காவேரித்தாய் – 4

தெய்வம் வந்தது காவேரித்தாய் உருவில்,

நம்மை முதலில் பார்த்தால் அன்னையின் கருவில்.

நான் பிறந்தவுடன் முதலில் தொட்ட இறைவி,

காவேரித்தாய்யே மனித இனத்தின் புண்ணிய பிறவி…!

நோயாளிகளின் நலனை தருவி, நிக்காமல் இயங்கும் கருவி.

இரவு பகல் கண்விழித்து, வந்தவருக்கு மதிப்பளித்து.

நோயாளிக்கு மருந்தளித்து,

அவர்களுக்கு மறுவாழ்வு தந்துளித்து.

மனம் திறந்து, பசி மறந்து

நிற்காமல்,

இயங்கும் மாந்தருள் தெய்வம் இவள்.

இவள் நிதமும் இன்பத்தை நிறுத்தி,

கடமையை உயர்த்தி உடலை வருத்தி.

காலம் தோறும் கண்விழித்துக் காக்கும்,

கருணையின் வடிவம் இவள்.

காவிரித்தாய் பாதம் தழுவி

நிதமும் தொழ தொடங்கி,

சிரம் தாழ்த்தி; கரம் உயர்த்தி

இம்மாந்தருள் தெய்வத்தை வணங்கிடுவோம்.

Balasubramani

GK. Balasubramani

Senior Physiotherapist.