மருத்துவாலயம்

மனக்குறை தீர்க்க ஆலயம் செல்வார் பக்தர்கள்,

உடல் குறை நீங்க மருத்துவாலயம் செல்வார் நோயாளிகள்.

பக்தர்கள் நலம் நோய் நீங்கிய பின் மருத்துவர்களை சாமியாக

தரிசிப்பார்கள்,

ஆக நம் உயிர் காக்கும் மருத்துவரை வணங்குவோம்,

நமக்கு சேவை செய்யும் செவிலியரை போற்றுவோம்.

நோயாளியின் கண்ணுக்கு மருத்துவர்களும், செவிலியர்களும், துணை

மருத்துவர்களும் குலதெய்வமாக தெரிவார்கள்.

சமூக சேவை நிறுவனங்களின் தொண்டு மனித குலத்திற்கு கிடைத்த வரம்.

மனிதனின் நலம் காக்க உருவானது மருத்துவ விஞ்ஞானம்.

பணம் தாண்டியும் மனித உயிர் காக்கும் மருத்துவாலயம்.

சுயநலம் பாராமல் நேரங்காலம் பாராமல் நாட்டை காப்பாற்றுபவர்

இராணுவ வீரர்கள், அதற்கு இணையாக மனித குலத்தை காப்பவர்

மருத்துவர்கள்.

மருத்துவர்கள் இல்லாவிடிலும்

நோயாளிகளுக்கு சேவை செய்யும் தாய்கள் செவிலியர்கள்.

ஏழைகளின் ஊட்டி ஏற்காடு,

ஏழை நோயாளிகளின் மருத்துவமனை எங்கள் காவேரி.

இன மத பேதமின்றி சேவை செய்யும் மருத்துவம்,

மக்களின் நம்பிக்கைக்கு எங்கள் காவேரி மருத்துவாலயம்.

Balasubramani

GK. Balasubramani

Senior Physiotherapist