காவேரி-வடபழனி

Justal Hency*

Incharge Nurse, Kauvery Hospital, Vadapalani, Chennai, Tamil Nadu

*Correspondence

மூன்றாம் ஆண்டு தீபம்

வடபழனியில் ஒரு காவேரி மருத்துவமனை

உயிருக்கு ஒரு நம்பிக்கை என்று தொடங்கப்பட்டது

மூன்று வருடம் 1095 நாட்கள் 26000 மணி நேரம்

ஒவ்வொரு நொடியும் உயிர்காக்கும் போராட்டம்

மூன்று வருட வசந்தம் கடந்தாய் , வடபழனி காவேரி மருத்துமனையே .

மூன்றுவேளை கண் இமைப்போல் காத்தாய் உயிர்களை ,

அழுகையை ஆறுதலாய் மாற்றினாய்,

வலியை வரமாய் மாற்றினாய்,

மரணத்தின் வாசலில் நின்ற பல உயிர்களை மீட்டு தந்தாய் ,

ஸ்டெதஸ்கோப் கேட்டது இதய துடிப்பை

காவேரி மருத்துவமனை கொடுத்தது எங்கள் அனைவரின் எதிர்கால நம்பிக்கையை.

மரணத்தின் கடைசி நொடியில் இருப்பவரையும் கடைசி முயற்சி என்று சொல்லி உயிரை

திருப்பி கொடுத்த மருத்துவர்கள் .

இதயம் போல் நிற்காமல் துடிக்கும் செவிலியர்கள்

கண்கள் போல் உடம்பிற்க்கு உள்ளால் என்ன? என காட்டும் ரேடியோலஜி , லேப் , பிளட் பேங்க் துறைகள்.

வயிற்றுக்கு மருந்தை உணவாக தரும் பார்மசி மற்றும் உணவியல் நிபுணர்

நுரையீரல் போல் சுத்தமாக வைத்திருக்கும் ஹவுஸ் கீப்பிங் .

கரங்கள் போல் எல்லாவற்றையும் ஒன்றிணைக்கும் பயோ -மெடிக்கல், மெயிண்டனென்ஸ் துறை .

கால்கள் போல் எல்லாவற்றையும் தாங்கி நிற்க்கும் அட்மின் டீம்

கல்லீரலை போல் நச்சுக்களை நீக்கி நல்வழிபடுத்தும் HR டீம்

நமது காவேரி வடபழனி மருத்துவமனையில் மூளையாய்

செயல்பட்டு பல முன்னேற்ற முடிவுகளை எடுக்கும் Dr. ஐயப்பன் சார்

பில் கட்ட காசு இல்லனு அழுதவங்க கிட்ட முதல்ல உயிர்  காப்போம்  என்று ஆறுதல் உடன் நம்பிக்கை கூறி நமது வடபழனி காவேரி மருத்துவமனையின் முதுகு எலும்பாய் திகழும் நிர்வாக இயக்குனர் திரு . கிங்ஸ்லி சார்

மருத்துவம் மட்டும் அல்ல மனிதமும் வளர்த்தீர்கள் பல ஆயிரம் உயிரை காத்த தியாகம்  இங்கு அமையதியாய் தொடருதே .

மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன இந்த வடபழனி காவேரி மருத்துவமனையின் முத்திரை பதிந்து விட்டது மக்களின் நெஞ்சில் நம்பிக்கையை விதைத்தது.

மருத்துவ சேவையில் உயர்ந்து விட்டது.

வலிகள் சுமந்தவந்தவர்களின் முகத்தில் புன்னகையை பூக்க வைத்தோம்!

இரவும் பகலும் பாராமல் இங்கு இமைபோல் பல உயிரை காத்தோம் .

மருத்துவர்கள் , செவிலியர்கள் , பிறத்துறை ஊழியர்கள் அனைவரும் இணைந்தே இச்சாதனை செய்தோம் .

தெய்வம் தந்த பாக்கியத்தால் நிறைவுடனும் மகிழ்வுடனும் வாழும் நாம்

உழைப்பெனும் விதை ஊன்றி

அர்ப்பணிப்பு என்னும் நீரூற்றி

ஏற்றங்கள் பல கண்டு

இடறல்கள் பல வென்று

விருதுகள் பல சூடி

நற்பெயர்தனை  நிலைநாட்டி இனி வரும் காலங்கள்

யாவும் முன்னேற்ற பாதையில் பல நூறு ஆண்டுகள் இறைஆசியுடன் தொடர்ந்து இணைந்து பயணிப்போம்.

இன்பமாய் அமையட்டும் .

வாழ்த்துக்களுடன் நன்றி .

Kauvery Hospital