தாயும் சேயும்

Daniel*

CTICU, Kauvery Hospital, Vadapalani, Chennai, Tamil Nadu

*Correspondence

நீ பேசும் மழலைப் பேச்சு கேட்டு,

நேரம் காலம் ஓடோடி போச்சு-என்

நெஞ்சு சொல்லும் பஞ்சுள்ளம் உனை

கொஞ்சும் எல்லை மிஞ்சி கொஞ்சினேன்.

தரையில் தவழ்ந்து கை கால் அசைத்ததே,

கண் குளிர நீ எனக்கு தந்த காட்சி.

நித்தம் உனை ஏந்தி கொண்டு நிலாச்சோறு ஊட்ட ஆசை,

சின்ன சிட்டு உன்னை சிங்காரித்து சீர் தூக்கி பார்த்தேன் இமையத்திலே..

தொல்லைகள் தந்தாலும்

பிள்ளையவன் நீ தானே,

குறும்புகள் செய்யும்

மலரும் அரும்பு நீ தானே…

தொப்புள் கொடி உறவே,

உன்னை தொலைப்பேனோ. இல்லை மறப்பேனோ…

Kauvery Hospital