வாழ்வியல் அனுபவம்

வாழ்க்கை எல்லோருக்கும் நிறைவாய்

இருக்கிறது என்று எண்ணி விடாதீர்.

ஒருவரிடம் வீடு இருக்கும்,

ஆனால் நிம்மதியான தூக்கம் இருக்காது…

ஒருவருக்கு அழகான மனைவி இருப்பாள்,

அவளோ பெரும் சண்டைக்காரியாக இருப்பாள்…

ஒருவருக்கு வீடு நிறைய பிள்ளைகள் இருக்கும்,

ஆனால், வருமானமோ பற்றாக்குறையாக இருக்கும்…

ஒருவருக்குப் பிள்ளை இல்லாவிட்டாலும்,

வசதியால் வீடு நிரம்பி இருக்கும்…

ஒருவருக்குச் சாப்பிட ஆசை இருக்கும்,

ஆனால் உணவு இருக்காது…

ஒருவருக்கு விரும்பிய உணவு கிடைக்கும்,

ஆனால் சாப்பிட முடியாத அளவு நோய் இருக்கும்…

இளம் வயதில் நிறைய நேரமும் உடலில் தெம்பும் இருக்கும்,

ஆனால் பணம் பற்றாக்குறையாக இருக்கும்…

நடுத்தர வயதில் உடலில் தெம்பும், பணமும் இருக்கும்,

ஆனால் நேரம் இல்லாமல் இருக்கும்…

வயதான காலத்தில் நிறைய நேரமும், பணமும் இருக்கும்,

ஆனால் உடலில் தெம்பு இல்லாமல் இருக்கும்…

இளமையில் அழகைத்தேடி அலைபவர்கள்

அறிந்து கொள்ளுங்கள்…

முதுமையில் அன்புதான் துணையாக இருக்கும்.

இப்படித்தான் உலகம்!

GK. Balasubramani

Senior Physiotherapist.

Kauvery Hospital