாக ஊறப்போடுவார்கள்..

தயங்காமல்

மனம் விட்டுப்பேசுங்கள்..

உணர்ச்சிகளை

வெளிக்காட்டாமல்

மூடி மறைத்தால் மன இறுக்கம்..

நாளடைவில் அதுவே மன அழுத்தம்..

தயக்கம் தவிர்!

Balasubramani

GK. Balasubramani

Senior Physiotherapist