Poem – அம்மா!!!

அம்மா!!!

அழகானவள்…
அன்புடையவள்…
இன்பத்தை மட்டுமே எனக்கென பரிசளித்தவள்…
ஈன்ற நாள்முதல் இன்று வரை முதல் நாள் போலவே என்னை நடத்துபவள் உணவுக்காய் என்னை ஏங்க விடாதவள்…
ஊர்மெச்ச நான் இருக்க தன்னை அர்ப்பணித்தவள்…
என்றும் என்னை நேர்வழியில் நடத்துபவள் …
என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என நம்பிக்கை ஊட்டுபவள்…
ஏணியாய் எனக்காக  மாறியவள்…
ஐ என்றால் அழகாம்..,அதற்கான ஆதாரம் அவள்…
ஒழுக்கத்தின் மரு  உருவானவள்…
ஓயாது எனக்காய் உழைப்பவள்…
ஒவ்வொருவர் கைவிடும் வேளையிலும் உன் இன்முகமே என்னைத் தேற்றியது…
அஃதே போதும் அம்மா எனக்கு!!!

இரம்யா ராஜா

Kauvery Hospital, Salem

Kauvery Hospital